BB TAMIL 2 | WEEK 10 | DAY 69-70 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 10 | நாள் 69-70 | தாளிக்கலாம் வாங்க

ஹாய் மச்சி 

ஹாய்டா, என்ன நேத்து ஆளைக் காணோம்? 

கமல் தாளிச்சதுல தக்காளி கருகிப் போச்சு. தீஞ்ச வாசனைல மயங்கிட்டேன். அதான் வர முடியல. 

ஹா... ஹா... ஹா.... 

இந்த வார ஆரம்பத்துல ரித்விகாவும் ஜனனியும் சொன்ன மாதிரியே ஆகிடுச்சு. 

ம்ம்... தப்பு தப்பா பண்ணாத, நீ தப்பா பண்றதுனால மும்தாஜுக்கு தான் நல்ல பெயர் கிடைக்கும், நீ அனாவசியமா கெட்டவன் ஆகாத நின்னு சொன்னாங்க. 

ஆனா மஹத் அதைக் கேக்கவே இல்லை. 

மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா இவங்க மூணு பேரையும் தாளிச்சதுல இன்னும் மூணு பேருக்கு ஏக சந்தோஷம் 

மூணு பேருக்கு இல்லை, மூணு பேருக்கு மட்டும் தான் சந்தோசம்னு சொல்லு 

டானி, மும்தாஜ், பாலாஜி இவங்க மூணு பேர் மட்டும் தான் கைதட்டிக்கிட்டிருந்தாங்க 

அதிலும் டானிக்கு அளவில்லா ஆனந்தம் 

கமல் மும்தாஜ் கூட்டணியை மறைமுகமா குத்திக் காட்டினாலும் அவங்களுக்கு விளங்கல 

சும்மா பள்ளிக்கூட பசங்க மாதிரி பண்ணிக்கிட்டிருக்காதீங்க அப்படின்னு சொன்னாரே? 

டானி தன்னைப் பத்தி எது சொன்னாலும் விளங்காத மாதிரியே இருந்துருவார் 

அதுக்குத்தானே அவருக்கு நரி விருது கொடுத்தாங்க? 

இப்படியே பண்ணிக்கிட்டு இறுதிப் போட்டி வரைக்கும் போய்டுவாரு போல 

ம்ம்... ரித்விகா தான் மஹத்துக்காக பேசினாங்க 

மஹத்துக்குள்ள ஒரு மஹாத்மா காந்தி தூக்க மாத்திரை போட்டுட்டு தூங்கிட்டு இருக்கார், அவர் எழுந்து வந்தா மஹத் நல்லவன் தான்னு சொன்னாங்க 

மஹத் கூட மேடைல வச்சு ரித்விகா நல்ல தமிழ்ப்பொண்ணுன்னு பாராட்டு வழங்கியிருந்தார் 

மஹத் ஒரு தெளிவான தீர்மானத்துக்கு வரணும். 

யாஷிகாவா இல்லை பிரச்சியான்னு, அப்படி தானே? 



அப்படியே தான் 

பிக் பாஸ் காதலியா இல்லை பிக் பாஸுக்கு அனுப்பி வச்ச காதலியா? 

அதை மஹத் தான் சொல்லணும். ஆனா மஹத்தை பிக் பாஸ்க்கு அனுப்பின அவங்க காதலி பிராச்சி மஹத்தை விட்டு விலகுறதா இன்ஸ்ட்டாகிராம்ல போட்டிருந்ததா தகவல்கள் வந்ததே? 

அது உண்மையாவே இருந்தாக்கூட மஹத் எடுக்கக்கூடிய உறுதியான தீர்மானம் தான் அவரது வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கும் 

ம்ம்ம்.... இந்த வாரம் கமல் பேசினது சிறப்பா இருந்ததா பேசிக்கிறாங்களே? 

எல்லாம் நடிப்புத் தானே? 

உண்மையான கோவம் இல்லையா? 

இல்லை. கமல் பிக் பாஸ் முதலாம் பருவ போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது இரண்டாம் பருவ போட்டியாளர்களின் மட்டம் குறைவாக உள்ளதுன்னு குறிப்பிட்டிருந்தார் இல்லையா? 

ஆமா, அது உண்மை தானே? 

உண்மைதான். ஆனா அது கமலுக்கும் பொருந்தும். 

ம்ம்... கமல் கூட போன முறை இருந்தது போல இல்லை. தேர்ந்த அரசியலையே வெளிப்படுத்துறார் 

மும்தாஜ் பத்த வச்ச நெருப்புல மஹத்தைப் போட்டு தாளிச்சிட்டார் 

ம்ம்... சனிக்கிழமை அத்தியாயத்துல இருந்த பரபரப்பு ஞாயிறு இல்லை 

காசு வாங்கின கடமைக்கு அவர் கூவிட்டு போறார் 

பார்க்க ஆரம்பிச்ச கடமைக்கு நாம பாக்குறோம் 

ஆமா மச்சி 

சரி, பார்க்கலாம் இந்த வாரம் எப்படினு 

மஹத் இல்லாததை பயன்படுத்தி டானியல் யாஷிகா, ஐஸ்வர்யாகிட்ட நெருக்கம் காட்டுவாரா? 

இருக்கலாம், அல்லது மும்தாஜ்க்கு இருக்கும் மக்கள் ஆதரவை கணிச்சு அவங்களுக்கு ஜால்றா கூட போடலாம் 

அவருடைய தந்திர மூளையை கணிக்க முடியாது 

சரிடா, நாம கிளம்பலாம் 

ஆமாமா, நாமளும் கமல் மாதிரி அறுக்க வேணாம்... 

சரி மச்சி பார்க்கலாம் 

சந்திப்போம் மச்சி!!!    

BIGG BOSS TAMIL EPISODE 70-71 | BIGG BOSS TAMIL 25-26/08/2018 | BIGG BOSS TAMIL 25&26-08-2018 | BIGG BOSS TAMIL ONLINE | BIGG BOSS TAMIL ELIMINATION | BIGG BOSS TAMIL GOOGLE VOTE | BIGG BOSS TODAY EPISODE | BIGG BOSS TAMIL 2 25-26/08/2018 VIJAY TV SHOW | BIGG BOSS TAMIL 2 VIJAY TV SHOW ONLINE | OVIYA ARMY | AISHWARYA ARMY | YASHIKA ARMY | PONNAMBALAM ARMY | SENRAYAN ARMY | BIGG BOSS TAMIL GROUP | MUMTAZ ARMY | BIGG BOSS TAMIL 2 WILD CARD ENTRY | BIGG BOSS TAMIL SEASON 2 

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!