உலகில் கோபமும் மன அழுத்தமும் அதிகரித்துள்ளன - புதிய ஆய்வில் தகவல்
ஒரு புதிய உலகளாவிய ஆய்வின் படி உலகெங்கிலும் உள்ள மக்கள் அதிக கோபம், மன அழுத்தம் மற்றும் கவலையால் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. Gallup என்னும் நிறுவனம் உலகின் 140 நாடுகளில் உள்ள 151,000 பேரிடம் 2018ஆம் ஆண்டு நடத்திய நேர்காணல் ஆய்வின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வில் பங்கு கொண்ட மூன்றில் ஒரு பகுதியினர் தாம் மனா அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். அத்துடன் ஐந்து பேரில் ஒருவர் சோகம் அல்லது கோபமாக உணர்கின்றனர். Gallup 2019 Global Emotions Report மூலம் மக்களின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான அனுபவங்கள் குறித்து Gallup நிறுவனத்தினர் கேட்டறிந்துள்ளனர். Image Credit : gallup.com ஆய்வில் பங்கேற்ற மக்களின் ஆய்வு நடத்தப்பட்ட நாளுக்கு முந்தைய நாளின் அனுபவங்கள் குறித்து Gallup நிறுவனத்தினர் கவனம் செலுத்தியிருந்தனர். 71% பேர் முந்தைய நாளில்குறிப்பிடத்தக்க மகிழ்ச்சியை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர். மன அழுத்தம், கவலை மற்றும் சோகம் ஆகியன முன்பை விட அதிகரித்துள்ளதாக ஆய்வ...