Posts

Showing posts from September, 2013

கந்தசாமியும் சுந்தரமும் - 01

Image
"கந்தசாமி அண்ணே ஏன் அமைதியா உக்காந்திருக்கீங்க?" - வீட்டு முன்றலில் நாற்காலியில் அமர்ந்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்த கந்தசாமியிடம் வினவினான் சுந்தரம். "யாரு சுந்தரமா? வாப்பா... அது ஒண்ணுமில்ல, இன்னிக்கு உலக அமைதி தினமில்லையா? அதான்." - என்று குசும்பாகக் கூறினார் கந்தசாமி. "உலக அமைதி தினம் - மாகாண சபைத் தேர்தல்! ஆஹா என்ன ஒரு பொருத்தம்?" "ஆமா சுந்தரம். நானும் அத தான் யோசிச்சேன். நீயே சொல்லிட்ட." "ஆமாண்ணே யாருக்கு வாக்களிச்சீங்க?" "தேர்தல் முடிவு வரட்டும், சொல்றேன்." "ஏன் அப்படி சொல்றீங்க?" "செவுத்துக்குக் கூட காதிருக்கும். யார் காதுல சரி விழுந்தா விவகாரமாகிப் போகுமடா." "அதுவும் சரிதாண்ணே! இந்த மாகாண சபைத் தேர்தல் பத்தி என்ன நினைக்கிறீங்க?"    "ஒரு முடிவோட தான் வந்திருக்க போல?" "நம்ம என்ன முடிவெடுக்குறது? மக்கள் அவங்களோட முடிவ சொல்றதுக்கான 9 மணித்தியால கால அவகாசம் முடிஞ்சு போச்சு. நம்ம மன ஆறுதலுக்காக எதுனாச்சும் பேசலாமேன்னு தான் கேட்டேன்."

கற்பிழந்தவள்

Image
வணக்கம் நண்பர்களே! நான் எழுதிய கவிதைகள் அடங்கிய நூல் ஒன்றை விரைவில் வெளியிடும் எண்ணம் தற்போது சற்றே துளிர் விட்டிருக்கிறது. எனவே, அதற்கு முன்னோட்டம் பார்க்கும் விதமாக இதுவரை "சிகரம்" வலைத்தளத்தில் வெளியான கவிதைகளை வரிசைக்கிரமமாய் அவற்றுக்கான இணைப்புகளுடன் இங்கே தொகுத்திருக்கிறேன். ஒவ்வொரு இணைப்புகளையும் தவறாமல் படித்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிச் செல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த முன்னோட்ட முயற்சிக்கும் சரி, வெளிவரவிருக்கும் நூலுக்கும் சரி தற்போதைக்கு "கற்பிழந்தவள்" என்றே நாமமிட்டிருக்கிறேன். சரி, அதிகம் பேசாமல் கவிதைத் தொகுதிக்குள் நுழைவோம். 01. நலம் தானா தோழர்களே? 02. வேலைக்கு போறேன்!. 03. குருவியின் பயணம் 04. நட்சத்திர நிலவுகள் 05. நீ-நான்-காதல் - 01 06. நீ-நான்-காதல் - 02 07. நீ-நான்-காதல் - 03 08. மறுபடியும் வருவேன் 09. கற்பிழந்தவள் 10. பிரிவோன்றே முடிவல்ல 11. காத்திருப்பு உங்கள் அங்கீகாரத்திற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.பூச்செண்டோ கல்லடியோ எதற்கும் தயாராய் இருக்கிறேன். மனதில் பட்டதைச் சொல்லுங்

நவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதியா?

Image
வணக்கம் வாசகர்களே! இந்த வாரம் புதன் கிழமையன்று [2013-09-11] மாலை மூன்று மணி. எமது தொழிற்சாலையின் தேநீர் இடைவேளை. தொழிற்சாலை உத்தியோகத்தர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த தருணம். அந்த இடத்தில் தமிழன் என்ற வகையில் நான் மட்டுமே இருக்க, மீதமிருந்த நான்கு பேரும் சிங்களவர்கள். அப்போது அவ்விடத்தில் நவநீதம்பிள்ளை குறித்த பேச்சொன்று எழுந்தது.   அப்போது கருத்துரைத்த 60 வயது மதிக்கத்தக்க சக அலுவலர் கூறிய கருத்து "நவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதி" என்பதாகும். மேலும் அவர் கூறுகையில் "நவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதி. அதனால் தான் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். தமிழர்களுக்கு அரசு எத்தனை சலுகைகளை வழங்கியுள்ளது? சொகுசு பேரூந்துகள், தொலைக்காட்சித் திரையுடன் கூடிய புகையிரதம், பாதை, கல்வி என பல விடயங்களை அரசு வழங்கி வருகிறது. புலிகள் காலத்தில் கஷ்டப்பட்ட மக்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள். இவ்வளவு செய்தும் மக்கள் ஏன் நவநீதம்பிள்ளைக்கு ஆதரவாக பேசுகிறார்கள்? மக்கள் இன்னும் உண்மையை உணராதவர்களாக உள்ளனர்." - என்று குறிப்பிட்டா

