BB Tamil 2 | Week 07 | Day 46 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 07 | நாள் 46 | சர்வாதிகாரம் ஒழிக !
'ராணி மகா ராணி' இன்று என்னென்ன அட்டூழியங்கள் பண்ணப் போகிறாரோ என்கிற பதை பதைப்பிலேயே சக போட்டியாளர்களும் சரி, பார்வையாளர்களும் சரி காணப்படுகின்றனர். ஆனால் ஐஸ்வர்யாவை நீரில் தள்ளி விடும் முன்னோட்டக் காணொளிகள் பலரின் வயிற்றில் பாலை வார்த்திருக்கும்.
45ஆம் நாள் மதியம் 12.30 மணிக் காட்சிகளுடன் ஆரம்பமானது இன்றைய அத்தியாயம். பொதுமக்கள் அனைவரும் தனியாகப் பேச பத்து நிமிடம் அவகாசம் வழங்கப்படுகிறது. சென்றாயன் காலையில் ராணியிடம் சத்தமாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்டால் தான் அவருக்கு உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு மும்தாஜ் வற்புறுத்தி மன்னிப்பு கேட்க வைக்கிறார்.
மாலை 04.30மணி. மதிய உணவு நேரம். சென்றாயனை மும்தாஜுக்கு ஊட்டி விடுமாறு ஐஸ்வர்யா பணிக்கிறார். மும்தாஜ் மறுக்கிறார். பிறகு மும்தாஜ் ஒரு வாய் மட்டும் ஊட்டி விட சம்மதிக்க சென்றாயன் ஊட்டி விடுகிறார். பிறகு ஐஸ்வர்யா முற்றத்தில் ஒட்டி வைக்கப்பட்டுள்ள தனது எல்லாப் புகைப்படங்களுக்கும் ரித்விகாவை முத்தம் கொடுக்க வைக்கிறார்.
மஹத் யாஷிகாவை வெறுப்பேற்றுகிறார். ஷாரிக் மும்தாஜை வெறுப்பேற்றுகிறார். பொன்னம்பலம் மும்தாஜுக்கு கோபப்படும் விதமாக அறிவுரை கூறுகிறார். ரகசிய பணி கொடுக்கப்பட்டுள்ளதாம். ஐஸ்வர்யாவின் படுக்கையை யாஷிகாவை சரி செய்யுமாறு கூற அவர் முடியாது என்று கூறியதால் சிறையில் அடைக்கப்படுகிறார். இரவு பத்து மணிக்கெல்லாம் வீட்டின் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.
46ஆம் நாள். காலையிலேயே எல்லோரையும் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார் ஐஸ்வர்யா. பின்னர் பொன்னம்பலம் விடுவிக்கப்படுகிறார். சென்றாயனை எல்லோர் மீதும் தண்ணீர் ஊற்றிவிட்டு விடுதலையாகி செல்லுமாறு உத்தரவிடப்படுகிறது. சமையலறையில் பாலாஜியும் சென்றாயனும் பேசிக்கொண்டிருக்க அந்தக் காட்சிகள் சர்வாதிகாரிகளுக்கு நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
பாலாஜி அப்போது சென்றாயனிடம் கெட்ட வார்த்தை ஒன்றைப் பேசி விடுகிறார். அதற்கு தண்டனையாக சென்றாயன் அந்த கெட்ட வார்த்தையை மற்றைய போட்டியாளர்களின் முன்னால் வந்து கூறி விட்டு யாஷிகா மீது முட்டை கலந்த நீரை ஊற்ற வேண்டும் என்று ஐஸ்வர்யா கூறுகிறார்.

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?
This poll has ended at 9/22/2018, 7:00:00 PM
Created with PollMaker
மதியம் 12 மணிக்கு பொதுமக்கள் சிறைக்குள் இருந்து புரட்சி கோஷம் எழுப்புகின்றனர். பின்னர் மஹத்தை மட்டும் சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிடப்படுகிறது. மஹத்தை வெளியே விட கதவைத் திறக்கும் போது பொன்னம்பலம் ஐஸ்வர்யாவின் கழுத்தைப் பிடித்துக் கொள்ள சக போட்டியாளர்கள் அனைவரும் சிறையில் இருந்து வெளியேறி விடுகின்றனர். சென்றாயனும் பொன்னம்பலமும் ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்தில் தள்ளி விடுகின்றனர்.
ஐஸ்வர்யா பிக் பாஸிடம் சென்று கதறி அழுது முறையிடுகிறார். பிக் பாஸ் அவரை அமைதிப்படுத்துகிறார். 'விளையாட்டாக ஆரம்பித்த போட்டி வினையில் முடிந்து விட்டது. இனி என்ன நடக்கும்?' என்ற கேள்வியுடன் இன்றைய அத்தியாயம் நிறைவு பெறுகிறது. எல்லாம் உங்க திட்டம் தானே பிக் பாஸ்? சும்மா என்ன கத விடுறீங்க?
இன்னும் 46ஆம் நாள் காட்சிகள் முடியவில்லை. இரவு காட்சிகளுடன் பாதியில் இருக்கிறது. வைஷ்ணவியின் மீள்வருகைக் காட்சிகளும் இந்த 46ஆம் நாளில் மீதம் இருக்கின்றன. நாளை வெள்ளிக்கிழமை. 46ஆம் நாள் மீதிக் காட்சிகள் மற்றும் 47ஆம் நாள் காட்சிகள் அனைத்தையும் ஒளிபரப்பி முடித்தாக வேண்டும். ஏனெனில் சனிக்கிழமை கமலின் நாள்.
கமல் என்ன கேட்பார்? ஐஸ்வர்யா அழுது வடிய அவரைச் சமாதானப் படுத்துவாரா? அல்லது வயதில் மூத்தவர்களை எப்படி அவமானப் படுத்த முடியும் என்று விசாரணை நடத்துவாரா? என்னதான் போட்டியாக இருந்தாலும் பாலாஜியின் தவறாக இருந்தாலும் ஏன் பிக் பாஸே சொன்னாலும் கூட ஐஸ்வர்யா நடந்து கொண்ட விதம் மிகத் தவறானது. ஆத்திரத்தின் மிகுதியால் அவர் செய்தது. கமல் இதனை அவருக்கு உணர்த்துவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #VijayTelevision #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்