Posts

Showing posts with the label சி.வெற்றிவேல்

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03

Image
வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03 வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01 இணைப்பு: https://newsigaram.blogspot.com/2016/11/vaanavalliyudan-oru-sariththirap-payanam-01.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02  https://newsigaram.blogspot.com/2021/04/vaanavalli-reading-experience-2.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03 முதலில் வானதி பதிப்பகத்தாரின் பதிப்புரை ஒரு பெரும் எதிர்பார்ப்பை நமக்குள் உருவாக்குகிறது.  'இப்புதினத்தை வாசித்தவர்கள் வாசித்தவர்கள் ஓரளவு சங்ககாலத் தமிழர் வரலாற்றை அறிந்தவர்கள் ஆவார்கள்' என்ற அவர்களது ஒரு வரி போதும், நாவலின் பெறுமதியை உணர்த்துவதற்கு.  அடுத்து, வானவல்லி எழுதத் தொடங்கிய பிறகு தான் சங்க இலக்கியங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வாசிக்க ஆரம்பித்தேன்' என்று என்னுரையில் கூறுகிறார் வெற்றி.  அவரை புதிதாக அறிபவர்களும், இந்த புதினத்தை முதலாவதாக வாசிப்பவர்களும் இந்த கூற்றின் மேல் கொள்ளும் நம்பிக்கையை, புதினம் வாசித்து முடித்த பின்னர் தகர்த்தெறிந்து இருக்கிறார் அவர்.  அதுவே வானவல்லி புதினத்தின் வெற்றியும் கூட.  அத்துடன் என்...

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02

Image
வான வல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01 இணைப்பு: https://newsigaram.blogspot.com/2016/11/vaanavalliyudan-oru-sariththirap-payanam-01.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02  வானவல்லி! நண்பர் வெற்றிவேல் முதன்முதலில் எனக்கு அறிமுகமான வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த தொடர்.  ஒரு பத்துப் பதினைந்து அத்தியாயங்கள் வலைத்தளத்தில் வந்திருக்கும் என நினைக்கிறேன்.  பின்னர் அதனை இடைநிறுத்திவிட்டு புத்தகமாகவே வெளியிட தீர்மானித்தார் வெற்றி.  https://iravinpunnagai.blogspot.com/2013/12/1.html   வலைத்தளத்தில் வெளியிட ஆரம்பித்த போதே பாரிய வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தை மட்டுமேனும் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கலாம் என ரசிகர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.  ஆனால் வலைத்தளத்தில் வாசித்த போது எஞ்சியிருந்த எதிர்பார்ப்பே நாவலை வாசிக்க உதவியது என்றாலும் மறுப்பதற்கில்லை.  அதே போல், நான் உட்பட பலரினதும் விருப்ப நாவலாக / புதினமாக இருப்பது பொன்னியின் செல்வன்.  அந்த நாவலின் சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் சற்றும் குறையாமல் எனக்குத் தந்திருந்தது வானவல்லி.  அத்துடன் வானவல்...

வாசிப்பும் பகிர்வும் -01

Image
வணக்கம் நண்பர்களே!  நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.  இன்று நான் வாசித்துக் கொண்டிருக்கும் சில புத்தகங்களை பற்றி சொல்ல நினைக்கிறேன்.  முதலாவது புத்தகம் அல்ல. எதிர்காலத்தில் புத்தகமாக வெளிவரும். நண்பன் வெற்றிவேல் எழுதும் 'கரிகாலன்' தொடர்.  Image rights reserved to respective owners only. நண்பனின் முதலாவது வெளியீடான 'வானவல்லி' மிக அருமையாக இருந்தது. அதற்கு சற்றும் குறையாமல் 'கரிகாலன்' சுவாரஸ்யமாக இருக்கிறது.  ஒவ்வொரு அத்தியாயமும் சுவாரஸ்யம் குன்றாமல் வாசிக்க சொல்லி ஈர்க்கிறது. விட்டால் நாள் முழுவதும் வாசித்துக் கொண்டே இருக்கலாம்.  வார்த்தை பிரயோகங்களில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றம் தேவை என நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் போன்றவற்றின் பாதிப்பாக இது இருக்கலாம்.  ஆனால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை என்றே சொல்ல வேண்டும். மிகுதியை பிறகு சொல்கிறேன்.  மற்றைய புத்தகங்கள் கோபிநாத் எழுதிய 'ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!' மற்றும் அப்துல் ரகுமானின் 'பூப்படைந்த சப்தம்' ஆகியன.  இந்த இரண்டு புத்தகங்களை பற்றியும் ...

‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ - சிறுகதைப் போட்டி – 2018

Image
‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணப்படுத்தும் என்பார்கள். ஆம், மனித சமூகத்தின் வளர்ச்சியில் வாசிப்புக்குப் பெரும் பங்குண்டு. ஒரு நல்ல புத்தகம் ஒவ்வொரு வாசகனையும் வேறோர் உலகத்துக்கு அழைத்துச் செல்லும். வாசிப்பு அருகிவரும் சூழலில் சங்க இலக்கியம் மீதான ஆர்வமும் அறிவும் குறைந்து வருவது வருந்தத்தக்கது. சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல புரிந்துகொண்டால் சங்க இலக்கியமும் கடினமானதாக இருக்காது. சங்க இலக்கியம் நமது மரபு, நமது சொத்து, நமது அடையாளம். ஆகவே தமிழார்வமுள்ள அனைவரும் சங்க இலக்கியங்களையும் அறிந்திருப்பது தேவையாகும். ஆகவே சங்க இலக்கியங்களை அனைவரும் எளிமையாகவும், சுவாரசியமாகவும் படிக்க வைக்கும் ஓர் முயற்சியாக வென்வேல் சென்னி வாசகர் வட்டத்தின் சார்பாக சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் போட்டியில் பங்கெடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.  ‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ - சிறுகதைப் போட்டி – 2018   முடிவுத் திகதி : 10.07.2018 அனுப்ப வேண்டிய முகவரி : tamilvetrivel@gmail.c...

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 03

Image
அன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் வானவல்லி நாயகன் வெற்றிவேல்- அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் பதில் கடிதம். நலம், நலமறிய ஆவல்.  உன் பதில் மடல் கண்டேன். மகிழ்ச்சி. இல்லற வாழ்வின் அடுத்த கட்டத்தில் நான் அடியெடுத்து வைத்துள்ளது குறித்து உனது வாழ்த்துக்களுக்கு நன்றி. உனது அறிவுரைகள் பெறுமதி மிக்கவை. சவால் மிகுந்த எதிர்காலத்திற்குள் அடியெடுத்து வைக்க நம் குழந்தைகளுக்கு நிறையவே கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. பழைமையைக் கற்றுக் கொடுக்கவும் புதுமையை பழக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். சமூகத்தையும் அதன் சவால்களையும் தைரியத்துடன் முகம் கொடுக்கக் கற்றுத்தர வேண்டும். புத்தகக் கல்வி வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. அனுபவக் கல்வியே வாழ்வின் அடிப்படை என்பதை உணர்த்த வேண்டும். மேலும் முக்கியமாக தமிழைக் கற்றுத்தர வேண்டும். நம்மில் பலர் மறந்துவிடும் முக்கியமான விடயம் இது. தமிழில் எழுத, பேச, வாசிக்க மட்டுமல்லாமல் தமிழனாகவே வாழவும் கற்றுத்தர வேண்டும். சுயமாக இயங்கவும் முடிவெடுக்கவும் கற்றுத்தர வேண்டும். ஆண் - பெண் உறவைக் கற்றுத்தர வேண்டும். காதலைக் கற்றுத்தர வேண்டும். மீண்டும் உனது அறிவுரைகளுக்கு நன்ற...

'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! 'வானவல்லி' நமது வலைத்தள நண்பர் சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் அவர்களின் எண்ணத்தில் கருவாகி கைவண்ணத்தில் உயிராகி வெளிவந்திருக்கும் வரலாற்றுப் புதினம். 'வானவல்லி'க்காக ஒரு நேர்காணல் வேண்டும் என நண்பர் வெற்றியிடம் கேட்டேன். 'ஆகட்டும்' என உடன் ஒப்புக் கொண்டவர் பதில்களை 'வானவல்லி' வெளியானதும் தருகிறேன் என்று கூறினார். அத்துடன் 'நண்பா, நான் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் மாணவப் பத்திரிக்கையாளராக பணியாற்றியபோது ஒரு விடயத்தை அறிந்து கொண்டேன். அதாவது நமது கேள்விகள் மட்டுமே நேர்காணல் கொடுப்பவரை மட்டும் அல்லாமல் நம்மையும் வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தும் என்று. ஆதலால் வழக்கமாக தொடுக்கப்படும் கேள்விகள் மட்டும் அல்லாமல் வாசிப்பவரையும் தூண்டும் விதத்தில் கேள்விகள் அமைவது சிறப்பு.' என்று ஆலோசனையும் கொடுத்தார். தற்போது 'வானவல்லி' வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. நான் 'வானவல்லி'யை நம்மபுக்ஸ் என்னும் இணையத்தளத்தின் மூலம் கொள்வனவு செய்தேன். ஆனால் நூலை இலங்கைக்கு தருவிப்பதற்குள் போத...

