இலங்கையில் சமூக வலைத்தள முடக்கம் சொல்லும் செய்தி
இலங்கையில் 2019.04.21 அன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து பேஸ்புக், வைபர் மற்றும் வாட்ஸப் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் கண்டி திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து குறித்த சமூக வலைத்தளங்கள் முதல் முறையாக முடக்கப்பட்டிருந்தன. இப்போது இரண்டாவது முறையாக கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. Image Credit: Google அண்மையில் நியூஸிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சேர்ச் பகுதியில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களுக்காக பேஸ்புக் கடும் கண்டனங்களை சந்தித்திருந்தது. சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறு பரப்புவதும் வன்முறையைத் தூண்டும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன. தடியெடுத்தவனெல்லாம் தண்டல் காரன் என்பது போல திறன்பேசி வைத்திருக்கும் எல்லோரும் ஊடகவியலாளர்களாகி விடுகிறார்கள். பக்கத்து வீட்டு சண்டை முதல் பக்கத்து நாட்டு சண்டை வரை எல்லாவற்றையும் வரைமுறையின்றி பதிவிடுகின்றனர். தனி மனித தாக்குதல்களும் இன மு...