Posts

Showing posts from May, 2015

கொஞ்சம் பேசுவோம்!

                 வணக்கம் வாசகர்களே! ஒரு கவலைக்குரிய விடயம் பற்றி உங்களுடன் பேச வேண்டியுள்ளது. அண்மைக்காலமாக சிறுவர்கள் , பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களே அதுவாகும்.                       அண்மையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவு பிரதேச மாணவி வித்தியா என்பவர் 10 பேர் கொண்ட கும்பலினால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். மாணவியின் உயிர்? வாழ்க்கை??                        ஆங்கில அறிஞர் ஒருவர் இப்படிச் சொல்கிறார் "நான் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் நான் முழு நிர்வாணமாக வீதியில் நடந்து செல்லும் சூழலில் கூட உங்களில் யாருக்கும் என்னைக் கற்பழிக்கும் உரிமை இல்லை". இதுவே உண்மையும் கூட. பெண்ணியம் என்பதும் இதுதான். ஆனால் பெண்களுக்கு இவ்வாறானதொரு சூழல் நிலவுகிறதா என்றால் இல்லை.                          முக நூலில் (facebook ) மாணவி வித்தியாவின் புகைப்படங்களை பகிர்வதும் ஆதரவு தருவதாக கூறிக்கொள்ளும் பதிவுகளை வெளியிடுவதும் தான் இன்றைய நிலவரமாக