‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ - சிறுகதைப் போட்டி – 2018
‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018
வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணப்படுத்தும் என்பார்கள். ஆம், மனித சமூகத்தின் வளர்ச்சியில் வாசிப்புக்குப் பெரும் பங்குண்டு. ஒரு நல்ல புத்தகம் ஒவ்வொரு வாசகனையும் வேறோர் உலகத்துக்கு அழைத்துச் செல்லும். வாசிப்பு அருகிவரும் சூழலில் சங்க இலக்கியம் மீதான ஆர்வமும் அறிவும் குறைந்து வருவது வருந்தத்தக்கது. சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல புரிந்துகொண்டால் சங்க இலக்கியமும் கடினமானதாக இருக்காது. சங்க இலக்கியம் நமது மரபு, நமது சொத்து, நமது அடையாளம். ஆகவே தமிழார்வமுள்ள அனைவரும் சங்க இலக்கியங்களையும் அறிந்திருப்பது தேவையாகும். ஆகவே சங்க இலக்கியங்களை அனைவரும் எளிமையாகவும், சுவாரசியமாகவும் படிக்க வைக்கும் ஓர் முயற்சியாக வென்வேல் சென்னி வாசகர் வட்டத்தின் சார்பாக சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் போட்டியில் பங்கெடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ - சிறுகதைப் போட்டி – 2018
முடிவுத் திகதி : 10.07.2018
அனுப்ப வேண்டிய முகவரி : tamilvetrivel@gmail.com
விதிமுறைகள்:
- போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளோ, குறுநாவல்களோ சங்க காலப் பாடல்களின் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும்.
- சிறுகதை / குறுநாவலின் இறுதியில் அடிக்குறிப்பாக எடுத்துக்கொள்ளப்பட்ட சங்கப் பாடல் மற்றும் ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.
- அனுப்பி வைக்கப்படும் கதையோடு எழுத்தாளரின் பெயர், தொடர்பு எண், முகவரி ஆகியவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.
- தமிழில் அனுப்பப்படும் சிறுகதைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- கதை நிகழ்காலத்திலோ அல்லது சங்க காலத்திலோ நடக்கும்படியாக எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அறிவியல் புதினமாகக் கூட எழுதலாம்.
- கதைகளின் பக்கங்கள் / வார்த்தை எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடும் கிடையாது.
- இப்போட்டிக்கு அனுப்பப்படும் கதைகள் எழுத்தாளரின் சொந்த முயற்சியாக இருத்தல் வேண்டும்.
- இதுவரையில் ஊடகங்களில் வெளிவராத படைப்பு என்ற உத்தரவாதம் போட்டியாளரால் தரப்படல் வேண்டும். இதற்கு முன்பு வேறு நூல்களிலோ, நாளேடுகளிலோ, வலைப்பூக்களிலோ, சமூக வலைத்தளங்களிலோ பகிரப்பட்ட படைப்புகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
- கணிணித் தமிழ் எழுத்துருவில் (unicode font) கதைகள் அனுப்பப்பட வேண்டும்.
- படைப்புகளை tamilvetrivel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, மின்னஞ்சல் ‘பொருள்’ (Subject) – ‘வென்வேல் சென்னி சிறுகதைப் போட்டி 2018’ என்று குறித்து 10.07.2018 க்குள் வந்தடையுமாறு அனுப்ப வேண்டும்.
- அனுப்பி வைக்கப்படும் சிறுகதைகள் www.writervetrivel.comல் வெளியிடப்படும்.
- வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் பெயர்கள் 09.08.2018 அன்று அறிவிக்கப்படும்.
- தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கதைகள் புத்தகமாக வானதி பதிப்பகம் மூலம் வெளியிடப்படும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஒருவர் எத்தனைக் கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம், எந்தவித கட்டுபாடுகளும் இல்லை.
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
உதாரணக் கதைகளுக்கு :
நடுவர்கள்:
- திரு. உதயணன்
- திரு. சக்தி ஸ்ரீ
- திரு. சுந்தர் கிருஷ்ணன்
- திரு. சி.வெற்றிவேல்
பரிசுகள்:
முதல் பரிசு – ரூ. 5,000
இரண்டாம் பரிசு – ரூ. 4,000
மூன்றாம் பரிசு – ரூ.3,000
ஆறுதல் பரிசு – ரூ.1,000 (மூன்று நபர்களுக்கு)
சங்க கால இலக்கியங்களை அனைவரையும் எளிமையாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம். அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
பங்குகொள்ளும் அனைவருக்கும் எம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சி.வெற்றிவேல்,
சாலைக்குறிச்சி.
சிகரம் இணையத்தளம் தன்னார்வப் பங்காளராக இணைந்து இப்போட்டிக்கு ஆதரவளிக்கிறது. சங்ககால இலக்கியங்களை உலகறிய செய்யும் இம்முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறோம். இம்முயற்சியை தொடர்ந்து நடத்தவும் உங்கள் அனைவரினதும் ஆதரவு எமக்குத் தேவை. வெல்க தமிழ்!
#வென்வேல்_சென்னி_வாசகர்_வட்டம்_சிறுகதைப்_போட்டி_2018 #சிறுகதைப்_போட்டி #வென்வேல்_சென்னி #வாசகர்_வட்டம் #சிகரம் #வெற்றிவேல் #வானவல்லி #தமிழ் #இலக்கியம் #சங்க_கால_இலக்கியம் #Venvel_Senni_Reader_Circle_ShortStory_Competition_2018 #ShortStory_Competition #Venvel_Senni #Reader_Circle #Sigaram #Vetrivel #Vaanavalli #Tamil #Thamizh #Literature #sigaramco
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்