சிகரத்துடன் சில நிமிடங்கள் : புதியமாதவி
கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?
பெயர் புதியமாதவி
கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?
உண்மையிலிருந்து பிறக்கும்.
ஆனால் உண்மைக்கும் அப்பாற்பட்டது.
ரத்தமும் சதையுமான மனிதர்களின் வாழ்க்கை.
ஆனால் ஆடிப்பிம்பங்களும் அல்ல.
எழுத்து ஒரு கலை.
படைப்பு அக்கலையின் ஜீவன்.
கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?
சொற்களின் ஒலிக்குப்பைகளால் நிரம்பி இருக்கிறது.
கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது?
மொழியே மனிதன். இடம் காலம் பருவம் அவன் மொழியின் ஒலிவடிவங்களைத் தீர்மானிக்கிறது.
மொழியின்றி மனிதனிடம் வளர்ச்சி சாத்தியமில்லை. எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் அந்தந்த இனக்குழுவின் கருத்துப் பரிமாற்றமாக இருந்த மொழி, இன்று கணினி மொழியாகி குறியீடுகளுக்குள் புகுந்து தன் சமூகத்தை விசாலப்படுத்தி இருக்கிறது.
கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன?
மானிடம் போற்றுதும்.
கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா?
கடந்த கால வரலாற்றை அறியாதவன் எதிர்காலத்தின் வரலாறாக முடியாது.
கடந்த கால வரலாறு எவ்வளவு மகத்துவமானதாக இருந்தாலும் அது இறந்தகாலம் என்ற ஓர்மையுடன் நிகழ்காலம் இருந்தால் எதிர்காலம் ஒளிமயமாகும்.
கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா?
அழியாது. கணினி வாசிப்பின் பாதிப்புகளை இளம் தலைமுறையினர் விரைவில் உணர்வார்கள். புத்தகங்கள் மீண்டும் புத்துணர்சியுடன் பெருகும்.
கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா?
வரங்களும் சாபங்களாகலாம். அவரவர் கையில் தான் இருக்கிறது. வரமா சாபமா என்ற கேள்விக்கான பதில்.
கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்?
அருந்ததிராய். அவர் எழுதிய அனைத்து புத்தகங்களும்.
கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்?
ஆரம்ப கல்வியை அவரவர் தாய்மொழியில் தான் கற்க வேண்டும் என்பதைக் கட்டாயம் ஆக்க வேண்டும்.
-புதியமாதவி
#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #புதியமாதவி #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #எண்ணங்கள் #பகிர்வு #மொழி #Puthiyamaadhavi #சிகரம்
சிகரத்துக்கும், சிகரத்தை அடையாளம் காட்டியமைக்கு நன்றி
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDelete