Posts

Showing posts with the label சதீஷ் விவேகா

வானவல்லி: முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 08 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா

Image
முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - முழுத்தொகுப்பு பயணம் 8 #முடிமீட்ட_மூவேந்தர்கள் மெல்ல மெல்லப் படைகள் நகரத் தொடங்கியது வனத்தினுள். சிறு சிறு துளி நீர் சேர்ந்து எவ்வாறு பிரவாகம் ஆகுமோ அதுபோல் குழுக்களாய் நகர்ந்த வீரர்கள் நடு வனத்திற்குள் சென்றதும் பெரும் படையாய் உருவெடுத்தார்கள். வீரர்களின் மத்தியில் அமைதியும் கட்டுப்பாடும் குலைந்து ஆக்ரோஷம் பிறந்தது. இது பெரும் பதட்டத்தை உருவாக்கியது தளபதிகளுக்கு. முதல்நாள் இரவு வந்ததும் தளபதிகள் அனைவரும் இரவு உணவை முடித்து ஒன்று கூடினார்கள்.  முழுமையாக வாசிக்க>>> வானவல்லி: முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 08 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா  https://sigaram-one.blogspot.com/2018/10/Mudi-Meetta-Moovendhargal-08.html  #முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

வானவல்லி: முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 07 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா

Image
முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - முழுத்தொகுப்பு பயணம் - 07  #முடிமீட்ட_மூவேந்தர்கள் பணி முடிந்து அனைவரும் இல்லம் நோக்கி விரையும் நேரத்தில் ஆதவனும் அன்றைய பணியை முடித்துக் கிளம்பத் தயாரானது. ஒளி நிறைந்த வான் மங்கத் தொடங்கியது. பறவையினங்கள் தன் கூட்டையடைந்து கூக்குரலிட்டுத் தன்னுடைய வருகையைப் பதிவு செய்து கொண்டிருந்தது. அரண்மனை எங்கும் தீப ஒளியால் மின்னிக் கொண்டிருந்தது. அரண்மனை வாயில் காவலர்கள் உள் நுழைவோரையும் வெளியேறுபவரையும் ஒவ்வொருவராய்ப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார்கள். மாலைநேரம் என்பதால் அவ்விடம் முழுவதும் மக்கள் தலைகளால் நிரம்பிப் பரபரப்பாய் இருந்தது.  முழுமையாகப் படிக்க   - சதீஷ் விவேகா #முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

வானவல்லி | முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 05 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா

Image
முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - முழுத்தொகுப்பு   பயணம் - 05   #முடிமீட்ட_மூவேந்தர்கள் கருக்கல் கலைந்து காலை நேரக் கதிரவன் கண் சிமிட்டியெழும் நேரத்தில் பல்லவ தேசத்து அரண்மனையை நோக்கிப் புரவிகள் வேகமாய் வந்து கொண்டிருந்தது. புரவியிலிருந்த வீரரின் கையிலிருந்த இலட்சினை அவர்களைத் தடங்கலின்றி அரண்மனைக்குள் அழைத்துச் சென்றது. இளவரசரைக் காண அனுமதி வேண்டி முன் மண்டபத்தில் காத்திருந்தார்கள்.  இளவரசரோ உறக்கமின்றி இரவை எரித்து அந்த ஒளியில் விடியலை எதிர்பார்த்துத் தன்னுடைய அலுவல் அறையின் சாளரத்தின் ஓரம் தெரியும் மூன்றாம் பிறையைப் பார்த்தபடியே நின்றவரின் மனதில் ஆயிரம் சிந்தனைகள் முடிவில்லாமல் நீந்திக் கொண்டிருந்தது.  முழுமையாகப் படிக்க   #முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 04

Image
முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - முழுத்தொகுப்பு   பயணம் - 04 #முடிமீட்ட_மூவேந்தர்கள் அந்தி சாய்ந்து ஆதவன் மறையும் மாலை நேரம். பொன்னிறக் கதிர் எங்கும் பரவி மங்களகரமாய்க் காட்சிளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இளவரசர் அவரின் மெய்க்காவல் வீரர்களுடன் புயலெனப் புரவியில் பாசறையைச் சென்றடைந்தார். வாயிலில் எக்காளம் அடித்து இளவரசரின் வருகை தெரிவிக்கப்பட்டது. முன்புறத்தில் நின்றிருந்த உபதளபதிகளும் வீரர்களும் நேராய் வரிசையாய் நின்றார்கள். வீரர்கள் இமைகள் கூட இமைக்காமல் நேராய் நிமிர்ந்து நின்றிருந்தார்கள். அறையிலிருந்த தளபதிகள் அவ்விடம் வந்து வரிசையாய் நின்றார்கள். குதிரையை விட்டுக் குதித்து இறங்கியவர் வீரர்கள் நின்றிருந்த இடம் நோக்கி விரைந்தார். வீரர்கள் வாளையும் வேலையும் நிலத்திலூன்றி மண்டியிட்டு இளவரசருக்கு வணக்கத்தைக் கூறினர். வீரர்களின் வணக்கத்தை ஏற்று பதில் வணக்கமளித்தார். தளபதிகள் வந்து அவரை அறையை நோக்கி அழைத்துச் சென்றார்கள்.  முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்   - சதீஷ் விவேகா  #முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீ...

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 03

Image
முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - முழுத்தொகுப்பு   பயணம் - 03  #முடிமீட்ட_மூவேந்தர்கள் அவை முடிந்து விரைவாய்த் தளபதிகள் அனைவரும் தங்களது பாசறையில் ஒன்று கூடினார்கள். உபதளபதிகளில் ஒருவர் மெதுவாய் அருகே வந்து 'நாயகரே விவாதத்தில் எதாவது முக்கிய விஷயம் உண்டா?' என்று பவ்யமாய் கேட்டார். 'ஆம் உண்டு. ஆனால் அதைப்பற்றி விவாதிப்பதற்காகவே அனைவரும் ஒன்றாய் வந்துள்ளோம். முதலில் நம் ஒற்றர்கள் அனைவரையும் இங்கு வரச் சொல்லுங்கள்' என்று பரபரப்புடன் உத்தரவிட்டதைப் பார்த்ததும் புரிந்து கொண்டார்கள் விவாதத்தின் வீரியத்தை. 'இப்பொழுதே அழைக்கிறேன்' என்று வேகமாய் உபதளபதிகள் ஆளுக்கொரு திசைக்குச் சென்றார்கள். முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்   - சதீஷ் விவேகா நன்றி. புகைப்படம் டிசைன் திரு. Kannan R அவர்கள்.  #முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02

Image
முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01  முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02  சோழ மன்னர்களில் கோச்செங்கட் சோழர் காலம் வரை தங்களின் ஆளுமையால் தொண்டை மண்டலத்தையும், சோழத்தையும் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதன் பிறகு நடந்த ஆட்சி மாற்றங்களாலும் அண்டை தேசத்துடனான போர்களாலும் சோழத்தின் ஆளுமையும் வலிமையும் குன்றத் தொடங்கியது. இந்தக் காலத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்ளப் பல்லவர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இதற்கான திட்டத்தையும் தீட்டத் தயாரானார்கள்.  முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்   - சதீஷ் விவேகா #முடிமீட்ட_மூவேந்தர்கள் # சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01

Image
வண்ணங்கள் நிறைந்த வாழ்வில் கருமைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. அதே கருமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருளான இருண்ட நாட்களாய் ஆழமாய்ப் படிந்திருக்கும். அதை மறக்க நினைப்போரும் உண்டு... மறைக்க நினைப்போரும் உண்டு... அதேபோல் மறை(ற)ந்து இருக்கும் வரலாறு இன்றளவும் தமிழக வரலாற்றில் உண்டு. அதை வெளிக்கொணரப் பல வரலாற்று அறிஞர்கள் தங்களின் ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் ஆய்வுகளை மையமாய்க் கொண்டு தமிழக வரலாற்றையும் இருண்ட காலத்தைப் பற்றியும் சோழர் சரித்திரத் தேடல் என்ற தலைப்பில் கட்டுரை வடிவில் அளித்தார் திரு. மாரிராஜன் அண்ணண் அவர்கள். அவரளித்த தீக்குச்சியின் வெளிச்சத்தின் மூலம் இருண்ட காலத்தைக் காண ஆவல் கொண்டேன் நான். அந்த ஆவலே இந்தக் காலத்தைப் பற்றி எழுதவும் தூண்டியது. அந்தக் காலத்தை நோக்கிப் பயணப்படப் பல ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் பல நல்லுள்ளங்களின் ஆதரவும் இத் தொடரை எழுத வழிநடத்திச் சென்றது. யாரைப் பற்றியது? எந்தக் காலமது? என்ன நடந்தது? பார்ப்போம். முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்   - சதீஷ் விவேகா #முடிமீட்ட_மூவேந்தர்கள் # சத...