புகையிரதப் பேரூந்து

Image
  வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். மேலேயுள்ள புகைப்படத்தைப் பார்த்ததும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? இரண்டு பேரூந்துகளை ஒன்றிணைத்து புகையிரதமாக்கியுள்ள புதுமையே அது. ஆம், இலங்கையின் "மதவாச்சி" என்னும் இடத்திலிருந்து "மடு றோட்" என்னும் இடத்திற்கே இப் புகையிரதப் பேரூந்து பயணிக்கிறது. மதவாச்சியிலிருந்து புறப்பட்டு செட்டிகுளம் வழியாக மடு றோட் நோக்கிப் பயணிக்கிறது. புறப்படும் இடம், நிறுத்துமிடம் அடங்கலாக மொத்தமே மூன்று தரிப்பிடங்கள் மட்டுமே.     மே  மாதம் 14 ஆம் திகதி, 2013 இலேயே இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 45 கி.மீ தூரம் கொண்ட பயணப் பாதைக்கான பயணக்கட்டணம் ரூ 45 மட்டுமே. மணிக்கு 90 கி.மீ என்ற வேகத்தில் "புகையிரதப் பேரூந்து" பயணிக்கிறது.  புகையிரதப் பேரூந்தின் உட்புறம்  தற்போது அப்பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவையான போக்குவரத்துத் தேவையினை இது பூர்த்தி செய்து வருகிறது. ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் வீதம் மதவாச்சி மற்றும் மடு வில் இருந்து செயற்படுகிறது. புதிதாக அமைக்கப் பட்டுள்ள இந்த புகையிரதப் பாதையானது

தேன் கிண்ணம் - பாரப்பா பழனியப்பா.......

Image
அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள். எத்தனை தான் புதிது புதிதாக பாடல்கள் வந்து கொண்டே இருந்தாலும் பழைய பாடல்கள் என்றால் அதற்கு நிகர் சொல்ல ஏதுமில்லை. ஆனாலும் புதிய பாடல்களிலும் பல அருமையான பாடல்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. நீங்கள் எப்படியோ நான் அறியேன். ஆனால் நான் பழைய பாடல்களின் பரம ரசிகன். இந்தப் பதிவானது தமிழ்த் திரைப்படப் பாடல்களை ஒரு கருப்பொருளின் அடிப்படையில் தேடிப்பார்க்கும் ஒரு பதிவாகும். கருப்பொருளாக பின்வரும் பாடலடிகளில் இருந்து ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. "பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் ஊரப்பா பெரியதப்பா..... உள்ளம் தான் சிறியதப்பா...... ஊரப்பா பெரியதப்பா..... உள்ளம் தான் சிறியதப்பா......"                                                                                                  (பாரப்பா ) (திரைப்படம் : பெரிய இடத்துப் பெண் ) ஆம். உள்ளம் பற்றி வெளிவந்துள்ள பாடல்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வரிகளை இங்கே பார்க்கப் போகிறோம்.  பாடல் வரிகளைத் தொடர்ந்து

காத்திருப்பு!

Image
பள்ளிக்கூடம் போகணும் பாதை சரியில்லே குண்டும் குழியுமாயிருக்கு குதிரையோடிய தடமிருக்கு கல்விக்கு வழியில்லே கவனிக்க யாருமில்லே அமைச்சர் சாமிகளெல்லாம் அருளும் குடுக்கலே ஐயா கனவான்களே ஐயமின்றி நம்புங்களே பாதையை செஞ்சித்தாங்க - விழி பார்த்திருக்கேன் நானுங்க! குறிப்பு: கவிதை எழுதப்பட்டது - 2010.05.30 பாதை சீரின்மை காரணமாக கல்வி கேள்விக் குறியாகிப் போன ஒரு பிஞ்சு உள்ளத்தின் குமுறலாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படிக்கு, அன்புடன், சிகரம்பாரதி.

ஒரு கனவு நனவாகிறது.

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! ஒரு குறுகிய பதிவொன்றினூடாக எனது வலைத்தள மீள் பிரவேசத்திற்கு அடியிட்டுச் செல்ல வந்திருக்கிறேன்.   2013.09.01 ஞாயிறன்று எனக்கான மடிக்கணினியை இலங்கை ரூபாய் மதிப்பில் 86000 க்கு கொள்வனவு செய்துள்ளேன். இதன் மூலம் தொடர்ந்து வலைப்பதிவுகளை இடவும் நண்பர்களின் தளங்களுக்கு கருத்துரை இடவும் வசதியாக அமையும். இதற்காகவே இத்தனை நாள் காத்திருந்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மாதாந்த தவணை முறையில் தான் கொள்வனவு செய்துள்ளேன். கட்டணத்தை முழுமையாக செலுத்தி முடிக்கும் வரை திருப்திப் பட்டுக் கொள்ள இயலாது என்றாலும் முழுமையாக செலுத்தி முடிப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஆகவே, இனி தொடர்ந்து என்னிடமிருந்து நீங்கள் பதிவுகளை எதிர்பார்க்கலாம் என்பதை கூறிக் கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுவது, சிகரம்பாரதி.