Share it

Saturday, 20 October 2018

தூறல்கள்: சிகரத்துடன் சில நிமிடங்கள் : கோபால் கண்ணன்

கேள்வி : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? 

படைப்பு என்பது மொழியாளுமை மிக்க அறிஞர்கள் மட்டும் புரிந்துகொள்ளும் விதத்தில் தலையைச்சுற்றி மூக்கைத்தொடும் வித்தைக்காட்டி எழுதாமல், எழுத்துக்கூட்டிப் படிக்கும் குறைந்த படிப்பாற்றல் / மொழியறிவுக் கொண்டவர்களும் புரிந்துக்கொள்ளும் விதத்தில் எளிமையான சொல்லாடல்களால் இருத்தல் வேண்டும். 
#கோபால்_கண்ணன் #நேர்காணல் #உரையாடல் #வாசிப்பு #தமிழ் #வலைத்தளம் #எழுத்து #கேள்வி #பதில் #சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #சிகரம் 

Monday, 15 October 2018

தூறல்கள்: சிகரத்துடன் சில நிமிடங்கள் : பௌசியா இக்பால்

சிகரத்துடன் சில நிமிடங்கள்

பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 

கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?  

இந்தக் கேள்விகள் உட்பட மொத்தம் பத்துக் கேள்விகளுக்கு நமது தோழி பௌசியா இக்பால் நம்மோடு மனம் திறந்திருக்கிறார். முழுமையாக வாசிக்க கீழே சொடுக்குங்கள். முழுமையாக வாசிக்க 

#நேர்காணல் #கேள்வி #பதில் #பௌசியா_இக்பால் #உரையாடல் #வாசிப்பு #தமிழ் #வலைத்தளம் #எழுத்து #சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #சிகரம் 

Saturday, 13 October 2018

SIGARAM CO: இலங்கை எதிர் இங்கிலாந்து | இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி

இங்கிலாந்து அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ளது. அண்மைக்காலமாக இலங்கை அணி அனைத்துவித சர்வதேச போட்டிகளிலும் தடுமாறி வருகிறது. 

மேலும் இலங்கை கிரிக்கெட் சபை மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சர்வதேச கிரிக்கெட் சபை அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. 

இந்த நிலையில் இன்று நடைபெற்ற இலங்கை எதிர் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி ஆட்ட விபரங்கள் இதோ: 
இலங்கை எதிர் இங்கிலாந்து | இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி 
https://www.sigaram.co/preview.php?n_id=340&code=cLp2JhUF 
#ENGvsSL #SLvsENG #England #SriLanka #LKA #LK #ODI #ICC #ECB #SLC #Malinga #Sanga #Murali #CricketScores #CricketTamil #SigaramNEWS 

சிகரம் CO: சிகரம் - ஆசிரியர் பக்கம் - 02

வணக்கம் வாசகர்களே! 

நீண்ட கால இடைவெளிக்குப் பின் 'சிகரம்' இணையத்தளம் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நமது 'சிகரம்' இணையத்தளத்துக்கு 'ஆட்சென்ஸ்' விளம்பர அனுமதியைப் பெற்றுக்கொள்வதில் நிலவிவந்த சிக்கல் நிலை காரணமாக 'சிகரம்' இணையத்தளத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாதிருந்தது. 
#சிகரம் #ஆசிரியர்_பக்கம் #தமிழ் #முதற்பக்கம் #செய்தி #சிகரம்பாரதி #SIGARAM  

Tuesday, 9 October 2018

வானவல்லி: முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 08 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் 8


மெல்ல மெல்லப் படைகள் நகரத் தொடங்கியது வனத்தினுள். சிறு சிறு துளி நீர் சேர்ந்து எவ்வாறு பிரவாகம் ஆகுமோ அதுபோல் குழுக்களாய் நகர்ந்த வீரர்கள் நடு வனத்திற்குள் சென்றதும் பெரும் படையாய் உருவெடுத்தார்கள். வீரர்களின் மத்தியில் அமைதியும் கட்டுப்பாடும் குலைந்து ஆக்ரோஷம் பிறந்தது. இது பெரும் பதட்டத்தை உருவாக்கியது தளபதிகளுக்கு. முதல்நாள் இரவு வந்ததும் தளபதிகள் அனைவரும் இரவு உணவை முடித்து ஒன்று கூடினார்கள். முழுமையாக வாசிக்க>>>

வானவல்லி: முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 08 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா 
https://sigaram-one.blogspot.com/2018/10/Mudi-Meetta-Moovendhargal-08.html 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

குறள்நெறி வாழ்வீர்!

அருமறை குறளைக்கற்று
அதுதரும் பொருளைப்பெற்று
நெறிமிகு வழியில்நின்று
நிலத்தினில் வாழ்தல்நன்று மனைவியும் மக்களோடும்
மனதினி உறவினோடும்
மதியுரை நண்பரோடும்
மகிழ்வுடன் வாழ்தல்வேண்டும் 

அளவிலாப் பொருளைப்பெற்று
அளவுடன் செலவுசெய்து
வளமிகுப் பெருமையோடு 
வாழ்கநீர் நீடுவாழ்க!

***
நெஞ்சம்நிறைந்த
வாழ்த்துகளுடன்... 

மானம்பாடி புண்ணியமூர்த்தி 

குறள்நெறி வாழ்வீர்! 
https://newsigaram.blogspot.com/2018/10/kural-neri-vaalveer.html 
#திருக்குறள் #வாழ்க்கை #வழிகாட்டி #அனுபவம் #உண்மை #குறள்நெறி #உறவுகள் #தமிழ் #வலைத்தளம் #வள்ளுவர் #எண்ணம் #சிகரம் 

Monday, 8 October 2018

வானவல்லி: ஆறுதல் பரிசு ஆயிரம் ரூபாய் | சிறுகதை | ராசு

குடிகாரம் பேச்சு விடிஞ்சாலும் தவறாது என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சரியாக காலை ஆறு மணிக்கு பல்லடம் திருப்பூர் சாலையில் தயாராக நின்றிருந்தான் சண்முகன். 

பொன்ராஜின் கேன்வாஸ் கொஞ்சம் லூசாக இருந்தது சண்முகன் காலுக்கு. பொன்ராஜை தவிர யாரும் இரவல் கொடுக்க மாட்டார்கள் என்பது தான் அவ்வளவு லூசான கேன்வாசை சண்முகன் உபரி கயிறு போட்டு இறுக்கி கட்டிக்கொண்டு சக போட்டியாளர்களை பார்வையால் எடை போட்டபடி நின்று கொண்டிருக்க காரணம். முழுமையாக வாசிக்க 

ஆறுதல் பரிசு ஆயிரம் ரூபாய் | சிறுகதை | ராசு  
http://sigaram-one.blogspot.com/2018/10/aarudhal-parisu-aayiram-roobaa.html 
#சிறுகதை #தமிழ் #வாழ்க்கை #பணம் #போட்டி #ஓட்டப்பந்தயம் #பரிசு #சிகரம் #வலைத்தளம் #கடன் #வானவல்லி #கதை #வாசிப்பு 

Sunday, 7 October 2018

கண்ணதாசா | கவிதை | மானம்பாடி புண்ணியமூர்த்தி

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மறைந்த நாளில் என்னால் எழுதப்பட்டு இதுவரை என்னிடமே இருந்துவரும் கண்ணீர் அஞ்சலி (1981-2018) 37 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பார்வைக்கு!

****

கவிதைமழை
பொழிந்து வந்த
கவிஞர்கோவே
கண்ணபிரான்
பற்றுமிக்கக்
கண்ணதாசா -நீ
காலனுடன் சென்றுவிட்ட
செய்திகேட்டுக்
கலங்குதய்யா
எந்தனுள்ளம் கரையுதைய்யா!அழகுதமிழ் மலராலே
பாத்தொடுத்து
அவனியெலாம்
மணம்பரப்பத்
தந்தவேந்தே
பழகுதமிழ் வார்த்தையெலாம்
நீ மறந்து
பறந்துவிட்ட கொடுமைகண்டு
பதைக்குதய்யா!

தாலாட்டுப் பாடல்முதல்
சாவின் எல்லை 
வேக்காட்டில் வேகும்வரைப்
பாடல்தந்தாய்
வித்தகனே தத்துவத்தின் 
எல்லைக்கோடே
விழியிரண்டும்
கண்ணீரில் மூழ்குதய்யா!

விடுகின்றமூச்செல்லாம்
கவிதையாக்கும்
வித்தையினைக் கற்றவனே
கண்ணதாசா
நெடுமூச்சை உள்ளடக்கி
நிலத்தின்மீதே
விழிமூடிப்
படுத்தனையோ
எங்கள்நேசா!

கண்ணனுக்கே மரணமென்றால்
கலங்கமாட்டேன்
கண்ணதாசன் பிரிவதென்றால்
தாங்கமாட்டேன்
எனச்சொல்லி இருந்தேனே
இனியதேனே
என்நெஞ்சை ஏனய்யா
நெருப்பால் சுட்டாய்!

கவித்திறத்தால்
கண்கலங்க வைத்ததாசா
கண்ணீரை நிரந்தரமாய்த்
தந்துவிட்டாய்
தமிழ்வாழும் காலம்வரை
உனதுபாடல் 
தத்துவமாய் எம்நெஞ்சில் 
நிலைக்குமய்யா!

****

பழைய நினைவைப் பகிர்ந்துகொண்ட நிறைவுடன், உங்கள் கவிஞன் மானம்பாடி புண்ணியமூர்த்தியின் வணக்கமும் வாழ்த்துகளும்! 

கண்ணதாசா | கவிதை | மானம்பாடி புண்ணியமூர்த்தி 
http://newsigaram.blogspot.com/2018/10/kannadasa-poem-manampadi-punniyamoorthy.html 
#கவிதை #தமிழ் #கண்ணதாசன் #கவிஞர் #திரையிசை #பாடல் #பாடலாசிரியர் #காதல் #தத்துவம் #எழுத்தாளர் #தமிழகம் #சிகரம் 

Saturday, 6 October 2018

சிகரம் SPORTS: இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | முதலாவது டெஸ்ட் போட்டி | இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்தியாவுக்கான சுற்றுலா - 2018 
முதலாவது டெஸ்ட் போட்டி 
04/10/2018 - 08/10/2018 
மூன்றாம் நாள் ஆட்டம் 

இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

முதலாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - இந்தியா - 649/9 (149.5) 

விராட் கோலி - 139 (230) 

பந்துவீச்சு - மேற்கிந்தியத் தீவுகள் 


தேவேந்திர பிஷூ - 4 விக்கெட் 

துடுப்பாட்டம் - மேற்கிந்தியத் தீவுகள் - 181/10 (48.0) 


சுனில் அம்ப்ரிஸ் - 12 (20) பந்துவீச்சு - இந்தியா 


மொஹம்மத் ஷமி - 2 விக்கெட்  

இரண்டாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - மேற்கிந்தியத் தீவுகள் - 196/10 (50.5) 


சுனில் அம்ப்ரிஸ் - 0 (3) 

Match: India vs Windies, 1st Test - Cricket Score  


Series: Windies tour of India, 2018 

FULL SCORE CARD & MATCH DETAILS HERE 

#INDvsWI #India #Windies #WestIndies #Rajkot #BCCI #CWI #WindiesCricketTour #TamilCricket #CricketScores #PrithviShaw #ViratKohli #RavindraJadeja #KraiggBrathwaite #SigaramNews 

சிகரம் SPORTS: இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | முதலாவது டெஸ்ட் போட்டி | 181 ஓட்டங்களுக்கு சுருண்டது மே.இ

சிகரம் SPORTS: இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | முதலாவது டெஸ...: மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்தியாவுக்கான சுற்றுலா - 2018 முதலாவது டெஸ்ட் போட்டி 04/10/2018 - 08/10/2018 மூன்றாம் நாள் ஆட்டம் #INDvsWI #India #Windies #WestIndies #Rajkot #BCCI #CWI #WindiesCricketTour #TamilCricket #CricketScores #PrithviShaw #ViratKohli #RavindraJadeja #KraiggBrathwaite #SigaramNews

SIGARAM CRICKET | சிகரம் கிரிக்கெட்

#ODI #SAvZIM #SouthAfrica #Zimbabwe #LungiNgidi #Masakadza #Chigumbura #Phehlukwayo #ImranTahir #Klaasen #RSAvZIM #Toss #Bowl #Bat #TamilCricket #SigaramNEWS #ACC #ICC #T20I #China #Thailand #WT20 #icc_world_twenty20_2020 #Australia #Cricket #CricketScores #TamilCricket #Aus #CricketAustralia #SigaramNEWS 

#INDvsWI #India #Windies #WestIndies #Rajkot #BCCI #CWI #WindiesCricketTour #TamilCricket #CricketScores #PrithviShaw #ViratKohli #RavindraJadeja KraiggBrathwaite #SigaramNews 

#ICC #WT20 #Australia #T20IRankings #ICCWT20_2016 #T20I #MRFTyresICCRanking #RegionalQualifiers2018 #RegionalFinals2019 #TamilCricket #SigaramNews

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts