Share it

Sunday, 30 September 2018

SIGARAM CINEMA: மக்கள் பார்வை | செக்க சிவந்த வானம்

ஒரு திரைப்படம் வெளியான அடுத்த நிமிடமே அந்த திரைப்படம் குறித்த தங்கள் பார்வைகளை ரசிகர்கள் பதிவு செய்து விடுகிறார்கள். சாதகமான பார்வை திரைப்படத்தை இன்னும் ஓடவைக்கும். ஆனால் எதிர்மறையான பார்வை ஓடும் திரைப்படத்தையும் வீதிக்கு இழுத்துக்கொண்டு வந்துவிடும். முன்னணி நடிகர்களின் கூட்டுத் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் பற்றி டுவிட்டரில் மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று பார்க்கலாமா? 


மக்கள் பார்வை | செக்க சிவந்த வானம் 
http://cinemasigaram.blogspot.com/2018/09/Chekka-Chivantha-Vaanam-public-review-at-twitter.html 
#CCV #ChekkaChivanthaVaanam #STR #Simbu #VijaySethupathy #ArunVijay #ARRahman #ManiRatnam #AravindSwami #CCVReview #LycaProductions #Vairamuthu #SonyMusic #SIGARAM

சிகரம் SPORTS: மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்திய சுற்றுலா - 2018 | இந்திய அணி விபரம்

இந்திய மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை சந்திக்கப்போகும் இந்திய அணி எது? 

இந்திய அணிக்கு தலைவர் கோலியா? ரோஹித்தா? 

ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி யார்? 

இந்தியாவின் புதிய அறிமுகங்கள் யார்? 
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்திய சுற்றுலா - 2018 | இந்திய அணி விபரம் 
http://sigaram7.blogspot.com/2018/09/INDIA-TEAM-SQUAD-FOR-WINDIES-TOUR-OF-INDIA-2018.html 
#CWI #BCCI #ODI #ICC #India #WestIndies #TeamSquad #WindiesCricketTour #Kohli #MSD #Dhoni #CWC2019 #AsiaCup2018 #TamilCricket #SigaramNEWS

Saturday, 29 September 2018

வானவல்லி: முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 07 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் - 07 


பணி முடிந்து அனைவரும் இல்லம் நோக்கி விரையும் நேரத்தில் ஆதவனும் அன்றைய பணியை முடித்துக் கிளம்பத் தயாரானது. ஒளி நிறைந்த வான் மங்கத் தொடங்கியது. பறவையினங்கள் தன் கூட்டையடைந்து கூக்குரலிட்டுத் தன்னுடைய வருகையைப் பதிவு செய்து கொண்டிருந்தது. அரண்மனை எங்கும் தீப ஒளியால் மின்னிக் கொண்டிருந்தது. அரண்மனை வாயில் காவலர்கள் உள் நுழைவோரையும் வெளியேறுபவரையும் ஒவ்வொருவராய்ப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார்கள். மாலைநேரம் என்பதால் அவ்விடம் முழுவதும் மக்கள் தலைகளால் நிரம்பிப் பரபரப்பாய் இருந்தது. 

முழுமையாகப் படிக்க - சதீஷ் விவேகா#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

Thursday, 27 September 2018

சிகரம் SPORTS: இங்கிலாந்து அணியின் இலங்கை கிரிக்கெட் சுற்றுத்தொடர் | டெஸ்ட் அணி விபரம்

Sri Lanka Test Squad to play against England. #SLvENG

Dinesh Chandimal – Capt
Dimuth Karunaratne
Kaushal Silva
Kusal Mendis 
இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை அணியின் விபரம் இது. 16 பேர் கொண்ட அணி உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Click Here to read full story 

#SLvENG #LKA #LK #ENG #England #SriLanka #SLC #ECB #Mathews #Chandimal #TestCricket #TeamSquad #TamilCricket #SigaramNews 

Monday, 17 September 2018

சிகரம் ஆசிரியர் பக்கம் | SIGARAM EDITORIAL | 17.09.2018

வணக்கம் சிகரம் வாசகர்களே! 

