Posts

Showing posts with the label வேர்ட்பிரஸ்

வலைப்பதிவு வழிகாட்டி - 04

Image
வணக்கம் நண்பர்களே!  இது மிக நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுத ஆரம்பித்து இடைநடுவில் கைவிட்ட பதிவு.  முந்தைய பதிவுகளைப் படிக்க:  வலைப்பதிவு வழிகாட்டி - 01   வலைப்பதிவு வழிகாட்டி - 02   வலைப்பதிவு வழிகாட்டி - 03   இன்றைய பதிவு:  இன்று விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடர்வதற்கு சில காரணங்கள் உண்டு.  1. பதிவை மீண்டும் தொடர்ந்து புதிய வலைப்பதிவர்களுக்கு வழிகாட்டுவது.  2. வலைப்பூவில் (பிளாக்கர்) ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்களை உலகுக்கு தெரியப்படுத்துவது.  இரண்டும் ஒன்றே என்பதால் இப்படியே வாசிக்கலாம்.  வலைப்பூவில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  பாரிய மாற்றங்கள் என்று சொல்வதற்கில்லை என்றாலும் வலைப்பதிவர்களை கவரக் கூடிய மாற்றங்களாகவே இருக்கின்றன.  வலைப்பதிவர்கள் எதிர்பார்த்த புதிய தீம்கள் எவையும் கிடைக்கவில்லை என்பது ஏமாற்றமே.  மாற்றங்கள்:  01. பதிவுகளின் பட்டியலை காண்பிக்கும் முகப்புத் திரை மாறியிருக்கிறது.  இது எந்தவொரு பதிவும் இல்லாத புதிய வலைப்பதிவு காட்சியளிக்கும் முறை.  இது பதிவுகள் உள்ள வலைப்பதிவு ...

வலை ஓலை - எழுத்தாணி - சொல்

Image
இணைய உலகில் தமிழை வளம்பெறச் செய்ததில் வலைத்தளங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் ஆகிய இரண்டும் வலைத்தள சேவைகளை வழங்கினாலும், பிளாக்கரிலேயே அதிக அளவு வலைத்தளங்கள் உருவாகின.  தமிழ் வலைத் தளங்களுக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டு வரலாறு இருக்கலாம் என நினைக்கிறேன். ஆரம்பகால வலைத்தள எழுத்தாளர்களுக்கே தமிழ் வலையுலகின் அத்தனை பெருமைகளும் சாரும் என்றே நான் சொல்வேன்.  காரணம், அவர்கள் அனைத்தையும் உருவாக்கினார்கள். வலைத்தள சேவைகள் தமிழில் கிடைக்க அவர்கள் பெரும் பங்காற்றினார்கள். பல வலைப்பதிவர்கள் தமிழில் உருவாக அவர்களே காரணமாய் அமைந்தார்கள். அவர்களில் பலரும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பலரும் நவீன எழுத்தாளர்களாய் உருவாகினர்.  தமிழ் வலைத்தளங்களை அப்போது நடத்திச் செல்வதில் இருந்த சிரமம் இப்போது இல்லை. வலைத்தளங்கள் தற்போது வெகுவாக முன்னேறிவிட்டன. எந்தவொரு சிரமமும் இல்லாமல் யுனிகோடில் தட்டச்சு செய்ய முடிகிறது.  அத்துடன், வலைத்திரட்டிகள் தமிழ் வலையுலகில் ஆற்றிய பங்கு மறக்க முடியாது. தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ் 10 ஆகியன அவற்றில் வெகு பிரபலமானவை....

வலைப்பதிவு வழிகாட்டி - 04

Image
பிளாக்கர் (Blogger) துணையுடன் வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவது பற்றி இதுவரை நாம் பார்த்தோம்.  Image Credit: Google  அதன் படி முறைகளை நீங்கள் கீழ்வரும் இணைப்புகளில் ஒழுங்குமுறையில் காணலாம்.  வலைப்பதிவு வழிகாட்டி - 01   வலைப்பதிவு வழிகாட்டி  - 02   வலைப்பதிவு வழிகாட்டி - 03   சரி, வலைப்பதிவை உருவாக்கிவிட்டோம். இனி எழுதப் போகலாமே என்பது உங்கள் எண்ணமாக இருக்கும். ஆனால் அதை விட முக்கியமான சில படிமுறைகள் இருக்கின்றன. அவற்றையும் செய்த பின்னர் நாம் எழுதத் துவங்குவோம்.  வலைப்பதிவு அமைப்புகளை (Settings) கட்டமைக்க வேண்டும்.  உங்கள் வலைப்பதிவின் கட்டுப்பாட்டு பகுதியில் (Dashboard) இடது பக்கத்தில் கீழே இந்த Settings காணப்படும்.  Settings இனை தெரிவு செய்யுங்கள்  இங்கு 'Basic' என்னும் தெரிவில் உங்கள் வலைப்பதிவின் அடிப்படை விவரங்களை மீண்டும் மாற்றி அமைக்கலாம்.  Title என்னும் தெரிவில் உங்கள் வலைப்பதிவு தலைப்பை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். உங்கள...

