Posts

Showing posts with the label சிறுகதை

வானவல்லி: ஆறுதல் பரிசு ஆயிரம் ரூபாய் | சிறுகதை | ராசு

Image
குடிகாரம் பேச்சு விடிஞ்சாலும் தவறாது என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சரியாக காலை ஆறு மணிக்கு பல்லடம் திருப்பூர் சாலையில் தயாராக நின்றிருந்தான் சண்முகன்.  பொன்ராஜின் கேன்வாஸ் கொஞ்சம் லூசாக இருந்தது சண்முகன் காலுக்கு. பொன்ராஜை தவிர யாரும் இரவல் கொடுக்க மாட்டார்கள் என்பது தான் அவ்வளவு லூசான கேன்வாசை சண்முகன் உபரி கயிறு போட்டு இறுக்கி கட்டிக்கொண்டு சக போட்டியாளர்களை பார்வையால் எடை போட்டபடி நின்று கொண்டிருக்க காரணம்.  முழுமையாக வாசிக்க   ஆறுதல் பரிசு ஆயிரம் ரூபாய் | சிறுகதை | ராசு   http://sigaram-one.blogspot.com/2018/10/aarudhal-parisu-aayiram-roobaa.html  #சிறுகதை #தமிழ் #வாழ்க்கை #பணம் #போட்டி #ஓட்டப்பந்தயம் #பரிசு #சிகரம் #வலைத்தளம் #கடன்  #வானவல்லி  #கதை  #வாசிப்பு 

வானவல்லி : அவள் | சிறுகதை | கதிரவன்

Image
மாலை நேரம். தங்களது பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் கூட்டம். ஆர்ப்பரிக்கும் ஹாரன் சத்தம். சாலையோர வியாபாரிகளின் கூக்குரல்கள். அனைத்தையும் ஒரு சில நொடிகளில் கரு மேகம் தூறல் தந்து பெருமழையாய் பொழிந்தது. மழையின் ஒலியை தவிர எதையுமே உணர முடியாத அமைதிக்கு நடுவே சாலையோர நாற்காலியில் ஒரு உருவம் மட்டும் தனித்து அமர்ந்திருந்தது.  கடைகளில் ஒதுங்கிய மக்களின் கவனம் நாற்காலியை கூர்ந்து கவனிக்க அங்கு இருப்பது ஒரு பெண் என்பதை அறிந்து ஒரு சிலர் குடையோடு அவளிடம் ஓட அவள் எந்தவித சலனமும் இன்றி அமர்ந்திருந்தாள் வானம் நோக்கி. இவர்கள் அவள் அருகில் செல்வதற்குள் ஒரு கார் வேகமாய் வந்து அவள் பக்கத்தில் நின்றதும் அதில் இருந்து வந்த நபர் "வாடாம்மா வீட்டுக்கு போகலாம். மழைன்னா உனக்கு ரொம்ப புடிக்கும்னு அப்பாவுக்கு தெரியும். அதுக்காக வெளியூர்ல வந்து இப்படி நனையணுமா?" என்றவாறு மகளை காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார். அவள் | சிறுகதை | கதிரவன் - முழுமையாக வாசிக்க   சிறுகதை | தமிழ் | வலைத்தளம் | அன்பு | காதல் | அம்மா | காதலி | கணவன் | குடும்பம் | இல்லறம் | தாம்பத்தியம் | உறவுகள் | பிரிவு |...

இருள் - சிறுகதை

Image
இருளிற்கும் காமத்திற்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா என்ன....? இருளுடனான பிரயாணங்கள் இப்போதெல்லாம் சாத்தியப்படுவதே இல்லை. முகத்தில் தொடங்கும் பார்வை படர்ந்து பரவி எங்கெல்லாமோ நிலைக்குத்தி நிற்கின்றது. உடலை மறைக்கத் திமிறும் உடையை ஊடுருவி அதிவேகமாய் பிரயாணிக்கும் விரச பார்வைகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கின்றது. இந்த ஆண்கள் நிஜமாகவே போதையுடன்தான் பிரயாணிக்கிறார்களோ....! பின் எப்படி இத்தனை அருவருப்பை நான் பிரதிபலித்த பின்னும் இடைவிடாமல் பார்வைகளால் ஸ்பரிசிக்க முடிகிறது...? எத்தனை முறைதான் முறைப்பது... எத்தனை முறைதான் சேலையை சரிசெய்வது... என்னோடு சேர்த்து இரண்டு பெண்கள் பேருந்திற்குள் இருக்கிறோம். அவளும் இதே அவஸ்த்தையுடன் தலைகுனிந்தபடி நின்றுகொண்டிருப்பதாய் தோன்றுகிறது. நாங்கள் இருவரும் தனித்து தெரிவதால் இந்த பார்வை மொய்ப்புகளா...? அல்லது இருளின் அடர்த்தி இவர்களுக்கு காம உணர்வை அள்ளி அப்பியுள்ளதா....? பேருந்து விரைந்து கொண்டிருக்கிறது. ஒருவன் என் கழுத்துடன் கீழிறங்கி மார்பு பகுதிக்குள் தன் பார்வையை நிறுத்திக்கொண்டான். நான் நின்றபடி பிரயாணிப்பதால்...

பாரா வின் ஒரே ஒரு அறிவுரை

Image
சிலருக்கு அப்பாவைப் பிடிக்கும். பலருக்கு அம்மாவைப் பிடிக்கும். ஒரு சிலருக்கு யாரையுமே பிடிப்பதில்லை. நமக்கு அப்பாக்கள் இருக்கும் வரை அவர்களைப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிவதே இல்லை. ஏனெனில் கண்டிப்புடனேயே கடைசி வரை இருந்துவிடுவது தான். சிறுவயதில் அப்பாவை இழந்தவர்களுக்குத்தான் அந்த வலி அதிகம் புரியும். இது ஒரு சிறுகதை. அப்பாவை இழந்த ஒரு மகனின் கதை. இருபத்தைந்து வருடங்களாக தன் கூடவே இருந்த தந்தையின் இறுதிக் கிரியை நிகழ்வும் அந்த நிகழ்வின் தாக்கத்தினால் மகனின் எண்ண ஓட்டத்தில் வந்து போகும் சில சம்பவங்களும் தான் கதை. வலிமைமிக்க சொற்களினால் கதையை செதுக்கியுள்ளார் கதாசிரியர் பாரா. ஒவ்வொரு எழுத்துக்களும் நமது இதயத்தின் அடி ஆழத்தைத் தொட்டுவிட்டுத் திரும்புகின்றன. பார்த்தசாரதி ராகவன் என்னும் பாரா தமிழகத்தின் தவிர்க்க முடியாத அடையாளம் எனலாம். 'சென்னை தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்...

அதிகாலைக் கனவு - சிறுகதை

Image
அமெரிக்காவின் நியுயோர்க் நகரம். நேரம் மாலை ஆறு மணி. மின்விளக்குச் சூரியன்கள் தமது ஒளியைப் பரப்ப ஆரம்பித்திருந்த தருணம் அது. இரட்டைக் கோபுரம் என்று சொல்லக் கூடிய வகையிலான ஒரு அலுவலகக் கட்டிடம். கிட்டத்தட்ட ஐம்பது மாடிகளாவது இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். என்னுடைய அறை நாற்பத்து நான்காம் மாடியில் அமைந்திருந்தது. எட்டு எனக்கு ராசியான இலக்கம் என்ற ஒரு எண்ணம் நீண்ட நாட்களாகவே எனக்குள் இருந்து வருகிறது. எனவேதான் எனது அறையை நாற்பத்து நான்காம் மாடியில் மாடி எண் எட்டு வருமாப்போல அமைத்துக் கொண்டேன். நான் யார் என்று கேட்கிறீர்களா? எனது அறையை அமைக்க வேண்டிய இடத்தைத் தீர்மானிக்கும் "வல்லமை"யைப் பெற்றிருப்பதிலிருந்தே தெரிந்து கொண்டிருக்க வேண்டுமே, இந்தப் பாரிய வணிக சாம்ராஜ்யத்தின் தலைவன் நான் தான் என்று. "டொக்....... டொக்......." - எனது அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. "யெஸ்... கம் இன்....." - கதவைத் தட்டியவரை உள்ளே அழைக்கிறேன். எனது பிரத்தியேகச் செயலாளர் டயானா உள்ளே வந்து நின்றாள். டயானா மிக அழகானவள். அத்துடன் புத்திக் கூர்மையும் நிறை...