நமது கல்விமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். நமது கல்வி முறை தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பாடப்புத்தகத்தை மனனம் செய்து விடைத்தாளில் ஒப்புவிக்கும் தேர்வு முறை தான் நமது அறிவைப் பரிசோதிக்கும் ஆயுதமாக இருக்கிறது. ஆறாவது வயதில் பாடசாலையில் அனுமதிக்கப்படும் மாணவன் பதினெட்டு வயதில் பாடசாலையை விட்டு வெளியேறுகிறான். பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வருடங்களை ஒரு மாணவன் பாடசாலையில் கழிக்க வேண்டியிருக்கிறது. பல்கலைக்கழகத்தில் நான்கு அல்லது ஐந்து வருடங்களை ஒரு மாணவன் செலவழிக்க வேண்டும். கல்விச் சிறையில் இருந்து தனது இருபத்தைந்தாவது வயதில் வெளியேறும் மாணவன் சமூகத்தை மன உறுதியுடன் எதிர்கொள்ள முடியாது போகிறது. பாடப்புத்தக அனுபவத்திற்கும் சமூக அனுபவத்திற்குமிடையில் காணப்படும் பாரிய இடைவெளி அச்சத்தையும் பயத்தையும் மாணவனுக்கு அளிக்கிறது. 

மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்பட வேண்டும். பதின்மூன்று வருட பள்ளிக்கல்வி ஐந்து வருட அடிப்படைக் கல்வி, மூன்று வருட இடைநிலைக் கல்வி மற்றும் ஐந்து வருட உயர்நிலைக் கல்வி என வகுக்கப்பட வேண்டும். மேலும் பல்கலைக் கழகக் கல்வி மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட வேண்டும். பல்கலைக் கழகக் கல்வி முழுவதும் பகுதி நேரத் தொழிலையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பாடசாலைக் கல்வியின் ஐந்து வருட உயர்நிலைக் கல்வியும் பகுதி நேரத் தொழிலை உள்ளடக்கியதாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். 

அடிப்படைக் கல்வி முதலே கணினித் தொழிநுட்பம் கற்றுத்தர வேண்டும். மாணவர்களின் ஆண்டிறுதி அல்லது தடைதாண்டல் பரீட்சைகளின் போது கல்வி சாரா செயற்பாடுகளுக்கும் சரிபாதி மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டு கல்வி சார் மதிப்பெண்கள் மற்றும் கல்விசாரா மதிப்பெண்கள் இரண்டும் இணைக்கப்பட்டு மாணவனின் பெறுபேறுகள் அளவிடப்பட வேண்டும். 

இவ்வாறாக கல்வித்துறை மாற்றங்களைச் சந்திக்க வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான மாணவர்களை உருவாக்க முடியும். சிறந்த தொழிற்படையை நாட்டில் இதன் மூலம் உருவாக்க முடியும். மாணவர்களின் உயர்நிலைக் கல்வி முதல் அரசியலையும் கற்றுத் தருவதன் மூலம் மாணவர்களின் சமூக அறிவையும் அக்கறையையும் மேம்படுத்த முடியும். மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது. கல்வித்துறை மாற்றங்களைச் சந்திப்பது எப்போது? 

-சிகரம் 

Saturday, 15 September 2018

வானவல்லி : அவள் | சிறுகதை | கதிரவன்

மாலை நேரம். தங்களது பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் கூட்டம். ஆர்ப்பரிக்கும் ஹாரன் சத்தம். சாலையோர வியாபாரிகளின் கூக்குரல்கள். அனைத்தையும் ஒரு சில நொடிகளில் கரு மேகம் தூறல் தந்து பெருமழையாய் பொழிந்தது. மழையின் ஒலியை தவிர எதையுமே உணர முடியாத அமைதிக்கு நடுவே சாலையோர நாற்காலியில் ஒரு உருவம் மட்டும் தனித்து அமர்ந்திருந்தது. கடைகளில் ஒதுங்கிய மக்களின் கவனம் நாற்காலியை கூர்ந்து கவனிக்க அங்கு இருப்பது ஒரு பெண் என்பதை அறிந்து ஒரு சிலர் குடையோடு அவளிடம் ஓட அவள் எந்தவித சலனமும் இன்றி அமர்ந்திருந்தாள் வானம் நோக்கி. இவர்கள் அவள் அருகில் செல்வதற்குள் ஒரு கார் வேகமாய் வந்து அவள் பக்கத்தில் நின்றதும் அதில் இருந்து வந்த நபர் "வாடாம்மா வீட்டுக்கு போகலாம். மழைன்னா உனக்கு ரொம்ப புடிக்கும்னு அப்பாவுக்கு தெரியும். அதுக்காக வெளியூர்ல வந்து இப்படி நனையணுமா?" என்றவாறு மகளை காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்.


