BB TAMIL 2 | WEEK 10 | DAY 65 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 10 | நாள் 65 | பிக் பாஸ் விருதுகள்

இங்க மும்தாஜ்ன்னு ஒரு மானஸ்தி இருந்தார்களே, அவங்க எங்க என்று சக போட்டியாளர்கள் தேடிக் கொண்டிருந்தனர். எப்போது பார்த்தாலும் எனக்கு கை வலிக்குது, கால் வலிக்குது என்று முனங்கிக் கொண்டிருந்த மும்தாஜ் காலையிலேயே முக்காலா முக்காப்புலா பாடலுக்குக் குத்தாட்டம் போட்டது தான் போட்டியாளர்களின் தேடலுக்குக் காரணம். மஹத் மும்தாஜைப் போல நடித்தது சரவெடி. டேனியல் தனியாக என்னடா நடக்குது இங்க என்று மண்டையைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்தார். 




மதியம் யாஷிகாவுக்கு நீதி வழங்க முடிவெடுத்திருந்தார் போல. Activity Areaவில் நீதிமன்ற அமைப்பு இருந்தது. யாஷிகா தனக்கு இந்த பிக் பாஸ் வீட்டில் யாருடன் பிரச்சினை இருக்கிறதோ அவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விளக்கம் கேட்கலாம். 'ஜட்ஜம்மா எல்லாரோட ஜட்டியையும் கழட்டுங்கம்மா' என்று பாலாஜி கூற எல்லோரும் சிரித்தனர். மஹத்துடனான தனது காதல் பற்றி தேவையான விளக்கத்தை கேட்டுப் பெற்றுக்கொண்டார் யாஷிகா. 

இந்த வாரம் மஹத் அல்லது தான் வெளியே போக வேண்டும் என்று மும்தாஜ் செண்டுவிடமும் ரித்விகாவிடமும் கூறிக் கொண்டிருந்தார். மஹத் அவ தப்பான பொம்பள என்று மும்தாஜை குறிப்பிட்டது தான் காரணம். உண்மையில் மஹத் கோபம் வந்தால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நடந்து கொள்கிறார். ஐஸ்வர்யாவும் கூட அதே போல தான். யாஷிகாவுடன் மும்தாஜ் நெருக்கம் காட்டியதால் தான் மஹத் மும்தாஜை தவறாக விமர்சித்தார். ஆனால் மக்கள் முடிவு எப்படி இருக்குமோ? 




Bigg Boss Tamil 2 | Week 10 | Public Opinion Poll | Who Will Be save | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 10 | மக்கள் வாக்களிப்பு | யாரைக் காப்பாற்றப் போகிறீர்கள்?

பாலாஜி | BALAJI
சென்றாயன் | SENRAYAN
மும்தாஜ் | MUMTAZ
மஹத் | MAHATH
Created with Survey Maker


இரவு 'பிக் பாஸ் விருதுகள்' நிகழ்ச்சி. கடந்த பருவம் போல இம்முறையும் கலவரத்தை உண்டு பண்ண நடத்தும் நாடகம் இது. மஹத் - செம்மறியாடு, ஐஸ்வர்யா - கழுதை, டேனியல் - நரி, ஜனனி - கோழி, ரித்விகா - பூனை, ஐஸ்வர்யா - எருமை, சென்றாயன் - ஆமை, மும்தாஜ் - பாம்பு, மும்தாஜ் - எலி, பாலாஜி - பச்சோந்தி, மும்தாஜ் - அட்டை, ஜனனி - முதலை. யாஷிகா ஜனனிக்கு முதலைக் கண்ணீர் வடிப்பதாக முதலை விருது கொடுத்ததை ஜனனி ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையான முதலையை மக்கள் அறிவார்கள் அல்லவா? 

பிக் பாஸுக்கு இன்னும் புதுவரவு யாரும் இல்லை. இந்த வாரத்துடன் சேர்த்து இன்னும் ஐந்து வாரங்களே எஞ்சியுள்ளன. பாதிக்கும் மேலே நிகழ்ச்சி முடிவடைந்துள்ள நிலையில் இதற்கு மேலும் ஒரு புது வரவு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. கடந்த முறை போல யாரும் இடை நடுவில் போட்டியை விட்டு வெளியேறவில்லை. இனிமேலும் அவ்வாறு வெளியேறும் எண்ணம் யாருக்கும் இருப்பதாகவும் தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியும் முன்பு போல் இல்லாமல் ஏனோ தானோவென்று நகர்ந்து கொண்டிருக்கிறது. என்ன தான் நடக்கும் என்பதை ஓரத்தில் நின்று பார்ப்பதைத் தவிர நமக்கும் வழியில்லை. பார்க்கலாம்!  

BIGG BOSS TAMIL EPISODE 66 | BIGG BOSS TAMIL 21/08/2018 | BIGG BOSS TAMIL 21-08-2018 | BIGG BOSS TAMIL ONLINE | BIGG BOSS TAMIL ELIMINATION | BIGG BOSS TAMIL GOOGLE VOTE | BIGG BOSS TODAY EPISODE | BIGG BOSS TAMIL 2 21/08/2018 VIJAY TV SHOW | BIGG BOSS TAMIL 2 VIJAY TV SHOW ONLINE | OVIYA ARMY | AISHWARYA ARMY | YASHIKA ARMY | PONNAMBALAM ARMY | SENRAYAN ARMY | BIGG BOSS TAMIL GROUP | MUMTAZ ARMY | BIGG BOSS TAMIL 2 WILD CARD ENTRY | BIGG BOSS TAMIL SEASON 2 

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!