மலையக எழுத்தாளர் மு.சிவலிங்கம் கௌரவம் பெறுகிறார்.
இலங்கையின் மூத்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் முகமாக கொடகே நிறுவனமும் இலங்கை வானொலியும் இணைந்து நடாத்தும் விருது வழங்கும் விழா எதிர்வரும் 2018 - ஜுன் மாதம் 23ஆம் திகதி பி. ப. 12.00 மணிக்கு பாராளுமன்ற சபாநாயகர் கெளரவ. கரு ஜெயசூரிய அவர்களின் தலைமையில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன குமாரதுங்க உள்ளக அரங்கில் நடைபெறும்.
இவ்விழாவில் பல மூத்த சிங்கள எழுத்தாளர்களுடன் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களும் கெளரவிக்கப்படவுள்ளனர்.
இவ்வருட கொடகே யின் மூத்த எழுத்தாளர்கள் கெளரவிக்கும் விழாவில், திருமதி. புர்கான் B. இப்திகார், திரு. மு. சிவலிங்கம், திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) ஆகியோர் கெளரவிக்கப்படுவார்கள்.
அனுசரணை:
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
கொடகே சகோதரர்கள் (பிரைவட்) லிமிடெட்
நன்றி : கவ்வாத்து பேஸ்புக் பக்கம்
#முசிவலிங்கம் #மலையகம் #இலங்கைஒலிபரப்புகூட்டுத்தாபனம் #கொடகே #MSIVALINGAM #MALAIYAGAM #UPCOUNTRY #SLBC #KODAGE #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்