சிறுகதை | தமிழ் | வலைத்தளம் | அன்பு | காதல் | அம்மா | காதலி | கணவன் | குடும்பம் | இல்லறம் | தாம்பத்தியம் | உறவுகள் | பிரிவு | கதிரவன் | சிகரம் 

Friday, 14 September 2018

வானவல்லி | முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 05 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் - 05 


கருக்கல் கலைந்து காலை நேரக் கதிரவன் கண் சிமிட்டியெழும் நேரத்தில் பல்லவ தேசத்து அரண்மனையை நோக்கிப் புரவிகள் வேகமாய் வந்து கொண்டிருந்தது. புரவியிலிருந்த வீரரின் கையிலிருந்த இலட்சினை அவர்களைத் தடங்கலின்றி அரண்மனைக்குள் அழைத்துச் சென்றது. இளவரசரைக் காண அனுமதி வேண்டி முன் மண்டபத்தில் காத்திருந்தார்கள். இளவரசரோ உறக்கமின்றி இரவை எரித்து அந்த ஒளியில் விடியலை எதிர்பார்த்துத் தன்னுடைய அலுவல் அறையின் சாளரத்தின் ஓரம் தெரியும் மூன்றாம் பிறையைப் பார்த்தபடியே நின்றவரின் மனதில் ஆயிரம் சிந்தனைகள் முடிவில்லாமல் நீந்திக் கொண்டிருந்தது. 

முழுமையாகப் படிக்க 

#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

ஞாபகங்கள் | அத்தியாயம் - 02 | தொடர் கதை | சிகரம் பாரதி


இனிமையான ஞாபகங்கள் அதிர்ஷ்டலாப சீட்டில்
கிடைக்கும் ஒரு கோடி பரிசை விட மேலானது

ஞாபகங்கள்
அத்தியாயம் - இரண்டு
வக்கீல் வந்தியத்தேவன்அவன் ஞாபகங்களை மீட்டுக்கொண்டே தன் குழந்தைக்கு உடைமாற்றிவிட்டிருந்தான். அதற்குள் நந்தினியும் குளித்து முடித்து அழகான பச்சை நிற சேலைக்கு மாறியிருந்தாள். பச்சை நிறத்தில் சேலை அணிந்திருந்தது அவள் அழகை மேலும் மெருகூட்டுவதாக வந்தியத்தேவன் எண்ணினான். 


#ஞாபகங்கள் #தொடர்கதை #கதை_சொல்லப்_போறேன் #வலைத்தளம் #எண்ணங்கள் #வாழ்க்கை #நட்பு #காதல் #அன்பு #சிகரம்பாரதி #சிகரம் 

Sigaram TV | List of Tamil TV Channels in Dish tv d2h as at 14.09.2018

List of Tamil TV Channels in Dish tv d2h / dth

Channel numbers & Channel details

HD

1801 - Sun TV HD 
1850 - K TV HD 
1858 - Sun Music HD SD 

1802 - Sun TV 
1804 - Zee Tamil 

Click here to get complete channel list 

List of channels available in Dish tv d2h | Dish tv south Channels | List of Channels in Dish tv dth | Dish tv channel list with number

சிகரம் ஆசிரியர் பக்கம் | SIGARAM EDITORIAL | 14.09.2018

வணக்கம் 'சிகரம்' இணையத்தள வாசகர்களே! 

சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் ஆறு வழிச்சாலைத் திட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. மக்கள் இந்தத் திட்டமே வேண்டாம் என்று போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இதுவா தமிழக அரசின் தீர்வு? தமிழகத்தில் மக்களுக்காக நிறைவேற்றப்படவேண்டிய நலத்திட்டங்கள் ஏராளமாக இருக்கும் நிலையில் இந்த திட்டத்தை விடாப்பிடியாக நிறைவேற்றியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிவது ஏனோ? அடுத்த ஆட்சியாவது மக்கள் விரும்பும் ஆட்சியாக அமையுமா? இலங்கையைப் பொறுத்த வரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் தலைமைப் பொறுப்பை 2030ஆம் ஆண்டில் தகுதியானவர்களிடம் ஒப்படைக்கவிருப்பதாக அண்மையில் பேசியிருந்தார். ஏற்கனவே ரணிலிடம் இருந்து தலைமைப்பொறுப்பை பறிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் நடந்திருந்தாலும் அவை வெற்றியளிக்கவில்லை. ரணில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி ஏராளமான தோல்விகளைச் சந்தித்துள்ளது. மக்களும் கட்சியில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மக்களின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டு தலைவர் செயல்படுவாரா? 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான ஏழு பேரின் விடுதலை தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பினை வெளியிட்டிருந்தது. தமிழக அரசு ஏழு பேரின் விடுதலை தொடர்பில் தங்கள் தீர்மானத்தை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்து பரிந்துரைக்கலாம் என்று அந்தத் தீர்ப்பு குறிப்பிடுகிறது. தமிழக அரசு ஏழு பேரையும் விடுவிக்கும் பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி. சுயமாக ஆளுநரால் முடிவெடுக்க முடியாது. இந்தத் தீர்மானத்துக்கான முடிவு தொடர்பாக மத்திய அரசின் கருத்தை ஆளுநர் கோருவார். இந்த நிலையில் ஏழு பேரின் விடுதலை சாத்தியமில்லை என்பதே நிஜம்! 

-சிகரம் 

Wednesday, 12 September 2018

BIGG BOSS MALAYALAM 1 | WEEK 12 | PUBLIC OPINION POLL | BIGG BOSS MALAYALAM VOTE GOOGLE

Bigg Boss Malayalam Vote (Online Voting) Season 01 | Missed Call Numbers | Bigg Boss Google Vote


Show Title : Bigg Boss Malayalam 

Season : 01 

Broadcasting Channel : Asianet TV  Bigg Boss Malayalam Google Vote, Missed Call, SMS & Public Opinion Poll 


#BiggBoss #BiggBossMalayalam #Mohanlal #Lalettan #Asianet #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossMalayalamVote #BiggBossVoteMalayalam #BiggBossAsianet #Hotstar #BiggBossGoogleVote #BiggBossVoteOnline #SIGARAMCO

Tuesday, 11 September 2018

BIGG BOSS TELUGU 2 | WEEK 14 | PUBLIC OPINION POLL | BIGG BOSS TELUGU VOTE GOOGLE

Bigg Boss Telugu Vote (Online Voting) Season 02 | Missed Call Numbers | Bigg Boss Google VoteBIGG BOSS TELUGU 2 | WEEK 14 

PUBLIC OPINION POLL | WHO WILL BE SAVE? 


*You can vote for your favourite contestants to save.

* You can vote every day to saturday. 

* You can vote for multiple contestants

* Google vote is only official. Its our public opinion poll. BIGG BOSS TELUGU 2 | WEEK 14 PUBLIC OPINION POLL | WHO WILL BE SAVE?

Amit Tiwari
Deepti
Geetha Madhuri
Kaushal
Roll Rida
Created with QuizMakerBIGG BOSS: BIGG BOSS TELUGU 2 | WEEK 14 | PUBLIC OPINION POLL...: Bigg Boss Telugu Vote (Online Voting) Season 02 | Missed Call Numbers | Bigg Boss Google Vote Show Title : Bigg Boss Telugu  Seaso...


#BiggBoss #BiggBossTelugu #Nani #ActorNani #StarMaa #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossTeluguVote #BiggBossVoteTelugu #BiggBossVoteOnline #SIGARAMCO 

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Missed Call Numbers | Bigg Boss Google Vote | Public Opinion Poll 


Show Title : Bigg Boss Tamil 

Season : 02 
BIGG BOSS TAMIL 2 | CONTESTANTS 

01. Yashika Anand
02. Ponnambalam 
03. Mahath Ragavendra 
WILD CARD ENTRY 

17. Vijayalakshmi  

SIGARAM | Public Opinion Poll | Week 13

* இது சிகரம் இணையத்தள வாசகர்களின் மன நிலையை அறிவதற்கான வாக்கெடுப்பு மட்டுமே. 

* நீங்கள் காப்பாற்ற விரும்பும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்கலாம். 

* உங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு சந்தர்ப்பம் வீதம் திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலான ஆறு நாட்களுக்கும் ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும். 

* வாக்களிப்பு முடிவுகள் திங்கள் வெளியாகும். Bigg Boss Tamil 2 | Public Opinion poll - Week 13 | Who Will Be save? | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 13 - யாரைக் காப்பற்றப் போகிறீர்கள்?