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 02

அன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் வானவல்லி நாயகன் வெற்றிவேல் - அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் பதில் கடிதம். நலம், நலமறிய ஆவல். நண்பா இப்படியும் ஒரு நண்பனா என்று சிந்திக்க வைத்த ஒரு நண்பன் நீ. நம் நட்பு முகம் பாராது எழுத்தைப் பார்த்து வந்த நட்பு. எழுத்துக்களைப் பற்றிய விடயங்களைப் பகிர ஆரம்பித்து இப்போது தனிப்பட்ட விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு நீண்டிருக்கிறது எம் நட்பு. வைபரின் புண்ணியத்தில் முகம் பார்த்துக் கொண்டோம். வாட்ஸப்பின் உபயத்தில் உரையாடிக் கொண்டிருக்கிறோம். இணையம் தந்த இணையற்ற நட்பு உன் நட்புதான். உன்னைப் போன்றே இலங்கைக்குள் எனக்குக்  கிடைத்த நட்புதான் 'அதிசயா'. நினைவிருக்கும் என நம்புகிறேன். அவரையும் இன்னும் நேரில் காணும் வாய்ப்புக் கிட்டவில்லை. நான் தமிழகம் வரும் வேளை முதலில் உன்னைத்தான் சந்திக்க விரும்புகிறேன். இவ்வளவு நெருக்கமாய் நம் நட்பு அமையக் காரணம் எது? தெரியவில்லை. ஆனால் பிரிவொன்று நேர்ந்துவிடக் கூடாது என்பது மட்டுமே என் பிரார்த்தனை. இல்வாழ்க்கை சிறப்பாக உள்ளது. அண்மைக் காலங்களில் தங்கையுடன் உரையாடினாயல்லவா? கல்விப் பிண்ணனி குறைவாக இருந்தாலும் குணத...

விறல்வேல் வீரனுக்கோர் மடல் – பதில் கடிதம்

வணக்கம் வாசகர்களே! இணையம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தி ஆகிவிட்டன. இணையம் நன்மை, தீமை என இரண்டையும் இந்த உலகத்திற்கு வழங்கி வந்தாலும் இணையம் எனக்களித்த பரிசாக வெற்றிவேல் உடனான நட்பைக் காண்கிறேன். என் கடிதத்திற்கு வெற்றியின் பதில் கடிதம் கிட்டியுள்ளது. அக்கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு. பதில் கடிதம் விரைவில்........ விறல்வேல் வீரனுக்கோர் மடல் – பதில் கடிதம் பேரன்புள்ள நண்பனுக்கு, வணக்கம். நான் நலம் நண்பா. நீயும் நலமாக இருப்பாய் என்று நம்புகிறேன். கடிதத்தைத் தொடங்கும் முன்பு எனது நல்வாழ்த்துகளை உனக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். திருமண நல்வாழ்த்துக்கள் நண்பா.  ‘செம் புலப் பெயல் நீர் போல; அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’   என்ற சங்கத் புலவனின் வாக்கினைப் போன்று தாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடனும், அன்புடனும் வாழ வாழ்த்துகிறேன். நீ உனது திருமணச் செய்தியை அனுப்பியபோது என்னால் வாழ்த்து மட்டுமே தெரிவிக்க முடிந்தது. நேரில் வந்து வாழ்த்த விரும்பியும், இயலாமல் போய்விட்டது. தொடர்பு கொண்டு பேசவும் இயலவில்லை. உனது இல்வாழ்க்கை எப்படி சென்று கொண்டிருக்கிறது நண்பா? முதல...