புகையிரதப் பேரூந்து
வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். மேலேயுள்ள புகைப்படத்தைப் பார்த்ததும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? இரண்டு பேரூந்துகளை ஒன்றிணைத்து புகையிரதமாக்கியுள்ள புதுமையே அது. ஆம், இலங்கையின் "மதவாச்சி" என்னும் இடத்திலிருந்து "மடு றோட்" என்னும் இடத்திற்கே இப் புகையிரதப் பேரூந்து பயணிக்கிறது.
மதவாச்சியிலிருந்து புறப்பட்டு செட்டிகுளம் வழியாக மடு றோட் நோக்கிப் பயணிக்கிறது. புறப்படும் இடம், நிறுத்துமிடம் அடங்கலாக மொத்தமே மூன்று தரிப்பிடங்கள் மட்டுமே.
மே மாதம் 14 ஆம் திகதி, 2013 இலேயே இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 45 கி.மீ தூரம் கொண்ட பயணப் பாதைக்கான பயணக்கட்டணம் ரூ 45 மட்டுமே. மணிக்கு 90 கி.மீ என்ற வேகத்தில் "புகையிரதப் பேரூந்து" பயணிக்கிறது.
புகையிரதப் பேரூந்தின் உட்புறம்
தற்போது அப்பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவையான போக்குவரத்துத் தேவையினை இது பூர்த்தி செய்து வருகிறது. ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் வீதம் மதவாச்சி மற்றும் மடு வில் இருந்து செயற்படுகிறது. புதிதாக அமைக்கப் பட்டுள்ள இந்த புகையிரதப் பாதையானது எதிர்காலத்தில் மன்னார் வரை விஸ்தரிக்கப் படவுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது. அறியாதவர்களுக்கு இதுவும் ஓர் அதிசயம் தான். வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் ஒருமுறை போய்த்தான் பாருங்களேன்!
கட்டுப்பாட்டுத் தொகுதி
நன்றி:
தகவல்கள் மற்றும் படங்கள்: EXPLORE SRILANKA மாதாந்த சஞ்சிகை.
இணையத்தளம்:http://exploresrilanka.lk
மேலதிகத் தகவல்கள் மற்றும் படங்களுக்கு: ஆக்க இணைப்பு:
நல்ல தகவல். அருமையாக இருக்கிறது இந்த புகையிரதப் பேருந்து.
ReplyDeleteவணக்கம் வெங்கட். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Delete