உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

கிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கால்பந்து விளையாட்டு உலகிலுள்ள அநேக நாடுகளினால் விளையாடப்பட்டு வருகிறது. ஆனால் கிரிக்கெட் பத்து அல்லது பதினைந்து நாடுகளினால் மட்டுமே விளையாடப்பட்டு வந்தது. ஆகவே கிரிக்கெட் விளையாட்டை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்காக இருபது-20 கிரிக்கெட் போட்டிகளை விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 104 உறுப்பு நாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

நன்றி : இணையம் 


தற்போது 18 நாடுகள் இருபது-20 கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வருகின்றன. பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு 2018.07.01 திகதியில் இருந்தும் ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு 2019.01.01 திகதியில் இருந்தும் அனைத்து நாடுகளுக்குமான இருபது-20 கிரிக்கெட் போட்டிகளை விளையாடும் அனுமதி வழங்கப்படவுள்ளது. கிரிக்கெட் போட்டிகளுக்கான விதிமுறைகளில் விரைவில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. வருங்காலத்தில் அதிகளவு இருபது-20 போட்டிகளை விளையாடுவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

நன்றி : ESPN Cricinfo


மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளும் இடம்பெறவுள்ளன. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியைப் போல இது அமையும். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் 12 நாடுகளில் 09 நாடுகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளன. 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 09 நாடுகள் பங்கேற்கும் 27 டெஸ்ட் தொடர்களில் இருந்து இறுதிப் போட்டிக்கான இரண்டு அணிகள் தேர்வு செய்யப்படும். சிம்பாப்வே, ஆஃகானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இத்தொடரில் பங்கேற்காது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 06 அணிகளை எதிர்த்தாட வேண்டும். 

நன்றி : இணையம் 


இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2019-21 மற்றும் 2022-24 ஆகிய இரண்டு தொடர்களிலும்ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடாது. இரண்டு அணிகள் பங்கேற்கும் ஒவ்வொரு தொடரும் குறைந்தபட்சம் இரண்டு டெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கியிருக்க வேண்டும். 2019 ஜூலை முதல் 2021 ஜூன் மாதம் வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இடம்பெறும். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் அணிகள்:

அவுஸ்திரேலியா 
பங்களாதேஷ் 
இங்கிலாந்து 
இந்தியா 
பாகிஸ்தான் 
நியூஸிலாந்து 
தென்னாபிரிக்கா 
இலங்கை 
மேற்கிந்தியத் தீவுகள் 

இறுதிப் போட்டி ஜூன் 10-14, 2021 இல் இடம்பெறும். இறுதிப்போட்டி சமநிலையில் முடிவடைந்தால் அல்லது இரத்தானால் தொடரில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெறும் அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும். ஒவ்வொரு அணியும் ஆறு அணிகளுக்கெதிராக விளையாடும் தொடர்களில் மூன்று தொடர்கள் உள்நாட்டிலும் மூன்று தொடர்கள் வெளிநாட்டிலும் விளையாட வேண்டும். இந்த தொடரில் நாணய சுழற்சியை இல்லாது செய்வதற்கு ஆலோசிக்கப்படுகிறது. நாணய சுழற்சிக்குப் பதிலாக விருந்தினராக வரும் அணி துடுப்பாட்டம் அல்லது பந்துவீச்சை தேர்வு செய்ய அனுமதிக்க எதிர்பார்க்கப்படுகிறது. 

நன்றி : ESPN Cricinfo


கிரிக்கெட் விளையாட்டு காலத்துக்குக் காலம் பல்வேறு மாற்றங்களை எதிர்நோக்கி வந்துள்ளது. இனி வரும் மாற்றங்கள் கடந்த கால மாற்றங்களை விட சிறப்பானதாகவும் அனைவரினதும் எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்வதாகவும் அமைய வேண்டும் என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும். எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

#கிரிக்கெட் #உலகடெஸ்ட்சாம்பியன்ஷிப்2019-21 #இருபது-20கிரிக்கெட் #சிகரம்ஆடுகளம் #Cricket #WorldTestChampionship #WorldTestChampionship2019-21 #T20I #SigaramSports #ICC 

குறிப்பு: 
பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் பதிப்புரிமைக்கு உட்பட்டவையாக இருக்கலாம். பதிவுக்காக மட்டுமே அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. வியாபார நோக்கம் எதுவும் கிடையாது. புகைப்படங்கள் அந்தந்த இணையத்தளங்களுக்கு மட்டுமே உரித்தானவை ஆகும். 

Comments

  1. I’m impressed, I have to say. Really not often do I encounter a weblog that’s both educative and entertaining, and let me tell you, you might have hit the nail on the head. Your concept is outstanding; the difficulty is one thing that not enough people are speaking intelligently about. I am very comfortable that I stumbled throughout this in my search for something referring to this. free online casino slots

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!