பிக் பாஸுக்கு தடையில்லை! நீதிமன்றம் அறிவுப்பு!
பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவத்துக்கு கடந்த வாரம் முதலே சிக்கல்கள் ஆரம்பித்திருந்தன. தமிழ்நாடு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழகத் தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட வேண்டும். ஆனால் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் படப்பிடிப்புக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலாளர்கள் 90%மானோர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். முதலாம் பருவத்திலும் இதே பிரச்சினை ஏற்பட்டிருந்த போதும் 'இந்த முறை மட்டும் விட்டிருங்க' என்பது போல பேசி முடித்திருக்கின்றனர். அனால் இம்முறையும் அது போலவே நடைபெற விஷயம் பெரிதாகியிருக்கிறது.
பிக் பாஸ் படப்பிடிப்புக்கு இந்த இரண்டாம் பருவத்தில் மும்பை தொழிலாளர்கள் 90%மானோரும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தைச் (FEFSI) சேர்ந்த தொழிலாளர்கள் 10%மானோரும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். பிக் பாஸ் படப்பிடிப்பு தொழிநுட்பங்கள் தமிழகத்திற்குப் புதிது என்பதால் பெப்சி சங்கம் தமிழகத் தொழிலாளர்கள் 50%மானோரை மட்டுமேனும் பயன்படுத்துமாறும் தொடரும் அடுத்தடுத்த பருவங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் பெப்சி சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.
ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் ஒளிபரப்பை இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்துமாறு விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு பெப்சி சங்கம் அறிவித்திருந்தது. மேலும் 100 பெப்சி சங்க தொழிலாளர்களுடன் பிக் பாஸ் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் உத்தியோக பூர்வ ஒளிபரப்பாளரான எண்டமோல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெப்சி சங்கம் பிக் பாஸ் படப்பிடிப்புக்கு எந்தவொரு தடையும் ஏற்படுத்தக் கூடாது என தடையுத்தரவு பெற்றிருக்கிறது. இனி இந்த விவகாரத்தில் பெப்சி சங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நீதிமன்றம் மூலமாகவே மேற்கொள்ள முடியும். இது பெப்சி சங்கத்துக்கு பின்னடைவைத் தருவதாக அமைந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் கூட பெப்சி சங்கத்தின் ஒரு உறுப்பினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #BiggBoss #BiggBossTamil #VijayTV #Mumtaz #Mamathi #KamalHassan #Elimination #Nomination #Eviction #BB2 #SIGARAMCO #சிகரம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்