Posts

Showing posts from December, 2015

தமிழாக்கம் - ( தேவை - சிக்கல் - தீர்வு) - 01

Image
                           வணக்கம் வாசகர்களே! மிக நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான் நலம். நீங்கள் நலமா? வழக்கம் போல் இனி வலைத்தளத்தில் உங்களை சந்திப்பேன்.                         தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழி. செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழி. தமிழ் மொழி காலத்துக்குக் காலம் மெருகேறி வந்துள்ளது. இதில் சாமானியன் முதல் சான்றோர் வரை அனைவரினதும் பங்களிப்பும் உள்ளது. உலகின் அரசியல் பொருளாதார மாற்றங்களினூடாக தமிழர்கள் உலகெங்கும் பரந்துள்ளனர். சில நாடுகளில் ஆட்சி மொழி அந்தஸ்தும் தமிழுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூகிள் , மைக்ரோசொப்ட் போன்ற பல்வேறு மென்பொருள் அமைப்புகளும் தமிழுக்கு போதிய முக்கியத்துவத்தை அளித்து வருகின்றன.                      இந்நிலையில் காலத்துக்குக் காலம் உலகில் நிகழும் மாற்றங்களின் காரணமாக தமிழுக்கு "தமிழாக்கம்" என்ற எண்ணக்கருவின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது. தினமும் ஏராளமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. புதிய புதிய விடயங்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. தொழிநுட்பம் நாளுக்கொரு அவதாரம் எடுத்துக்