Posts

Showing posts from August, 2018

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 10 Results | Google Vote

Image
Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Missed Call Numbers | Bigg Boss Google Vote | Public Opinion Poll  Show Title : Bigg Boss Tamil  Season : 02  Broadcasting Channel : Vijay Telivision  Start Date : 17th June, 2018 Host By : Ulaga Nayagan Kamal Hassan  No of Candidates / Contestants : 16  Cameras : 60  No of Days : 100   Programme Telecasting Time : Every Day (Monday to Sunday) at 09.00 PM IST .   BIGG BOSS: Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | P... : Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Missed Call Numbers | Bigg Boss Google Vote | Public Opinion Poll  Show Title : Bigg ... Read full Post Click here   #BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO 

மலையகம் வளர்த்த எழுத்தாளர் 'சாரல் நாடன்' உடன் ஒரு நேர்காணல்! - பகுதி 02

Image
மலையக இலக்கிய ஆளுமைகள் குறித்துப் பேசும்போது 'சாரல் நாடன்' தவிர்க்கப்பட முடியாதவர். 'சாரல் நாடன்' இலங்கை, நுவரெலியா மாவட்டம், சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தில் கருப்பையா வீரம்மா தம்பதிகளுக்கு 1944 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி பிறந்தார். தேயிலைத் தொழிற்சாலைகளில் மேலதிகாரியாகப் பணியாற்றிய இவர், சிறுகதை, புதினம் மற்றும் ஆய்விலக்கியங்களை எழுதியதனூடாக மலையக இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளார். 'சாரல் நாடன்' 31.07.2014 அன்று காலமானார். 'சாரல் நாடன்' அவர்களை பாடசாலைக் காலத்தில் 2005 ஆம் ஆண்டு நேர்காணல் செய்திருந்தேன். இந்த நேர்காணல் செப்டெம்பர் 2008 ஆம் ஆண்டு 'செங்கதிர்' கலை இலக்கிய சஞ்சிகையில் வெளியானது. அதனை 'சிகரம்' வாசகர்களுக்காக இங்கே பதிவு செய்கிறோம்.  மலையகம் வளர்த்த எழுத்தாளர் 'சாரல் நாடன்' உடன் ஒரு நேர்காணல்! - பகுதி 01 பகுதி - 02 சிகரம் : உங்களுடைய எழுத்துப் பணிக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு எவ்வாறு அமைந்துள்ளது? சாரல் : எழுத்துப் பணியில் எனது பிள்ளைகளுக்கு ஆர்வமில்லையாயினும் எனது எழுத்துக்களை விரும

சிகரம் 2018-08-29

Image
திருக்குறள் அதிகாரம் : கல்வி  குறள் : 393  கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு  புண்ணுடையர் கல்லா தவர். கலைஞர் மு.கருணாநிதி உரை:  கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும். பொன்மொழி  நடத்தப்படும் படகு கரைவந்து சேர்கிறது. சிதறி விழுந்த கட்டையும் காலங்கடந்தாவது கரைவந்து சேர்கிறது, முடியுமானால் படகாவோம்; இல்லையென்றால் கட்டையாவோம் என்றேனும் ஒருநாள் கரைசேர்வோம். - கவிஞர் கண்ணதாசன்  வரலாற்றில் இன்று  1949ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடாத்தியது  பழமொழி  சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி. பொருள்:  முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து விடுவார்கள்.  #தமிழ் #நாள் #இன்று #அறிவு #அனுபவம் #சொல் #மொழி #வரிகள் #எழுத்து #இன்றையநாள் #நல்லநாள் #செயல் #கல்வி #வாழ்க்கை #சிறப்பு #சிகரம் 

BB TAMIL 2 | WEEK 10 | DAY 69-70 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 10 | நாள் 69-70 | தாளிக்கலாம் வாங்க

