Posts

Showing posts from 2015

தமிழாக்கம் - ( தேவை - சிக்கல் - தீர்வு) - 01

Image
வணக்கம் வாசகர்களே! மிக நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான் நலம். நீங்கள் நலமா? வழக்கம் போல் இனி வலைத்தளத்தில் உங்களை சந்திப்பேன். 
                       தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழி. செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழி. தமிழ் மொழி காலத்துக்குக் காலம் மெருகேறி வந்துள்ளது. இதில் சாமானியன் முதல் சான்றோர் வரை அனைவரினதும் பங்களிப்பும் உள்ளது. உலகின் அரசியல் பொருளாதார மாற்றங்களினூடாக தமிழர்கள் உலகெங்கும் பரந்துள்ளனர். சில நாடுகளில் ஆட்சி மொழி அந்தஸ்தும் தமிழுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூகிள் , மைக்ரோசொப்ட் போன்ற பல்வேறு மென்பொருள் அமைப்புகளும் தமிழுக்கு போதிய முக்கியத்துவத்தை அளித்து வருகின்றன. 
                    இந்நிலையில் காலத்துக்குக் காலம் உலகில் நிகழும் மாற்றங்களின் காரணமாக தமிழுக்கு "தமிழாக்கம்" என்ற எண்ணக்கருவின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது. தினமும் ஏராளமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. புதிய புதிய விடயங்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. தொழிநுட்பம் நாளுக்கொரு அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறது.…

ஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் - 03

Image
'ஆகஸ்ட் 17 அன்று எனக்கெதிராகப் பேசிய அனைவருக்கும் தக்க பதில் அளிப்பேன்' என முன்னாள் ஜனாதிபதி மகிந்த சூளுரைத்துள்ளார். பெருவாரியான வாக்குகள் மற்றும் ஆசனங்களுடன் தனக்கேற்ற அரசை அமைக்கும் பலம் தனக்குக் கிடைக்கும் என அவர் திடமாக நம்புகிறார். ஜனவரி 8 ஆம் திகதி அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வெளியேறும் போதிலிருந்தே இந்த எதிர்பார்ப்பு அவருக்குள் இருந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை மகிந்த பெறுவாராயின் தனது 3வது முறையும் ஜனாதிபதியாகும் கனவுக்கு நிச்சயம் உயிர் கொடுப்பார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த தோற்றுப் போனார். ஆனாலும் 45% வாக்குகளை பெற்றிருந்தார். தமிழர் பிரதேசங்களில் மாத்திரமே அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஏனைய பிரதேசங்களில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தையே மகிந்த கொண்டிருந்தார். இது சிறுபான்மை மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையும் பெரும்பான்மையினரின் மத்தியில் இழக்கப்படாத ஆதரவையும் வெளிக்காட்டுகிறது. தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மகிந்தவைப் புறந்தள்ளினர். மகிந்தவும் சிங்கள மக்களின் வாக்குகளாலேயெ தன்னால் வென…

ஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் - 02