பிக் பாஸ் தமிழ் - 02 | நாள் 08 | வெங்காயத் தலைவி!

ஏழாம் நாளான ஞாயிறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்களுடன் கலகலப்பாக உரையாடினார். எதற்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. மும்தாஜை வெளியேற்றுவது போல கொஞ்சம் போக்குக் காட்டி பின்னர் இவ்வாரம் வெளியேற்றம் இல்லை என அறிவித்தார். 

போட்டியாளர்கள் கமலின் திரைப்பட காட்சிகளை நடித்துக் காட்டுகின்றனர். கமல் பாடல் பாடுகிறார். டேனி ஒவ்வொருவருக்கும் பட்டப் பெயர் வைக்கிறார். கமல் சில சொற்களைக் காட்டி அவற்றுக்குப் பொருந்தும் நபர்களின் பெயர்களைக் கேட்கிறார். இனிய நிகழ்வாக பிக் பாஸ் ஞாயிறு மேடை அமைகிறது. 

ஏழாம் நாள் இரவில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக ரகசிய அறைக்கு அழைத்து இந்த வீட்டில் யார் இருக்கக் கூடாது, என்ன காரணம் என்று பிக் பாஸ் கேட்கிறார். அதிகமானோர் நித்யாவின் பெயரைச் சொல்கின்றனர். ஞாயிறு பெரிய பஞ்சாயத்துகள் எதுவும் இல்லாத நிலையில் விளக்கு விரைவாகவே அணைக்கப்பட்டு விடுகிறது. 



எட்டாம் நாள் காலை 'எங்க வீட்டு குத்து விளக்கு' பாடலுடன் விடிகிறது. காலையில் வீட்டில் இருந்த உணவுப் பொருட்கள் எதுவும் இல்லை. இரவே பிக் பாஸ் உணவுப் பொருட்கள் அனைத்தையும் எடுத்து விடுகிறார். ஆகவே போட்டியாளர்களுக்கு காலை உணவு இல்லது போகிறது. 

ஆகவே உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக போட்டி ஒன்றை வைக்கிறார். இரண்டு ஆண்கள் கொண்ட ஒரு அணியும் இரண்டு பெண்கள் கொண்ட ஒரு அணியுமாக இரண்டு அணிகள் உருவாக்கப்பட வேண்டும். இரண்டு அணிகளுக்கும் தலா 4000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு அணிகள் தவிர்ந்த ஏனைய போட்டியாளர்கள் அணிகளாகப் பிரியத் தேவையில்லை. 

முதலில் சென்றாயனும் டேனியும் பிக் பாஸ் சந்தைக்கு பொருட்கள் வாங்கச் செல்கின்றனர். அடுத்து மமதியும் மும்தாஜும் செல்கின்றனர். இவர்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டுள்ள அதே நேரம் ஏனைய போட்டியாளர்கள் புறம் பேசிக்கொண்டிருக்கின்றனர். 

போட்டியாளர்கள் கொள்வனவு செய்த பொருட்கள் களஞ்சிய அறையில் வைக்கப்படும். அவற்றை ஏனைய போட்டியாளர்கள் சரிபார்க்க வேண்டும். எந்த அணி ஒரு நாளைக்கு வீட்டிற்கு தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளது என பார்க்க வேண்டும். சரியெனத் தேர்ந்தெடுக்கப்படும் அணி கொள்வனவு செய்த பொருட்கள் மட்டுமே வழங்கப்படும். மற்றைய அணி கொள்வனவு செய்ததைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். சென்றாயன் மற்றும் டேனி கொள்வனவு செய்த பொருட்களே தேர்வு செய்யப்படுகின்றன. 

மாலையில் ஜனனியின் தலைவர் பொறுப்பு முடிவுக்கு வருகிறது. ஏழாம் நாள் மாலையில் இந்த வீட்டில் யார் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என போட்டியாளர்களிடம் கேட்ட போது பெரும்பாலானோர் நித்யாவையே குறிப்பிட்டனர். ஆகவே போட்டியாளர்களின் கருத்தை மாற்றவும் நித்யாவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கவும் பிக் பாஸ் இரண்டாம் வாரத்துக்கான தலைவராக நித்யாவைத் தேர்ந்தெடுக்கிறார். 

இரவு ஏழு மணிக்கு இந்தவாரம் யாரை வெளியேற்ற வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெறுகிறது. நித்யா தலைவர் என்பதால் அவரை பரிந்துரைக்க முடியாது. அதன் படி இந்த வாரம் பொன்னம்பலம், மும்தாஜ், அனந்த் மற்றும் மமதி ஆகிய நால்வரும் வெளியேற்றத்திற்காகப் பரிந்துரைக்கப்படுகின்றனர். 

இரவு 11.15க்கு வீட்டின் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. கடந்த வார வெங்காயப் போரின் மூலவரே இந்தவாரத் தலைவியாகியிருப்பது பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். 

#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #நித்யா #வெங்காயப்_போர் #மும்தாஜ் #பொன்னம்பலம் #BiggBoss #VivoBiggBoss #BiggBossTamil #VijayTV #Mumtaz #Ponnambalam #SIGARAMCO #சிகரம் 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!