கந்தசாமியும் சுந்தரமும் - 01
"கந்தசாமி அண்ணே ஏன் அமைதியா உக்காந்திருக்கீங்க?" - வீட்டு முன்றலில்
நாற்காலியில் அமர்ந்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்த கந்தசாமியிடம் வினவினான்
சுந்தரம்.
"யாரு சுந்தரமா? வாப்பா... அது ஒண்ணுமில்ல, இன்னிக்கு உலக அமைதி தினமில்லையா? அதான்." - என்று குசும்பாகக் கூறினார் கந்தசாமி.
"உலக அமைதி தினம் - மாகாண சபைத் தேர்தல்! ஆஹா என்ன ஒரு பொருத்தம்?"
"ஆமா சுந்தரம். நானும் அத தான் யோசிச்சேன். நீயே சொல்லிட்ட."
"ஆமாண்ணே யாருக்கு வாக்களிச்சீங்க?"
"தேர்தல் முடிவு வரட்டும், சொல்றேன்."
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"செவுத்துக்குக் கூட காதிருக்கும். யார் காதுல சரி விழுந்தா விவகாரமாகிப் போகுமடா."
"அதுவும் சரிதாண்ணே! இந்த மாகாண சபைத் தேர்தல் பத்தி என்ன நினைக்கிறீங்க?"
"யாரு சுந்தரமா? வாப்பா... அது ஒண்ணுமில்ல, இன்னிக்கு உலக அமைதி தினமில்லையா? அதான்." - என்று குசும்பாகக் கூறினார் கந்தசாமி.
"உலக அமைதி தினம் - மாகாண சபைத் தேர்தல்! ஆஹா என்ன ஒரு பொருத்தம்?"
"ஆமா சுந்தரம். நானும் அத தான் யோசிச்சேன். நீயே சொல்லிட்ட."
"ஆமாண்ணே யாருக்கு வாக்களிச்சீங்க?"
"தேர்தல் முடிவு வரட்டும், சொல்றேன்."
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"செவுத்துக்குக் கூட காதிருக்கும். யார் காதுல சரி விழுந்தா விவகாரமாகிப் போகுமடா."
"அதுவும் சரிதாண்ணே! இந்த மாகாண சபைத் தேர்தல் பத்தி என்ன நினைக்கிறீங்க?"
"ஒரு முடிவோட தான் வந்திருக்க போல?"
"நம்ம என்ன முடிவெடுக்குறது? மக்கள் அவங்களோட முடிவ சொல்றதுக்கான 9 மணித்தியால கால அவகாசம் முடிஞ்சு போச்சு. நம்ம மன ஆறுதலுக்காக எதுனாச்சும் பேசலாமேன்னு தான் கேட்டேன்."
"நீ சொன்னது ரொம்ப சரி. இந்த முறை தேர்தல்ல 3 மாகாணங்களிலுமே 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு நடந்திருக்குன்னு செய்திகள்ல சொன்னாங்க."
"ம்... நல்ல முன்னேற்றம்னு சொல்லுங்க."
"முன்னேற்றம்தான். முடிவும் மக்களுக்கு சாதகமா வந்தா முழுமையான முன்னேற்றமா இருக்கும்."
"ஆமாண்ணே. யாழ்ப்பாணத்துல ஏதோ பத்திரிகை ஒன்னு போலியா வெளியாகியிருக்காமே?"
"ஆமா சுந்தரம். எனக்கு தெரிஞ்சு இப்படி ஒரு சம்பவத்த கேள்விப்பட்டதில்ல. தேர்தல் தினத்துல தமிழர்களுக்காக குரல் கொடுக்குற உதயன் பத்திரிகையைப் போலவே அதன் பெயரைப் பயன்படுத்தி போலியான செய்திகளைப் போட்டு ஒரு பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டிருக்காங்க."
"உண்மையிலேயே இது ஒரு தரக்குறைவான செயல்தாண்ணே. பண்ணுனது யாராயிருக்கும்ணே?"
"நானா பக்கத்துல இருந்தேன்? எல்லா சிக்கலான கேள்வியையும் என்கிட்டயே கேளு!"
"பக்கத்துல வேற யாருண்ணே இருக்கா?"
"சரி.. சரி.. வழக்கம்போல விசாரணை, வழக்குன்னு கொஞ்ச காலத்துக்கு செய்திகள் வெளிவரும். அப்புறம் சம்பந்தப்பட்டவங்களே மறந்துட வேண்டியது தான்."
"தேர்தல் வன்முறைகள் குறைவு போல?"
"குறைவா? இன்னிக்கு மட்டும் 202 முறைப்பாடுகள் கிடைச்சிருக்கு. இன்னும் முறைப்பாடுகள் கிடைக்காதது எத்தனையோ?"
"நா வாற வழிலயும் ரெண்டு கட்சிக்கு ஆதரவா நம்ம கிராம மக்களுக்குள்ள ஒரு சின்ன மோதல்..."
"தேர்தல் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் ஒரு விடயமாகத்தான் பார்க்கப்படுதே தவிர, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு புதிய வாய்ப்பாக யாராலயுமே பாக்கப்படுறதில்ல. அதான் பிரச்சினை."
"ஆமாண்ணே. தேர்தல் பிரச்சாரங்களுக்காக செலவழிக்கப் படுற பணத்தில் மக்களுக்கு ஏதாச்சும் செஞ்சா நல்லாருக்கும்ல?"
"சரியா சொன்ன சுந்தரம். ஆனா நம்ம ஜனநாயக நாட்டுல எங்க அப்படியெல்லாம் நடக்குது? மக்கள்கிட்ட இருந்து பணத்தைப் புடுங்கப் பாக்குறாங்களே தவிர, அவங்களுக்கு குடுக்கணும்னு யாரும் யோசிக்கிறதில்ல."
"எல்லாருமே அப்துல் கலாம் மாதிரி இருப்பாங்களா?"
"ஓ . உனக்கு அவரையெல்லாம் தெரியுமா?"
"ஆமாண்ணே. அவர தெரியலன்னா எப்படி? சரிண்ணே, நா போய்ட்டு அப்புறமா வாறேன்."
"என்ன, திடீர்னு கெளம்புறாப்ல?"
"நேரமாச்சுண்ணே. ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழும்பி தேர்தல் விசேட ஒளிபரப்பைப் பாக்கணும்."
"இன்னும் அந்த பழக்கத்த நீ விடலையா? நாளைக்கு பகல் செய்தி அறிக்கையைப் பார்த்தா தெரிஞ்சிடப் போகுது."
"மீண்டும் நாளை சந்திப்போம்ண்ணே!"
"சரிடா சுந்தரம்!"
போலியான செய்தித் தாள்ளாம் கொடுத்துருக்காங்களா? என்ன பொழப்பு. இது?
ReplyDeleteநல்லா எழுதியிருக்கீங்க பாரதி...
வணக்கம் வெற்றி. முதல் ஆளா வந்து வாழ்த்தியிருக்கீங்க. ரொம்ப நன்றி. அரசியலை கொஞ்சம் நகைச்சுவையாய் சொல்ல நினைத்தபோது தான் இந்த பதிவு எழுந்தது. நன்றி.
Deleteநல்ல உரையாடல்...
ReplyDeleteஉங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Deleteநாட்டுநடப்பை உரையாடல் மூலம் சொன்னது அருமை
ReplyDeleteநன்றி முரளிதரன். உங்கள் உற்சாக வாழ்த்துக்கு மிக்க நன்றி.
Deleteவணக்கம் சிகரம் பாரதி!
ReplyDeleteஇன்றுதான் உங்கள் தளம் வருகிறேன்!..
நிறைய விடயங்கள் கதம்பக் குவியலாகக் காண்கிறேன்.. அருமை!
இங்கும் நச்சுன்னு நல்ல உரையாடல்...:)
வாழ்த்துக்கள்! தொடருகிறேன்...
வாங்க இளமதி. உங்கள் முதல் வருகை தொடர் வருகையாகட்டும். அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...
உடனடி தகவலுக்கு நன்றி. பார்த்து கருத்தும் வழங்கி விட்டேன். நன்றி.
Deleteநல்லா இருக்கு. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஉங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Delete