Posts

Showing posts from August, 2012

வேலைக்கு போறேன்!

Image
நாளைக்கு நான் வேலைக்கு  போறேன் நண்பர்களே! பத்துச் சாமான் சுத்திக்குடுத்து  பத்துரூபா சம்பாதிக்கப்  போறேன் நண்பர்களே  குடும்பத்துல கஷ்டமுங்க  கல்விக்குக் காசில்லிங்க  கனவெல்லாம் கலைஞ்சுடுச்சு  நாடகமும் முடிஞ்சிருச்சு  அடுத்த வேஷமும் போட்டுக்கத்தான்  நேரமும் வந்துருச்சு  படிக்கப் பிடிக்கலே  பள்ளிக்கூடத்தை பிடிச்சிருக்கு  வாழப் பிடிக்கலே  வாழ்க்கையைப் பிடிச்சிருக்கு  நல்லாச் சொன்னிங்க சிநேகிதர்களே  பொழைக்கத் தெரியாதவன் இவன்னு  பொழைக்கத்தானுங்க போறேன்  போய்ட்டு வாறேன் தோழர்களே!                                              இக்கவிதை இலங்கையின் பிரபல மலையக வார இதழான "சூரியகாந்தி" இதழில் 03.06.2009 இல் வெளியான எனது கவிதை. இது மலையக இளைஞர்களை எண்ணி எழுதப்பட்டதாகும்.   வேலைக்கு போறேன்!   https://newsigaram.blogspot.com/2012/08/velaikku-poren.html  

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07

Image
பகுதி - 01 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01   பகுதி - 02 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02   பகுதி - 03 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03   பகுதி - 04 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 0 4 பகுதி - 05 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05   பகுதி - 06 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06   பகுதி - 07 இரவு விழித்தெழும் முன்னரே நான் விழித்துக் கொண்டேன். அசதியில் சற்று தூக்கம் வந்தது. ஆனால் மனதின் எண்ண அலைகள் தூக்கத்தை வாரி இழுத்துச் சென்றுவிட்டன. திவ்யாவை முதன் முதலில் சந்தித்த போது இருவரும் காதல் வசப்படுவோம் என்று நினைத்துப்பார்த்திருக்கவில்லை. எங்களுடையது மிகவும் கண்ணியமான காதல். இதுவரை அவளைத் தொட்டதோ முத்தமிட்டதோ கிடையாது. பிரிவை சந்திக்க நேர்ந்த போது என்தோளில் சாய்ந்து அழுதாள் திவ்யா. அதுவே முதலும் கடைசியுமாய் எங்களின் ஸ்பரிசமாகிப் போனது. விடிய விடிய குறுஞ்செய்திகளும் விடிந்த பிறகும் தொலைபேசிக்குள்ளேயே தொலைந்து போவதும் எங்கள் காதலில் இருக்கவே இல்லை. ரகசிய இடங்களில் சந்தித்ததுமில்லை. அதனால் தான் கண்ணியமான காதல் என்

நலம் தானா தோழர்களே?

Image
பள்ளிப் பருவமதில் பலகதை பேசி உயிரெனப் பழகி உயர்தரமதிலே கற்று வந்த காலங்கள் கனவு போலாகி மூன்றாண்டுகள்  முடிந்து போய் விட்டன.  ஓரிருவர் தொழிலில். இன்னும் சிலர்  இனிதாய் பல்கலைக்கழகம்  பயில்கின்றனர். திருமணம் செய்துகொண்டு திருமதியாகிவிட்டார் ஒருவர். மற்றும் பேரின் முகவரி கூடத் தெரியாது.  இரண்டாண்டுகள் இணையற்ற நண்பர்களாய் இருந்தோம். பிரியும் நாள் வந்தபோது தான்  சேர்ந்திருந்த போது  செய்த தவறுகள் உணர்ந்தோம். கனவு பல தந்த  காதலையும் தொலைத்துவிட்டு கசப்பாய்த் தெரிந்த கல்வியையும் தொலைத்துவிட்டு விழி பிதுங்கி நின்ற  தோழர்களை எண்ணி துயரப்பட மட்டுமே முடிகிறது.  ஆண்டுகள் இரண்டில் ஆயிரம் அனுபவங்கள். அத்தனையும் வாழ்க்கைக்கு அழகான படிப்பினைகள். எங்கே இருக்கிறீர்கள், எப்படி இருக்கிறீர்கள் என்னருமை தோழர்களே? முகவரி தாருங்கள் முகம் பார்க்க அலைபேசி இலக்கம் தாருங்கள் அழைத்துப் பேச நாடி வருவேன்  நலம் விசாரிக்க தேடி வருவேன் தேவைகளை நிறைவு செய்ய! இப்போதாவது சொல்லுங்கள்!!! நலம் தானா தோழர்களே?