துக்கமென்ன துயரமென்ன? எங்கிட்ட சொல்லு சொல்லு ....!
பெண்: துக்கமென்ன துயரமென்ன?
எங்கிட்ட சொல்லு சொல்லு ....!
(துக்கமென்ன)
கஷ்டமிந்த வாழ்க்கையில
யாருக்கிங்கு இல்ல... இல்ல..?
ஒனக்கென நானிருக்க
எனக்கென நீயிருக்க
உள்ளுக்குள்ள வச்சு வெதும்பிட
வேணா எம் மாமா... எம் மாமா....
(துக்கமென்ன)
ஆண்: சொந்தம் விட்டு மந்தையில
நின்ன கத சொல்லட்டுமா?
பெத்தவள வேதனையில்
விட்ட கத சொல்லட்டுமா?
பெண்: அப்பஞ் சொல்லு ஆறுதலு
அத்தனையும் நாந் தருவேன்
பச்ச மண்ணா நீயழுதா
தாய் மடியா நானிருப்பேன்
ஆண்: தூக்கி என்ன வளத்த சொந்தம்
தூரமென ஆனதம்மா
பெண்: தொப்புள் கொடி அத்தத தான்
சொந்தம் விட்டுப் போயிடுமா?
ஆண்: ஏனிந்த பாடு?
தாங்காது கூடு
பெண்: காலம் இனி மாறும் எம் மாமா
(துக்கமென்ன)
(ஒனக்கென)
(துக்கமென்ன)
ஆண்: காகிதத்தில் கப்பல் கட்டி
மண் தரையில் விட்டுப் புட்டேன்
காவித்துணி வேசமுன்னு
கேலி செய்யக் கேட்டுக்கிட்டேன்
பெண்: நரம்பில்லா நாக்குக்கெல்லாம்
நல்ல வார்த்த வந்திடுமா?
பேசிப்புட்டு போன சனம்
வாசல் வர வந்திடுமா?
ஆண்: சின்னப்புள்ள வெள்ளாம
வீடு வந்து சேர்ந்ததில்ல
பெண்: கடுகது சிறுத்தாலும்
காரமது போவதில்ல
ஆண்: வேணாண்டி வெளக்கம்
இது தானே தொடக்கம்
ஒளி வீசும் எதிர்காலம் உருவாகும்
துக்கம் என்ன துயரம் என்ன
நமக்கது இல்ல இல்ல...
கஷ்டமுன்னு வாழ்க்கையில
என்றும் வரப் போவதில்ல
பெண்: ஒனக்கென நானிருக்க
எனக்கென நீயிருக்க
கொஞ்சிக் கொஞ்சிப்
பேசி மகிழ்ந்திடலாமா
எம் மாமா .. எம் மாமா...
ஆண்: துக்கம் என்ன துயரம் என்ன
நமக்கது இல்ல இல்ல...
கஷ்டமுன்னு வாழ்க்கையில
என்றும் வரப் போவதில்ல
********
திரைப்படம் : மயிலு
இயக்குனர் : ஜீவன்
இசை : இசை ஞானி இளைய ராஜா
நடிப்பு : ஸ்ரீ , ஷம்மு
தயாரிப்பு : பிரகாஷ் ராஜ்
பாடியவர்கள் : ரீட்டா , ஸ்ரீ ராம் பார்த்த சாரதி
(துக்கமென்ன துயரமென்ன)
வரிகள் : ஜீவன்
பாடலை கேட்க : youtube
பாடலை தரவிறக்க: Tamilwire
இப் பாடலைக் கேட்கும் போதே மனதுக்கு இதமாகவும் இனிமையாகவும் இருக்கின்றது. வரிகளும் குரலும் அருமை. இசைஞானி இளைய ராஜாவின் இசை பாடலை மேலும் மெருகூட்டுகிறது. இசைஞானியின் பாடல் வரிசையில் இது மேலும் ஒரு மகுடம் சூட்டினாற் போல அமைந்திருக்கிறது. 'மயிலு' திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி தொடர்பில் உறுதியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்துள்ள பிரகாஷ் ராஜின் தயாரிப்பில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீங்களும் ஒரு தடவை இப் பாடலை கேட்டுத் தான் பாருங்களேன்!
Article posted at 07.05.2012 | Edited at 15.09.2018
மயிலு | தமிழ்த் திரைப்படம் | பிரகாஷ்ராஜ் | பாடல் | அன்பு | காதல் | பாசம் | சோகம் | இளையராஜா | இசைஞானி | மெல்லிசை | திரையிசை | வெள்ளித்திரை | ஆறுதல் | கண்ணீர் | சிகரம் பாரதி | சிகரம்
நன்றி நண்பா........! : )
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தோழி.
Delete