Aishwarya
Mumtaz
Rithvika
Vijayalakshmi


Bigg Boss Tamil Official Vote | Missed Call & Google Vote

Participants List & Missed Call Numbers : 

You can cast your bigg boss vote tamil by missed call. Just give a missed call to your favourite contestants from below mentioned List. 

Aishwarya Dutta - 8367796801 

Ananth Vaidyanathan - 8367796802 

Bhalajie / Balaji - 8367796803 Bigg Boss Vote Google 

1. Log in to www.google.co.in 

2. Search 'Bigg Boss Vote',  'Bigg Boss Vote Tamil' or 'Bigg Boss Tamil Vote' 

3. After Search on top of search results you will see nominated bigg boss tamil contestants list with picture. 


WEEKLY ELIMINATION 

Week 01 - No Elimination 
Week 02 - Mamathi Chari 
Week 03 - Ananth Vaidyanathan 


Bigg Boss House Captains 

Week 01 - Janani 
Week 02 - Nithya 
Week 03 - Vaishnavi 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO 

Monday, 10 September 2018

சிகரம் ஆசிரியர் பக்கம் 2018.09.10 | Sigaram Editorial 2018.09.10

சிகரம் இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். 

இன்றைய சூழலில் இரண்டு பெண்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். சுவாதி, நிர்பயா, அனிதா என்பவர்களையெல்லாம் மறந்து கடந்து விட்டோம். எப்போதுமே சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் விவாதப் பொருளை (Trending)மட்டுமே நாம் பின்பற்றுவது ஒன்றும் புதிதல்லவே? இப்போது நாம் பேசிக் கொண்டிருப்பது சோபியா மற்றும் அபிராமி ஆகிய இரண்டு பெண்களைப் பற்றி. சோபியா விமான நிலையத்தில் வைத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சியின் தமிழக மாநில தலைவரான தமிழிசையை நோக்கி பாசிச பாஜக அரசு ஒழிக என்று கோஷமிட்டுள்ளார். இதைப் பொருட்படுத்தாமல் தமிழிசை கடந்து சென்றிருந்தால் இன்று நாம் இந்த விடயத்தைப் பற்றிப் பேச வேண்டியிருந்திருக்காது. ஆனால் இதனால் கோபமடைந்த தமிழிசை சோபியாவிடம் கார சாரமாக விவாதிக்க விடயம் பெரிதாகிவிட்டது. மேலும் தமிழிசையின் புகாரின் பேரில் காவல்துறை சோபியாவைக் கைது செய்ய நாடு முழுவதும் இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. சோபியாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் மக்களின் குரல்கள் எழுகின்றன. ஏற்கனவே பா.ஜ.க கட்சிக்கு தமிழகத்தில் எதிர்ப்பு காணப்படும் நேரத்தில் இந்த சம்பவம் மக்களின் எதிர்ப்பை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது. எமது பார்வையில் சோபியாவின் செயல் சரியானதே. அரசியல் கட்சிகளும் தலைவர்களும் அவர்களின் செயல்களுக்கான விளைவுகளை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். சோபியா  எதையும் இட்டுக்கட்டிக் கூறவில்லை. மக்கள் மனதில் இருப்பதைத்தான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். எத்தனையோ முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளை விடவும் சோபியா தான் உண்மையான மக்கள் பிரதிநிதி என்றாலும் கூட மிகையில்லை. 

அபிராமி. கள்ளக்காதலுக்காக தான் பெற்ற இரண்டு பிள்ளைகளையும் பரலோகம் அனுப்பியவர். இந்த விவகாரத்திலும் ஆதரவாகவும் எதிராகவும் மக்கள் குரல்கள். நிகழ்வின் அடிப்படையில் அபிராமி செய்தது தவறு. பெண்களின் உரிமை, பாதுகாப்பு, சுதந்திரம் என்னும் பெண்ணிய அடிப்படையில் அவர் மீது மட்டுமே தவறு இருக்க முடியாது. அபிராமியின் கள்ளக் காதலர் ஏற்கனவே காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். இவர்கள் இருவரும் தங்கள் துணைகளை விட்டுவிட்டு ஒன்றுசேர நினைத்ததன் காரணம்? கண்டிப்பாக இவர்கள் இருவரும் மட்டுமாக இருக்க முடியாது. இவர்கள் இருவரின் துணைகள் மற்றும் சமூக அமைப்பும் ஒரு காரணம். 