வலைப்பதிவு வழிகாட்டி - 03

Image
பிளாக்கர் (Blogger) துணையுடன் வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவது எப்படி என்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  Image Credit : Google  பிளாக்கர் வலைப்பதிவு ஒன்றை உருவாக்க ஜிமெயில் (GMail) மின்னஞ்சல் கணக்கு ஒன்று இருப்பது அவசியம். ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கு இதுவரை உங்களிடம் இல்லையென்றால் இப்போதே அதனை உருவாக்கிக் கொள்ளுங்கள்.  அடுத்து https://www.blogger.com என்னும் முகவரிக்கு சென்று உங்களுக்கான வலைப்பதிவை உருவாக்க ஆரம்பியுங்கள். உங்களுக்கான பயனர் பெயரை உருவாக்கிக் கொள்ளுங்கள். கூகிள் பிளஸ் (Google Plus) சமூக வலைத்தள கணக்கை உருவாக்கவோ அதனை பிளாக்கருடன் இணைக்கவோ இனி முடியாது என்பதைக் கவனிக்கவும்.  வலைப்பதிவை உருவாக்குதல்   இப்போது நாம் படம் - 06இல் காட்டப்பட்டுள்ள திரையில் இருக்கிறோம்.  படம் - 06  இப்போது 'CREATE NEW BLOG' என்னும் பொத்தானை சொடுக்குங்கள்.  அடுத்து உங்களுக்கு கீழ் காட்டப்பட்டுள்ள திரை காட்சியளிக்கும்.  படம் - 07  இது மிக முக்கியமான இடம். அவசரத்தில் தவறிழைத்துவிடாதீர்கள்!   இ...

வலைப்பதிவு வழிகாட்டி - 02

Image
நாம் முதலில் வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவது எப்படி என்று பிளாக்கர் (Blogger) வழியாகப் பார்க்கலாம்.  வலைப்பதிவை உருவாக்க உங்களிடம் மின்னஞ்சல் கணக்கு ஒன்று இருப்பது அவசியம். இன்றைய காலத்தில் நம்மில் பெரும்பாலானோரின் கைகளில் திறன்பேசிகள் (Smart Phones) இருக்கின்றன. பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தவும் இணைய விளையாட்டுக்களில் பங்கேற்கவும் மற்றும் அலுவலகத் தேவைகளுக்கும் மின்னஞ்சலைப் பயன்படுத்துவதால் நம்மிடம் மின்னஞ்சல் கணக்கொன்று கட்டாயம் இருக்கும். ஆகவே மின்னஞ்சலை உருவாக்குவது எப்படி என்று தனியாக விளக்க வேண்டிய அவசியம் இல்லை (யாருக்கேனும் அந்த சந்தேகம் இருந்தால் கருத்துரைப் பெட்டியில் பதிந்தால் தனிப்பதிவு வழியாக விளக்குகிறேன்).  வலைப்பதிவு உருவாக்கம்   உங்கள் இணைய உலாவியை (Browser) திறந்து கொள்ளுங்கள் (Chrome/ Firefox, Etc).  முகவரிப் பட்டியில் (Address Bar) பிளாக்கர் முகவரியை உள்ளிடுங்கள்.  https://www.blogger.com   உங்களுக்கு இவ்வாறானதொரு திரை கிடைக்கும்.  படம் - 01  நீங்கள் ஏற்கனவே வலைப்பதிவை...

வலைப்பதிவு வழிகாட்டி - 01

Image
வலைப்பதிவொன்றை உருவாக்குவது எப்படி? வலைப்பதிவை உருவாக்க பிளாக்கரா அல்லது வேர்ட்பிரஸ்ஸா சிறந்தது? வலைப்பதிவு உருவாக்குவது சிறந்ததா அல்லது இணையத்தளம் உருவாக்குவது சிறந்ததா? இப்படிப் பல கேள்விகளுக்கு விடை சொல்ல வருகிறது நமது 'வலைப்பதிவு வழிகாட்டி' தொடர்.  தமிழ் வலைத்தள உலகில் முன்னணியில் இருப்பவை இரண்டு தளங்கள் மட்டுமே. ஒன்று பிளாக்கர் (Blogger), மற்றையது வேர்ட்பிரஸ் (WordPress). எது சிறந்தது என்ற ஒப்பீட்டை மேற்கொள்வது சற்றுக் கடினம். இரண்டிலுமே நமக்கு சாதகமான அம்சங்களும் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் வேர்ட்பிரஸை விட பிளாக்கர் இலகுவானது என ஒப்பீட்டளவில் கூறலாம். பட உதவி: கூகிள் Image Credit: Google  அல்லது பிளாக்கர் ஆரம்ப நிலை வலைப்பதிவர்களுக்கானது எனவும் வேர்ட்பிரஸ் இடைநிலை வலைப்பதிவர்களுக்கானது எனவும் வரையறுக்கலாம். அத்துடன் இன்றைய நிலையில் (2019) கணினியில் பயன்படுத்த பிளாக்கர் இலகுவானதாகவும் திறன்பேசியில் பயன்படுத்த வேர்ட்பிரஸ் இலகுவானதாகவும் இருக்கிறது. பிளாக்கரின் ஆன்ட்ராய்டு செயலி 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு இற்றைப் படுத்தப்படவில்லை. வேர்ட்ப...