Image
ஹாய் மச்சி  ஹாய்டா, என்ன நேத்து ஆளைக் காணோம்?  கமல் தாளிச்சதுல தக்காளி கருகிப் போச்சு. தீஞ்ச வாசனைல மயங்கிட்டேன். அதான் வர முடியல.  ஹா... ஹா... ஹா....  இந்த வார ஆரம்பத்துல ரித்விகாவும் ஜனனியும் சொன்ன மாதிரியே ஆகிடுச்சு.  ம்ம்... தப்பு தப்பா பண்ணாத, நீ தப்பா பண்றதுனால மும்தாஜுக்கு தான் நல்ல பெயர் கிடைக்கும், நீ அனாவசியமா கெட்டவன் ஆகாத நின்னு சொன்னாங்க.  ஆனா மஹத் அதைக் கேக்கவே இல்லை.  மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா இவங்க மூணு பேரையும் தாளிச்சதுல இன்னும் மூணு பேருக்கு ஏக சந்தோஷம்  மூணு பேருக்கு இல்லை, மூணு பேருக்கு மட்டும் தான் சந்தோசம்னு சொல்லு  டானி, மும்தாஜ், பாலாஜி இவங்க மூணு பேர் மட்டும் தான் கைதட்டிக்கிட்டிருந்தாங்க  அதிலும் டானிக்கு அளவில்லா ஆனந்தம்  கமல் மும்தாஜ் கூட்டணியை மறைமுகமா குத்திக் காட்டினாலும் அவங்களுக்கு விளங்கல  சும்மா பள்ளிக்கூட பசங்க மாதிரி பண்ணிக்கிட்டிருக்காதீங்க அப்படின்னு சொன்னாரே?  டானி தன்னைப் பத்தி எது சொன்னாலும் விளங்காத மாதிரியே இருந்துருவார்  அதுக்குத்தானே அவருக்கு நரி விருது கொடுத்தாங்க?  இப்படியே பண்ணிக்கிட்டு இறுதிப் போட்டி வரைக்க

BB TAMIL 2 | WEEK 10 | DAY 68 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 10 | நாள் 68 | விஜயலட்சுமி

Image
தலைவர் மஹத் வாழ்க!  வாழ்க ! வாழ்க ! !  ஒரு வழியா தம்பி தலைவராயிட்டாப்புல.  ஆமா, ஆனா ஷாரிக் தலைவரானதுக்கப்புறம் தானே வெளிய போனாரு?  அதுனால மஹத்தும் இந்த வாரம் வெளில போய்டுவாருங்கறியா?  இருக்கலாம்...  பக்ரீத் பண்டிகைக்கு ஆட்டு பிரியாணி அனுப்பினாங்க  ம்ம்... பிக் பாஸ்ல இருக்க எல்லா ஆடும் சேர்ந்து பிரியாணியை காலி பண்ணிடுச்சுங்க.  ஹா... ஹா...  இந்த மும்தாஜ் அணி ரொம்ப பிகு பண்றாப்புல தோணுது.  ஆமா. இடிச்சிகிட்டு தள்ளிக்கிட்டு விளையாடக் கூடாதாம்.  இந்த விளையாட்டெல்லாம் வேற எப்படி விளையாடறதாம்?  டானி சனிக்கிழமை கமல்கிட்ட இதுக்கு நியாயம் கேக்கப்போறதா சொல்லிக்கிட்டிருந்தாரே?  டானி, மும்தாஜ், பாலாஜி மூணு பேரும் 67ஆம் நாள் மதியத்துல இருந்து விளையாடல  ஆனா மஹத் அணியோட ரெண்டு சாவியை எடுத்து ஒளிச்சு வச்சிருந்தாங்க.  விளையாட மாட்டோம், ஆனா விளையாட்டைக் கெடுப்போம்.  அதேதான். ஆனா பிக் பாஸ் கூட இதைக் கண்டிக்கல.  ஆனா போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்துட்டார்.  சாவி இல்லாம இன்னாத்த விளையாடுறதாம்?  வெற்றி தோல்வி அறிவிக்கல.  அப்போ குண்டை செயலிழக்க வச்சு உலக மக்களை காப்பா

BB TAMIL 2 | WEEK 10 | DAY 67 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 10 | நாள் 67 | உலகத்தைக் காப்பாத்தலாம் வா மச்சி

Image
மச்சி எங்கடா அவசரமா கிளம்பிக்கிட்டிருக்க?  உலகத்தை காப்பாத்தப் போய்க்கிட்டிருக்கேண்டா... என்னது? உலகத்தைக் காப்பாத்தப் போறியா? சரியான கிறுக்குப் புடிச்சவனா இருக்கியே?  ஏன்டா, பிக் பாஸ் வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்குறவுங்களாலேயே இந்த உலகத்தைக் காப்பாத்த முடியும்னா எனக்கு முடியாதா என்ன?  உனக்கு என்ன கேப்டன் விஜயகாந்த்னு நெனப்பா?  இல்லை. கேப்டன் மஹத்னு நெனப்புடா.  ம்ம். மஹத் தான் இந்த போட்டில சிறப்பா பண்ணிக்கிட்டிருக்காப்புல.  ஆனா மத்தவுங்க மஹத் மேல தானே குத்தம் சொல்றாங்க?  அது விளையாட்டுத் தந்திரம்.  ம்ம். நேத்து நாலாவது காந்த திறப்பை(Magnet Lock)யும் மும்தாஜ் அணி திறந்துட்டாங்களே?  ம்ம். என்னா சண்டைடா... இதெல்லாம் சாதாரண சண்டை தான். ஆனா மும்தாஜ் அணில மும்தாஜ், டானியல், பாலாஜி மூணு பேரும் என்னை அடிக்கிறான், குத்துறான்னு பிக் பாஸ் கிட்ட புகார் குடுத்துக்கிட்டிருக்காங்க.  இந்த விஷயத்துல யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு நல்ல புரிதல் இருக்குல்ல?  நூறு வீதம் விளையாட்டை புரிஞ்சுக்கிட்டாங்கன்னு சொல்ல முடியாது. மஹத் கூட இருக்கிற நட்பா கூட இருக்கலாம்.  எதுவா வேணா இருக்கட