பெண் குழந்தையைப் பெற்றாலே அதை எப்படியாவது சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். பெண் குழந்தையைப் பெற்றெடுப்பதே இன்னொருவனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காகத் தான் என்பது அவர்களின் நிலைப்பாடு. பெண்கள் மீதான மதிப்பீடுகளும் எண்ணங்களும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்தாலும் முழுமையான மாற்றம் இன்னமும் நிகழவில்லை. 

நாம் மனிதன் என்ற வகையில் சக மனிதனை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சக மனிதனை மதிப்பது நல்ல பண்பின் அடையாளம். சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என்பதெல்லாம் கடவுள் நம்பிக்கை உடையவர்களின் நம்பிக்கைகள். ஆனால் அவற்றை நம்மால் நிரூபிக்க முடியாது. ஆகவே நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ஒரு பிறப்பை பயனுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ்ந்துவிட்டுப் போவதில் தவறேதும் இல்லையே? 

#Sophia #fasistbjpdowndown #BJP #TamilisaiSoundararajan #Tuticorin #bjpfails #terrorist #media #tn #mkstalin #dmk #admk #antiindian #abhirami #abirami #kundrathur #india #love #respect #girl #editorial #sigaram #sigarambharathi #SigaramINFO 

Wednesday, 5 September 2018

BIGG BOSS MALAYALAM 1 | WEEK 11 | ONLINE VOTE | GOOGLE VOTE

Bigg Boss Malayalam Vote (Online Voting) Season 01 | Missed Call Numbers | Bigg Boss Google Vote  
BIGG BOSS: BIGG BOSS MALAYALAM 1 | WEEK 11 | ONLINE VOTE | GO...: Bigg Boss Malayalam Vote (Online Voting) Season 01 | Missed Call Numbers | Bigg Boss Google Vote Show Title : Bigg Boss Malayalam  ...

#BiggBoss #BiggBossMalayalam #Mohanlal #Lalettan #Asianet #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossMalayalamVote #BiggBossVoteMalayalam #BiggBossAsianet #Hotstar #BiggBossGoogleVote #BiggBossVoteOnline #SIGARAMCO 

BIGG BOSS TELUGU 2 | WEEK 13 | PUBLIC OPINION POLL | BIGG BOSS TELUGU VOTE GOOGLE

Bigg Boss Telugu Vote (Online Voting) Season 02 | Missed Call Numbers | Bigg Boss Google Vote
BIGG BOSS: BIGG BOSS TELUGU 2 | WEEK 13 | PUBLIC OPINION POLL...: Bigg Boss Telugu Vote (Online Voting) Season 02 | Missed Call Numbers | Bigg Boss Google Vote Show Title : Bigg Boss Telugu  Seaso...

#BiggBoss #BiggBossTelugu #Nani #ActorNani #StarMaa #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossTeluguVote #BiggBossVoteTelugu #BiggBossVoteOnline #SIGARAMCO 

#ජනබලයකොළඹට #lka #SriLanka #JanaBalaya #Colombo #September5th | twitter @sigaramco

#News #NewsLKA #JO #JointOpposition #MahindaRajapaksha #Namal #Gottabaya #RoadBlock #TrafficATcolombo #Protest #LKAgovt #SigaramINFO 

ஞாபகங்கள் | அத்தியாயம் - 01 | தொடர் கதை | சிகரம் பாரதி


அலைகள் கடலில் ஓய்வதில்லை 
ஞாபகங்களை மனது மறப்பதில்லை 

கதையைத் தொடங்கும் முன்... 

இந்தக் கதை நமது மனதில் சதா தோன்றிக் கொண்டிருக்கும் ஞாபகங்களைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. மனதில் ஆழப் பதிந்துவிட்ட எதையுமே இலகுவில் மறந்துவிட முடியாது. பல நாள் மறந்திருந்த ஒன்று மீண்டும் ஞாபகம் வரும்போது அது இரண்டு வகைகளில் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். 

ஒன்று அது சந்தோஷத்தை தரும். இல்லையேல் துக்கத்தை ஏற்படுத்தி உறங்க விடாமல் செய்யவும் கூடும். இந்த ஞாபகங்கள் தரும் அந்த இரண்டு விளைவுகளும் இந்தக் கதையில் சிலர் வாழ்வில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றியதே இந்தக் கதை. ஞாபகம் வருகிறது... 

