Posts

Showing posts from June, 2014

வலைச்சரத்தில் களம் காண்கிறது சிகரம்!

Image
வணக்கம் வலைத்தள நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். " வலைச்சரம் " பற்றி அறியாத யாருமே தமிழ் வலைப்பதிவர்களாக இருக்க முடியாது. புதிய வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்துதல், வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை அளிப்பதன் மூலம் ஆசிரியராக வருபவரின் வலைத்தளத்துக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தல், வலைப்பதிவுகளையும் இடுகைகளையும் பிறர் அறிய வாய்ப்பளித்தல் என பல சேவைகளை வலைச்சரம் ஆற்றி வருகிறது. வாரம் ஒரு ஆசிரியர் தனக்குப் பிடித்த , தான் அறிந்த வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வார். அந்த வகையில் பலரும் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்காக காத்து நிற்கும் இந்த வேளையில் "சிகரம்பாரதி" ஆகிய என்னைத் தேடி வலைச்சர ஆசிரியர் பொறுப்பு வந்திருக்கிறது. 30.06.2014 முதல் தொடங்கும் வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்கும் நான் 06.07.2014 வரை வலைச்சரம் ஆசிரியராக எனது கடமையை ஆற்றவுள்ளேன். இதுவரை மூன்று முறை வலைச்சரம் சார்பாக அறிமுகம் பெற்றுள்ள நான் இன்று ஏனையோரை அறிமுகம் செய்யக் கிடைத்தமை மிகப்பெரும் பாக்கியமாகும். என்னை அறிமுகம் செய்த பதிவுகள் இவைதான். நான்

ஒன்னு... ரெண்டு.... மூணு..... நாலு...... [01]

Image
                      வணக்கம் வலைத்தள வாசகர்களே! மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் நலமா? நான் நலம். கொஞ்சம் அதிகம் இடைவெளி எடுத்துக்கொண்டேன் போலிருக்கிறது. மன்னிக்கவும்.                    நாம் நமது சமூக சூழலில் தினசரி பல விடயங்களை அவதானிக்கிறோம். அவற்றில் பலவற்றை பதிவுகளாகவோ கலந்துரையாடல்கள் மூலமோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சில விடயங்கள் பற்றி அதிகம் பேச - பகிர ஆர்வமில்லாதிருக்கும். ஆனாலும் சுருக்கமாகவேனும் சொல்ல நினைப்போம். அவ்வாறான விடயங்களை இலக்கமிட்டு பகிர்வதே இப்பதிவின் நோக்கம். வாருங்கள் பேசலாம். ஒன்று: முதலாவது விடயமே ஒரு சந்தேகம். அதுவும் என் பதிவின் தலைப்புக் குறித்து. அது என்னவோ? இது தான். எழுத்து வழக்கில் ஒன்று என்று குறிப்பிடுவதை நான் பேச்சு வழக்கில் 'ஒன்னு' எனக் குறிப்பிட்டிருக்கிறேன். அதாவது சிறிய அல்லது இரட்டை சுழி 'ன' வரிசை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சரியா? அல்லது மூன்று சுழி 'ண' வரிசையில் 'ஒன்ணு' என்று குறிப்பிட வேண்டுமா? இரண்டு:   "புறாவுக்குப் போரா? பெரும் அக்கப்போராக அல்லவா இருக்கிறது?" எ

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 10 - முன்னோட்டம்!

Image
பகுதி - 01 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 பகுதி - 02 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02 பகுதி - 03 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 பகுதி - 04 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04 பகுதி - 05 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05 பகுதி - 06 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06 பகுதி - 07 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07 பகுதி - 08 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08 பகுதி - 09 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/01 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/02 வணக்கம் வலைத்தள வாசகர்களே! "கல்யாண வைபோகம்" நமது "சிகரம்" வலைத்தளத்தின் ஆரம்ப கால வாசகர்களை பெரிதும் கவர்ந்த ஒரு குறு வலை நாவல். 2012 ஆம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை வெளிவந்து பின்னர் இடைநடுவில் கைவிடப்பட்ட ஒன்றாகிப்போனது. அதன் பின்னர் மீண்டும் தொடரும் என சில அறிவிப்புகள் வெளியாகியிருந்தாலும் - பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் கானல் நீராகிப்போன நிஜம் நாமறிவோம். இதோ மீண்டும் காலம் கனிந்திரு

அகவை ஒன்பதில் சிகரம்!

Image
                    வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்! இன்று ஒரு மிக முக்கியமான நாள். ஒரு கையெழுத்து சஞ்சிகையாக தன் பயணத்தை ஆரம்பித்த " சிகரம் " வலைத்தளம் வரை வேர்விட்டு தனது எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் கால் பதிக்கிறது.                  நாம் அறிந்ததை பிறரும் அறிய வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் "சிகரம்". 2003 ஆம் ஆண்டிலிருந்து எனது எழுத்து முயற்சிகள் பல இருந்தாலும் 2006 இல் துவங்கிய "சிகரம்" தான் வெற்றிக் கதவைத் திறந்துவிட்டது. தரம் 11 இல் கல்வி கற்ற போது உருவாக்கப்பட்ட "சிகரம்" கையெழுத்து சஞ்சிகை 2009 வரை தனது பயணத்தை தொடர்ந்தது. போதிய வாசகர்களிடம் கொண்டு சென்று சேர்க்க இயலாத காரணத்தால் 2009 இல் கையெழுத்து சஞ்சிகையை இடை நிறுத்த வேண்டியதாகி விட்டது.                   கையெழுத்து சஞ்சிகை என்பது ஒரு பிரதி தான் உருவாக்கப் படும். அதாவது என் கையெழுத்தில் உருவாக்கப்படும் நேரடிப் பிரதி ஒன்றைத்தான் ஒவ்வொரு வாசகரிடமும் எடுத்துச் சென்று வாசிக்கும் படி வழங்க வேண்டும். ஒருவரிடம் கொடுத்து அவர் வ