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 04

Image
முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - முழுத்தொகுப்பு   பயணம் - 04 #முடிமீட்ட_மூவேந்தர்கள் அந்தி சாய்ந்து ஆதவன் மறையும் மாலை நேரம். பொன்னிறக் கதிர் எங்கும் பரவி மங்களகரமாய்க் காட்சிளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இளவரசர் அவரின் மெய்க்காவல் வீரர்களுடன் புயலெனப் புரவியில் பாசறையைச் சென்றடைந்தார். வாயிலில் எக்காளம் அடித்து இளவரசரின் வருகை தெரிவிக்கப்பட்டது. முன்புறத்தில் நின்றிருந்த உபதளபதிகளும் வீரர்களும் நேராய் வரிசையாய் நின்றார்கள். வீரர்கள் இமைகள் கூட இமைக்காமல் நேராய் நிமிர்ந்து நின்றிருந்தார்கள். அறையிலிருந்த தளபதிகள் அவ்விடம் வந்து வரிசையாய் நின்றார்கள். குதிரையை விட்டுக் குதித்து இறங்கியவர் வீரர்கள் நின்றிருந்த இடம் நோக்கி விரைந்தார். வீரர்கள் வாளையும் வேலையும் நிலத்திலூன்றி மண்டியிட்டு இளவரசருக்கு வணக்கத்தைக் கூறினர். வீரர்களின் வணக்கத்தை ஏற்று பதில் வணக்கமளித்தார். தளபதிகள் வந்து அவரை அறையை நோக்கி அழைத்துச் சென்றார்கள்.  முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்   - சதீஷ் விவேகா  #முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திர

BB TAMIL 2 | WEEK 10 | DAY 66 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 10 | நாள் 66 | உத்தம வில்லன்

Image
'ஏய் தக்காளி, ராஜமாதா'  யாரப் பாத்து தக்காளின்ற?  உன்ன இல்லடா, இந்த மஹத் பையன் இருக்கான்ல. அவன் தான் நம்ம ராஜ மாதாவைப் பார்த்து அப்புடி சொன்னான். ஓ. ராஜ மாதா மும்தாஜ் இல்ல? ஆமா. ராஜ மாதா மேல சூப்பர் வில்லன் ஏற்கனவே கோவமா இருக்காரே?  ஆனா ராஜ மாதா இப்போலாம் என்ன நடந்தாலும் அமைதியா இருக்காங்க. அமைதியா சிரிக்கறாங்க.  கோல்கேட் பற்பசைல பல்லு விளக்கியிருப்பாங்க. அதான் சிரிக்கறாங்க.  நீ வேற. சூப்பர் வில்லன் மஹத் ராஜ மாதாவை என்ன பண்ணியும் அவங்க அசஞ்சு குடுக்கவே இல்லை.  இந்த வாரம் வெளியேற்றப் பட்டியல்ல இருக்காங்க தானே? அதுதான் இந்த அமைதியா இருக்கும்.  அது மட்டும் இல்லை. அவங்க இறுதிப் போட்டி வரை முன்னேறணும்னு உறுதியா இருக்காங்க.  டேனியோட கூட மஹத் முட்டிக்கிட்டார் இல்ல?  டானின்னா யாரு? பாகுபலியவா சொல்ற?  ஆமா மச்சி. பாக்க ஒரு ஓரத்துல பாகுபலி மாதிரியே இருக்காரு.  ம்ம்... டேனி கூட கோவப் படவே இல்ல.  உள்ளுக்குள்ள எதாவது திட்டம் இருக்கும். அதோட டேனி போட்டின்னு வந்தா அதை ஜெயிக்கிறதுல தான் குறியா இருப்பார்.  ஆமா, இந்த போட்டி என்னாது?  இதுவா? இது 'உத்தம வ