ஞாபகங்கள் 
அத்தியாயம் - ஒன்று 
அன்புத் தம்பதியர் 

வந்தியத்தேவன் இன்னும் எழும்பவில்லை. அவனது மனைவி நந்தினி காதில் கிசுகிசுத்தாள். 

"டேய்... எழும்புடா... சொல்றேன்ல..." 

அவன் எழும்பவுமில்லை, அசையவுமில்லை. ஆனால் அவன் மனது துள்ளிக் குதித்தது. ஏனென்றால் அவனது அன்பிற்கினிய மார்னிங் அலாரம் வேலை செய்யத் துவங்கிவிட்டதே! 

உடனே நந்தினி அவனது கையில் தான் கொண்டு வந்த தேநீர்க் குவளையை வைத்தாள். "அம்மா..." என்று அலறிக் கொண்டு எழுந்தான் வந்தியத் தேவன். 

நந்தினி விழுந்து விழுந்து சிரித்தாள். 

"ஏய்... இப்படியா செய்யணும்? நான் முழிச்சு கால் மணி நேரம்..." என்றான் வந்தியத் தேவன். 

"அடப்பாவி... கால் மணி நேரமா? ரொம்ப சினிமா நடிகர்னு நெனப்புத்தான்" என்று கேலி செய்தாள் நந்தினி. 

உடனே வந்தியத்தேவன் அவள் கையைப் பிடித்தான். 

"கைய விடுங்க..." என்று சிணுங்கினாள் அவள். 

"என் மார்னிங் அலாரமே நீ தான். எப்படி தெரியுமா?" 

"எப்படி?" 

"எந்த நாளும் நா தூங்கறேன்னு தெரிஞ்சும் வந்து எழுப்பி விடறியே... அதனால தான்" என்றான் வந்தியத் தேவன். 

"ஆமா. இந்தப் புகழ்ச்சிக்கு கொறச்சலே இருக்காது" என்றாள் நந்தினி. அவன் இன்னும் அவள் கையை விடவில்லை. அவள் கட்டிலில் அமர்ந்தாள். 

"ஏன் புகழக்கூடாதா?" வந்தியத்தேவன் கேட்டான். 

"டேய்... தேவா... டீ ஆறப்போகுது. பட்டுனு குடிடா" என்றாள் அவள். 

"சரிங்க மேடம்" என்றபடியே தேநீரை உறிஞ்சிக் குடித்தான் வந்தியத் தேவன். 

"டீ சூப்பர்" என்று அவன் கூற "லேட்டாகாம எழும்பி நேரத்தோட ஒஃபீசுக்கு போற வழியப் பாருங்க. நா சமைக்கணும். கைய விடுங்க" என்று படபடவென சொன்னாள் நந்தினி. 

"முடியாது" - வந்தியத்தேவன் சொன்னான். அவள் பட்டென்று கையை விடுவித்துக் கொண்டு சமையலறைக்குப் போக அவன் மெல்லிய புன்னகையொன்றை உதிரவிட்டவாறே கட்டிலை விட்டிறங்கினான். 

கீழே விழப்போன சாரத்தை ஒழுங்காகக் கட்டிக் கொண்டு மெதுவாக குளியலறைக்குள் நுழைந்தான் அவன். தூரிகையில் பற்பசையைத் தடவி பல் துலக்கத் துவங்கினான். 

கொஞ்ச நேரத்துக்குள் அவர்களது அறையில் இதுவரை தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ரம்யா "அம்மா..." என்று அழைக்கும் சப்தம் கேட்டது. 

"இரு... இதோ வந்துர்றேன்" என்றபடி அறைக்குள் நுழைந்த நந்தினி அவள் குழந்தையின் கையில் தேநீரை வைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

அப்போதுதான் வந்தியத்தேவன் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்துக்குள்ளாலேயே அவன் குளியலறையிலிருந்து வெளிப்பட நந்தினி அங்கு வந்தாள்.

"சேர்ட் அந்த செவுத்துல மாட்டிருக்கு. ட்ரவுசர் பீரோவுல பாருங்க" என்றவள் அறை வாசல் வரை சென்று சற்று நின்று "ஃபைல் எல்லாத்தையும் மறந்துடாம எடுத்துட்டுப் போங்க" என்றபடி வெளியேறினாள்.

'ம்ம்... காலம் மாறிப்போச்சு' என்று முணுமுணுத்தவாறே உடை மாற்றினான் வந்தியத்தேவன். உடனே நேரத்தைப் பார்க்க மணி 07.15 எனக் காட்டியது. கடிகாரம் ஓடுவதை நிறுத்தலாம். ஆனால் காலம் மாறுவதை யாராலும் நிறுத்த முடியாதல்லவா? நேரம் தன் பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. அந்த நேரம் அவ்வறைக்குள் நந்தினி நுழைந்தாள்.

பீரோவிலிருந்து தனது உடையை எடுத்தவாறே "அடுப்புல தண்ணி வச்சிருக்கேன். கொதிச்ச உடனே இறக்கி வச்சிட்டு கீரையைக் கொஞ்சம் சுண்டுங்க" என்றபடி தன்னுடன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். 

வந்தியத்தேவன் சமயலறைக்குள் சென்று கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரை இறக்கி வைத்துவிட்டு சட்டியை அடுப்பில் வைத்து கீரையைப் போட்டு தேங்காய்ப்பூ சேர்த்துக் கிண்டினான். பத்து நிமிடத்தில் கீரை சுண்டும் வேலை முடிந்தது. 

குளியலறையிலிருந்து "தேவா..." என்று அழைக்கும் குரல் கேட்டது. 

"என்ன?" என்றபடியே குளியலறைக்குப் பக்கத்திலிருக்கும் தன்னறைக்கு வந்தான் வந்தியத் தேவன். 

"ரம்யா குளிச்சிட்டா. அவளுக்கு ஸ்கூல் டிரஸ் பண்ணிவிடுங்க" என்றாள் நந்தினி. 

அந்த வேலையையும் சளைக்காமல் செய்தான். இருவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்வதில் தனி இன்பம் கண்டனர். அது சமையலாகவோ குழந்தைக்கு உடை மாற்றிவிடும் வேலையாகவோ ஏன் வீடு கூட்டுவதாகவோ கூட இருக்கலாம். ஆண், பெண் என்று பார்ப்பதில்லை. 

ஒருமுறை வந்தியத்தேவனின் நண்பன் அவசர வேலையாக தலவாக்கலை நகரத்திற்கு வந்த போது பிரதான வீதிக்கு உள்பக்கமாகச் செல்லும் வீதியிலுள்ள வந்தியத்தேவனின் வீட்டுக்கு வந்திருந்தான். 

வந்தியத்தேவனின் நண்பன் கபிலன் காலையில் வந்து மாலை நேரம் போய் விட்டான். காலை நேரம் வந்தியத்தேவன் வீடு கூட்டுவதைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது கபிலனுக்கு. 

"டேய்... தேவா! நீ இதெல்லாம் கூட செய்வியா? ஏன் உன்னோட வொய்ஃப் செய்ய மாட்டாங்களா?" என்று கேட்டான் கபிலன். 

"ஏன் உனக்கு ஆச்சரியமா இருக்கா? இது மட்டுமில்ல, சமையலும் செய்யத்தெரியும். போய்ஸ், கேர்ள்ஸ்னு பிரிச்சுப் பேசுறது எனக்குப் பிடிக்காது. அதுக்குன்னு ரெண்டு பேரும் ஒன்ணுன்னும் சொல்ல முடியாது..." என்றான் வந்தியத்தேவன். 

"என்னோட வீட்ல வொய்ஃப் தான் எல்லாம் செய்வா. அவ இல்லாட்டி வேலைக்காரி செய்வா. இதெல்லாம் எதுக்குடா?" என்று மீண்டும் கேட்டான் கபிலன். 

"கபிலன்... நீ நினைக்கிற மாதிரி நா நினைக்கல. ஏதோ நீ முன்ன ஓட்டல்ல வேலை செஞ்சதுனால உன்னோட வீட்ல யாரும் இல்லாதப்ப மட்டும் செய்வே. நா எப்பவும் செய்வேன். உயர்வு, தாழ்வு எங்க வீட்ல இல்ல" என்று கூறினான் வந்தியத்தேவன். 

மனைவி ரம்யாவுக்கு உடை மாற்றச் சொன்ன போது இதுதான் வந்தியத்தேவனுக்கு ஞாபகம் வந்தது. 

#ஞாபகங்கள் #தொடர்கதை #கதை_சொல்லப்_போறேன் #வலைத்தளம் #எண்ணங்கள் #வாழ்க்கை #நட்பு #காதல் #அன்பு #சிகரம்பாரதி #சிகரம் 

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts