Posts

Showing posts with the label நேர்காணல்

சோறுடைக்கும் சோழநாட்டின் குடிமகள் 'அபிராமி பாஸ்கரன்' உடனான சிகரம் வழங்கும் நேர்காணல்!

Image
சிகரம்: வணக்கம் அபிராமி! சிகரம் இணையத்தளம் சார்பாக உங்களை வரவேற்கிறோம்! அபிராமி பாஸ்கரன்: வணக்கம் சிகரம்: எமது வாசகர்களுக்கு உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். அபிராமி பாஸ்கரன்: வணக்கம். நான் அபிராமி பாஸ்கரன். எனது ஊர் மன்னார்குடி. சோறுடைக்கும் சோழ நாட்டின் குடிமகள். MBA., M.Phil., பட்டதாரி. நான் வெற்றிக்களிறு என்ற சரித்திர நாவலின் ஆசிரியர். வரலாற்றின் மீது அதீத ஆர்வம் உண்டு. சோழமண்டல வரலாற்றுத்தேடல் குழுவின் துணைத்தலைவராக உள்ளேன். முகநூலில் இயங்கும் பொன்னியின் செல்வன் குழுவின் நிர்வாகிகளில் ஒருத்தி. சிகரம் இணையத்தளத்துடன் இணைந்து பயணிப்பத்தில் மகிழ்ச்சி. சிகரம்: தங்களின் எழுத்துப் பயணம் பற்றிக் குறிப்பிடுங்களேன்? அபிராமி பாஸ்கரன்: எனது முதல் நாவல் வெற்றிக்களிறு. தற்பொழுது அடுத்த நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். சில சிறுகதைகளும் எழுதியுள்ளேன். எனக்கு வரலாற்று நாவல் ஒன்று எழுதுவதற்கும், வரலாற்றின் மீதான ஆர்வத்திற்கும் தூண்டுக்கோலாக அமைந்தது அமரர் திரு. கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் தான். Abirami's Articles about Ponniyin Selvan என்ற எனது முகநூல் பக்கத்தில் பொன்னியின் செலவன் கு...

தூறல்கள்: சிகரத்துடன் சில நிமிடங்கள் : கோபால் கண்ணன்

Image
கேள்வி : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?  படைப்பு என்பது மொழியாளுமை மிக்க அறிஞர்கள் மட்டும் புரிந்துகொள்ளும் விதத்தில் தலையைச்சுற்றி மூக்கைத்தொடும் வித்தைக்காட்டி எழுதாமல், எழுத்துக்கூட்டிப் படிக்கும் குறைந்த படிப்பாற்றல் / மொழியறிவுக் கொண்டவர்களும் புரிந்துக்கொள்ளும் விதத்தில் எளிமையான சொல்லாடல்களால் இருத்தல் வேண்டும்.  முழுமையாக வாசிக்க>>>   #கோபால்_கண்ணன் #நேர்காணல் #உரையாடல் #வாசிப்பு #தமிழ் #வலைத்தளம் #எழுத்து #கேள்வி #பதில் #சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #சிகரம் 

தூறல்கள்: சிகரத்துடன் சில நிமிடங்கள் : பௌசியா இக்பால்

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள் பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?  கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?   இந்தக் கேள்விகள் உட்பட மொத்தம் பத்துக் கேள்விகளுக்கு நமது தோழி பௌசியா இக்பால் நம்மோடு மனம் திறந்திருக்கிறார். முழுமையாக வாசிக்க கீழே சொடுக்குங்கள்.  முழுமையாக வாசிக்க   #நேர்காணல் #கேள்வி  #பதில்  #பௌசியா_இக்பால்  #உரையாடல்  #வாசிப்பு  #தமிழ்  #வலைத்தளம்  #எழுத்து  #சிகரத்துடன்_சில_நிமிடங்கள்  #சிகரம் 

மலையகம் வளர்த்த எழுத்தாளர் 'சாரல் நாடன்' உடன் ஒரு நேர்காணல்! - பகுதி 02

Image
மலையக இலக்கிய ஆளுமைகள் குறித்துப் பேசும்போது 'சாரல் நாடன்' தவிர்க்கப்பட முடியாதவர். 'சாரல் நாடன்' இலங்கை, நுவரெலியா மாவட்டம், சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தில் கருப்பையா வீரம்மா தம்பதிகளுக்கு 1944 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி பிறந்தார். தேயிலைத் தொழிற்சாலைகளில் மேலதிகாரியாகப் பணியாற்றிய இவர், சிறுகதை, புதினம் மற்றும் ஆய்விலக்கியங்களை எழுதியதனூடாக மலையக இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளார். 'சாரல் நாடன்' 31.07.2014 அன்று காலமானார். 'சாரல் நாடன்' அவர்களை பாடசாலைக் காலத்தில் 2005 ஆம் ஆண்டு நேர்காணல் செய்திருந்தேன். இந்த நேர்காணல் செப்டெம்பர் 2008 ஆம் ஆண்டு 'செங்கதிர்' கலை இலக்கிய சஞ்சிகையில் வெளியானது. அதனை 'சிகரம்' வாசகர்களுக்காக இங்கே பதிவு செய்கிறோம்.  மலையகம் வளர்த்த எழுத்தாளர் 'சாரல் நாடன்' உடன் ஒரு நேர்காணல்! - பகுதி 01 பகுதி - 02 சிகரம் : உங்களுடைய எழுத்துப் பணிக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு எவ்வாறு அமைந்துள்ளது? சாரல் : எழுத்துப் பணியில் எனது பிள்ளைகளுக்கு ஆர்வமில்லையாயினும் எனது எழுத்துக்களை விரும...

சிகரத்துடன் சில நிமிடங்கள் : நண்பர்கள் பதிப்பகம்

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள்:  பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? நான் வாசகன், எழுத்தன். கூடவே நண்பர்கள் பதிப்பகம் எனும் நூல் மகப்பேறு மையத்தின் வைத்தியன்.  கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? எதிர்மறை எண்ணம் முற்றுப்புள்ளி அளவில் கூட இல்லாமல் இருக்க வேண்டும்.  கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? அரசியல் ஒரு வரியில்லா வர்த்தகம். அவன் மட்டுமே அங்கே விற்கும் ஏமாளி.   கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? உயிருக்கு உதவும் காற்று போன்றது.  கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? எனைப்போன்ற நால்வருக்கு உதவி என்றில்லாமல் உறுதுணையாவது.   கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா? இரண்டுமே இன்றியமையாதது.   கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடு...

சிகரத்துடன் சில நிமிடங்கள் : பாரதி மைந்தன்

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள்  பத்துக் கேள்விகள் - முத்துப் பதில்கள்  கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?  பெயர் - அருள்தாஸ் கிளைம்சென்  புனைபெயர் -பாரதி மைந்தன்  தாய் பெயர் :- ஜெயசீனா  தந்தை பெயர்:- அருள்தாஸ்  வதிவிட முகவரி - பாரதி தாசன் வீதி, 8ம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, இலங்கை  பிறந்த திகதி - 1994.03.11  வயது - 24  தொழில் - சமூக சேவை, வறிய மாணவர்களுக்காக கல்வி ஊக்குவிப்பு  குடும்ப விபரம் :- அம்மா, அப்பா, மாமா, 4 அண்ணா, 4அண்ணி.  தொலைபேசி - 0779071472, 0776584179  மின்னஞ்ஞல் - claimsen25@gmail.com   மேலதிக தகமைகள் : கடந்த 05 ஆண்டுகளாக எழுத்துத் துறையில் இருக்கின்றேன். எனது கன்னிப் படைப்பான உண்ர்வுகளின் பாதை நூலை வெளியிட்டுள்ளேன். ஆதனால் மக்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றுள்ளேன். பத்திரிகைக்கு சில கவிதைகள் எழுதி அனுப்பியுள்ளேன். வானொலியில் கவிதைகள் சொல்லி வருகின்றேன். அத்துடன் டான் தொலைக்காட்சியில் கவிதைகள் சொல்லவா மற்றும் சங்கர பலகையில் கவிதை விமர்சனம், பட...

சிகரத்துடன் சில நிமிடங்கள் : ரேகா சிவலிங்கம்

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள் : பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!   கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?  பெயர் - ரேகா சிவலிங்கம்  வசிப்பிடம் - கம்பர்மலை, யாழ்ப்பாணம்  கல்வி - இசைத்துறை பட்டதாரி  ஈடுபாடு - தமிழ் இலக்கியம் மீது  பொழுதுபோக்கு - கவிதை, கட்டுரைகள் புனைவது  கவிப்பயணம் - உயர்தரத்திலே கற்கும்போது ஆரம்பித்தது என் கவிப்பயணம். அதன்பிறகு என் கவிவரிகள் மித்திரன், வலம்புரி போன்ற பத்திரிகைகளிலும் தற்காலத்தில் யாழ்களரி பத்திரிகையிலும் பிரசுரமாகியுள்ளன. அத்தோடு சர்வதேச வானொலிகள், இலங்கை வானொலி போன்றவற்றில் தனிநிகழ்ச்சிகளாகவும் கூட்டுநிகழ்ச்சியாகவும் என் கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. மேலும் டான் தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெறும் கவிதைகள் சொல்லவா நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பிலே கலந்து கொண்டுள்ளேன். மேலும் கவிக்குழுமங்களின் மூலம் "காதல் கவிதை நாயகி", "வித்தகக்கவி" போன்ற விருதுகளை பெற்றுள்ளேன்.  அத்தோடு பிரான்ஸ் நாட்டின் அனைத்துலக மனித உரிமை சங்கம் மற்றும் புனிதபூமி இணையத்தளம் இணைந்து யாழ் நூலக எரிப்பின் 37 ஆவது ஆண்டு நினைவு ...

சிகரத்துடன் சில நிமிடங்கள் : புதியமாதவி

Image
கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?  பெயர் புதியமாதவி கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?  உண்மையிலிருந்து பிறக்கும். ஆனால் உண்மைக்கும் அப்பாற்பட்டது. ரத்தமும் சதையுமான மனிதர்களின் வாழ்க்கை. ஆனால் ஆடிப்பிம்பங்களும் அல்ல. எழுத்து ஒரு கலை. படைப்பு அக்கலையின் ஜீவன். கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?  சொற்களின் ஒலிக்குப்பைகளால் நிரம்பி இருக்கிறது . கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது?  மொழியே மனிதன். இடம் காலம் பருவம் அவன் மொழியின் ஒலிவடிவங்களைத் தீர்மானிக்கிறது. மொழியின்றி மனிதனிடம் வளர்ச்சி சாத்தியமில்லை. எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும்  அந்தந்த இனக்குழுவின் கருத்துப் பரிமாற்றமாக இருந்த மொழி, இன்று கணினி மொழியாகி  குறியீடுகளுக்குள் புகுந்து தன் சமூகத்தை விசாலப்படுத்தி இருக்கிறது. கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? மானிடம் போற்றுதும். கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது ...