சிகரத்துடன் சில நிமிடங்கள் : ரேகா சிவலிங்கம்
சிகரத்துடன் சில நிமிடங்கள் : பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? பெயர் - ரேகா சிவலிங்கம் வசிப்பிடம் - கம்பர்மலை, யாழ்ப்பாணம் கல்வி - இசைத்துறை பட்டதாரி ஈடுபாடு - தமிழ் இலக்கியம் மீது பொழுதுபோக்கு - கவிதை, கட்டுரைகள் புனைவது கவிப்பயணம் - உயர்தரத்திலே கற்கும்போது ஆரம்பித்தது என் கவிப்பயணம். அதன்பிறகு என் கவிவரிகள் மித்திரன், வலம்புரி போன்ற பத்திரிகைகளிலும் தற்காலத்தில் யாழ்களரி பத்திரிகையிலும் பிரசுரமாகியுள்ளன. அத்தோடு சர்வதேச வானொலிகள், இலங்கை வானொலி போன்றவற்றில் தனிநிகழ்ச்சிகளாகவும் கூட்டுநிகழ்ச்சியாகவும் என் கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. மேலும் டான் தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெறும் கவிதைகள் சொல்லவா நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பிலே கலந்து கொண்டுள்ளேன். மேலும் கவிக்குழுமங்களின் மூலம் "காதல் கவிதை நாயகி", "வித்தகக்கவி" போன்ற விருதுகளை பெற்றுள்ளேன். அத்தோடு பிரான்ஸ் நாட்டின் அனைத்துலக மனித உரிமை சங்கம் மற்றும் புனிதபூமி இணையத்தளம் இணைந்து யாழ் நூலக எரிப்பின் 37 ஆவது ஆண்டு நினைவு ...