Tuesday, 17 June 2014

ஒன்னு... ரெண்டு.... மூணு..... நாலு...... [01]

                      வணக்கம் வலைத்தள வாசகர்களே! மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் நலமா? நான் நலம். கொஞ்சம் அதிகம் இடைவெளி எடுத்துக்கொண்டேன் போலிருக்கிறது. மன்னிக்கவும்.

                   நாம் நமது சமூக சூழலில் தினசரி பல விடயங்களை அவதானிக்கிறோம். அவற்றில் பலவற்றை பதிவுகளாகவோ கலந்துரையாடல்கள் மூலமோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சில விடயங்கள் பற்றி அதிகம் பேச - பகிர ஆர்வமில்லாதிருக்கும். ஆனாலும் சுருக்கமாகவேனும் சொல்ல நினைப்போம். அவ்வாறான விடயங்களை இலக்கமிட்டு பகிர்வதே இப்பதிவின் நோக்கம். வாருங்கள் பேசலாம்.

ஒன்று:
முதலாவது விடயமே ஒரு சந்தேகம். அதுவும் என் பதிவின் தலைப்புக் குறித்து. அது என்னவோ? இது தான். எழுத்து வழக்கில் ஒன்று என்று குறிப்பிடுவதை நான் பேச்சு வழக்கில் 'ஒன்னு' எனக் குறிப்பிட்டிருக்கிறேன். அதாவது சிறிய அல்லது இரட்டை சுழி 'ன' வரிசை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சரியா? அல்லது மூன்று சுழி 'ண' வரிசையில் 'ஒன்ணு' என்று குறிப்பிட வேண்டுமா?

இரண்டு:

 

"புறாவுக்குப் போரா? பெரும் அக்கப்போராக அல்லவா இருக்கிறது?" என்று வடிவேலு பேசுவதாக 23 ஆம் புலிகேசி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். அது போன்று தான் அமைந்திருக்கிறது இலங்கையின் தலைநகரில் ஒரு ஒழுங்கைக்கு [Lane] பெயர் வைக்கும் விவகாரம். கடந்த வருடம் கொழும்பு வெள்ளவத்தை நகரில் கொழும்பு தமிழ்ச் சங்கம் அமைந்திருக்கும் 57 வது ஒழுங்கைக்கு "தமிழ்ச் சங்க ஒழுங்கை" என்று பெயர் மாற்றம் செய்ய தமிழ் ஆர்வலர்களால் தீர்மானிக்கப்பட்டு கொழும்பு மாநகர சபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கோரிக்கை நிராகரிக்கப்பட தமிழ் ஆர்வலர்கள் பல வழிகளிலும் தமது முயற்சிகளை தொடர்ந்தனர். ஆனால் இறுதி விளைவு பெயர்ப் பலகையில் "தமிழ்" நீக்கப்பட்டு "சங்கம் ஒழுங்கை" மட்டும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பெயர்ப் பலகை மீது கூட தமது இன வாதத்தைக் காட்டுபவர்கள் குறித்து என்ன சொல்ல?

 

இது குறித்து நான் வலைத்தளமொன்றில் கண்ட பதிவு இது:

நீயா ? நானா ? போட்டியில் சிக்கித் தவிக்கும் தமிழ்ச் சங்க ஒழுங்கை!


மூன்று:

கோச்சடையான்- நடிப்புப் பதிவாக்கத் தொழிநுட்பம் மூலம் படமாக்கப்பட்ட முதல் முப்பரிமாணத் தமிழ்த் திரைப்படம். கடந்த மாதம் உலகெங்கும் பல தடைகள், தாமதங்களுக்குப் பின்னர் வெளியானது. நானும் கொழும்பு மாளிகாவத்தை ரூபி திரையரங்கில் ரூ 300 கொடுத்து படத்தை ஆவலோடு பார்த்தேன். ஆனால் என்னால் படத்தோடு ஒன்ற முடியவில்லை. முப்பரிமாணத் திரைப்படத்தை இரு பரிமாணத் திரைப்படமாகத்தான் இங்கு வெளியிட்டிருந்தார்கள். அது கூடப் பரவாயில்லை. ஆனால் dts ஒலித்தொழினுட்பம் இல்லை. stereo ஒலியில் தான் திரையிட்டார்கள். அதனால் தான் திரைப்படத்துடன் ஒன்ற முடியாது போய்விட்டது. மற்றபடி திரைக்கதை, படமாக்கப்பட்ட விதம், அதற்கான உழைப்பு எல்லாமே அருமை.


ஒரு படைப்பை நான்கு வரிகளில் தாறுமாறாக விமர்சனம் செய்வது எளிது. ஆனால் அப்படைப்பை உருவாக்குபவருக்கு மட்டுமே அதன் கஷ்ட நஷ்டங்கள் தெரியும். கோச்சடையானை பொம்மைப் படம் என்று விமர்சிப்பது இலகு. 120 கோடி ரூபாவுக்கு மேல் பணத்தைக் கொட்டி தமிழுக்கு ஒரு கௌரவத்தை வழங்கியிருக்கிறது என்பதை ஏற்பது கடினம்தான். ஆனால் அந்தக் கடினமான பணியை நாம் ஏற்றாக வேண்டும். காரணம் நாளை மேற்குலகத் திரைப்படங்கள் எல்லாமே நடிப்புப் பதிவாக்கத் தொழிநுட்பத்தில் தான் வருமாக இருந்தால் நாமும் அதற்குத் தயாரானவர்களாக- போட்டியிடக் கூடியவர்களாக இருக்க வேண்டுமல்லவா? கோச்சடையான் பற்றி தனி விமர்சனம் எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தேன். கைகூடவில்லை.

நான்கு:
நாலு எல்லாம் இல்லை. இன்று - இப்போதைக்கு மூன்று தான். மீண்டும் சந்திப்போம். ஆரோக்கியமான எதிர்வினைகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிக்கு,
அன்புடன்

சிகரம்பாரதி.

7 comments:

 1. எதையும் சொல்வது எளிது தான்....!

  ReplyDelete
 2. 1) நமக்கான திரட்டி வேலை செய்கிறது...

  2) உங்கள் தளம் .in என்று முடிவதால் - இனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...! { http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html }

  3) தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

  4)

  ReplyDelete
  Replies
  1. 1) ஆம். வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி மீண்டிருக்கிறது.
   2) பார்க்கிறேன். எனக்கு .com என்று தானே தெரிகிறது?
   3) நன்றி
   4) ....

   Delete
 3. மூன்றும் வாசித்தேன்..... கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்....

  உங்கள் தமிழ்மணம் பட்டையை சொடுக்கினால் வேறு விளம்பர தளம் திறக்கிறது....
  ஓட்டு பட்டை வேலை செய்யவில்லை என தெரிகிறது..
  வலைப்பூ உதவி தேவைப்படின் thaiprakash1@gmail.com மின்னஞ்சல் செய்யவும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்.

   பார்க்கிறேன். நன்றி நண்பரே!

   Delete
 4. மூன்றும் படித்தேன்.......

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...