Sunday, 22 July 2018

BBTamil2 | Week 05 | Day 34 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 05 | நாள் 34 | மூக்குச் சளி வர்றது தப்பா?

பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் 34ஆம் நாள் மிக முக்கியமான நாளாக அமைந்தது. பிக் பாஸ் போட்டியாளர்களின் முகத்திரைகளை அவர்களாகவே கிழித்துக் கொண்ட நாள் இது. கமல் சனிக்கிழமை அத்தியாயத்துக்காக மேடைக்கு வந்ததும் ஐந்தாம் வார மீள்பார்வை, வெள்ளிக்கிழமை நிகழ்வுகள், பார்வையாளர்களின் கேள்விகளை முடித்துக் கொண்டு பிக் பாஸ் போட்டியாளர்களைச் சந்தித்தார். 

வெள்ளிக்கிழமை நீச்சல் குளத்தில் போட்டியாளர்கள் சிலர் இருந்திருக்கின்றனர். இதன் போது மஹத் சென்றாயனை தலைகீழாக தூக்க சென்றாயனுக்கு மூக்குச் சளி வந்து நீச்சல் குளத்தில் மிதந்திருக்கின்றது. இதனால் வைஷ்ணவி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் நீச்சல் குளத்தை விட்டு வெளியேறியிருக்கின்றனர். 'மூக்குச் சளி வர்றது தப்பா சார்?' என்று உணர்ச்சி வசப்பட்டார் சென்றாயன். அத்துடன் 'இந்த வீட்டில் யாருமே உண்மையாக இல்லை, எல்லோரும் உண்மையாக இருந்தால் இங்கு இரத்த ஆறு தான் ஓடும்' என்று சென்றாயன் சொல்ல பிக் பாஸ் வீட்டிலும் பிக் பாஸ் அரங்கிலும் பலத்த கரகோஷம். 'இங்கேயும் கை தட்றாங்க, வெளிலயும் கை தட்றாங்க, நா என்ன பண்றது?' என்றார் கமல். சென்றாயன் சொன்னது சரி என்றே நமக்கும் தோன்றுகிறது. 

பொன்னம்பலம் இரண்டு விடயங்களை முன்வைத்தார். முதல் வாரத்தில் எல்லோரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்த போது பொன்னம்பலத்தின் மீது அருகில் அமர்ந்திருந்த ஐஸ்வர்யா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த போது பொன்னம்பலத்தின் மீது அவர் கால் பட்டிருக்கிறது. அதற்கு பொன்னம்பலம் 'இது சரியில்லை, இப்படி இருக்கக் கூடாது' என்று அறிவுரை கூறியிருக்கிறார். அதற்கு ஐஸ்வர்யாவும் மன்னிப்பு கேட்டுவிட்ட நிலையில் பொன்னம்பலம் அதனை மீண்டும் நினைவு கூர்ந்தார்.அடுத்து டேனியல், ஐஸ்வர்யா, யாஷிகா மூவரும் குழு சேர்ந்துள்ளனர். டேனியல் மற்ற இருவரின் திறமைகளை மறைத்து தான் மட்டும் முன்னேற நினைக்கிறார். மூவரும் சேர்ந்து ஆட்டம் போடுவது சரியில்லை. டேனியலின் நடவடிக்கைகள் சக போட்டியாளர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணுகிறது. ஆகிய கருத்துக்களை பொன்னம்பலம் முன்வைத்திருந்தார். 

பொன்னம்பலத்தின் கருத்துக்கள் ஐஸ்வர்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. தமிழ்நாடு, கலாச்சாரம் என்கிற ரீதியில் ஐஸ்வர்யாவை குறிப்பிடுவது பிடிக்கவில்லை. ஐஸ்வர்யா ஏன் என்று கேட்கப்போக பொன்னம்பலம் கோபப்பட பிரச்சினை பெரிதாகியது. மும்தாஜ் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பொன்னம்பலத்துடன் சண்டைக்கு வந்தார். இதனை மேடையில் இருந்தே கவனித்த கமல் சனிக்கிழமை அத்தியாயத்தில் போட்டியாளர்களிடம் சொல்லாமலேயே விடைபெற்றார். இதற்கு கமலின் பதில் என்ன? மய்யம் என்ன சொல்லும்? பார்க்கலாம்! 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #SIGARAMCO

Saturday, 21 July 2018

விஜய் 62 | சர்க்கார் | ஒளிப்படத் தொகுப்பு | VIJAY 62 | SARKAR | STILLS COLLECTION

தளபதி விஜய்யின் 62வது திரைப்படமான 'சர்க்கார்' படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் இடம்பெற்று வருகிறது. 2018 தீபாவளிக்கு 'சர்க்கார்' திரைக்கு வருகிறது. தளபதி ரசிகர்களுக்காக 'சர்க்கார்' ஒளிப்படத் தொகுப்பு இதோ: 


#சர்க்கார் #விஜய் #இளையதளபதி #இசைப்புயல் #விஜய்62 #தீபாவளி #கீர்த்திசுரேஷ் #Thalapathy #SARKAR #VIJAY62 #ARRAHMAN #Deepavali #KeerthiSuresh #SunPictures #SIGARAMCO #சிகரம்

வலைத்தளம் (ப்ளாக்) உருவாக்குவது எப்படி? How To Create a Blog? [Tamil] - பிளாக்கர் நண்பன்


#வலைத்தளம் #தமிழ் #பிளாக்கர்_நண்பன் #தொழிநுட்பம் #Blog #Blogger #How #Tamil #How_Create_Blog #Blogger_Nanban #SIGARAMCO #சிகரம் 

-பிளாக்கர் நண்பன் 

BBTamil2 | WEEK 05 | DAY 33 | BALAJI IN JAIL | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 05 | நாள் 33 | பாலாஜிக்கு சிறை!

'சித்திரம் பேசுதடி' போட்டி இன்றைய நாளுக்கான முதல் போட்டி. போட்டிகளுக்குப் பெயர் வைப்பதில் பிக் பாஸ் விற்பன்னர். Vivo V 9 திறன்பேசி ஒன்று வழங்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டியாளர்களும் அவர்களுக்குப் பிடித்த ஐந்து போட்டியாளர்களுடன் அதில் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு போட்டியாளருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இரகசிய அறையின் முன்னால் உள்ள ஒளிப்பதிவுக் கருவியின் முன் காட்ட வேண்டும். பின்னர் மதியம் வரவேற்பறையில் உள்ள தொலைக்காட்சியில் செல்பி எடுத்தவரின் பெயரும் அவர் தெரிவு செய்த ஒரு புகைப்படமும் காண்பிக்கப்படுகிறது. அவர்கள் ஏன் அந்தப் புகைப்படத்தைத் தெரிவு செய்தார்கள் என்பதை எல்லோர் முன்னிலையிலும் சொல்ல வேண்டும். டேனியும் சென்றாயனும் ஒருவரை ஒருவர் தேர்வு செய்திருந்தனர். யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் தேர்வு செய்திருந்தனர். சிலர் பொன்னம்பலத்தையும் தேர்வு செய்திருந்தனர். BIGG BOSS TAMIL 2 | WEEK 05 | WHO IS YOUR FAVOURITE CONTESTANT?

ரம்யா - RAMYA
பாலாஜி - BALAJI
ஐஸ்வர்யா - AISHWARYA
பொன்னம்பலம் - PONNAMBALAM
ஜனனி - JANANIஇந்த வார 'கனாக் காணும் காலங்கள்' போட்டியின் முடிவுகளை பிக் பாஸ் அறிவிக்கிறார். போட்டியாளர்கள் எல்லோரும் அந்தப் போட்டியில் ஆர்வமாகக் கலந்து கொண்டாலும் சில போட்டியாளர்கள் கதாபாத்திரத்தை மறந்து நடந்து கொண்டனர். மேலும் 33ஆம் நாளான இன்று மதியம் ஷாரிக், யாஷிகா, மஹத் (இந்த வார தலைவர்) ஆகியோர் பகலில் தூங்கினர். 'கனாக் காணும் காலங்கள்' போட்டிக்கான மொத்தப் புள்ளிகள் 2600. இப்போட்டியில் ஆர்வம் காட்டாத போட்டியாளர்களுக்காக 200 புள்ளிகளும் பகலில் தூங்கிய போட்டியாளர்களுக்காக 600 புள்ளிகளுமாக மொத்தம் 800 புள்ளிகள் கழிக்கப்பட்டு பொருட் கொள்வனவிற்காக 1800 மதிப்பெண்கள் மாத்திரம் வழங்கப்பட்டன. 
இரவு 'நிமிர்ந்து நில்; துணிந்து செல்' போட்டி. இந்த வார வெளியேற்றத்திற்கு தேர்வாகியுள்ள ஐந்து பேரையும் டேனியல் நேர்காணல் செய்கிறார். பிக் பாஸ் டேனியலுக்கு ஐந்து கேள்விகளை வழங்கியுள்ளார். அந்த ஐந்து கேள்விகளையும் டேனியல் அவர்களிடம் கேட்க வேண்டும். ஏனைய போட்டியாளர்கள் வெளியேற்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களிடம் மூன்று கேள்விகளைக் கேட்கலாம். 
நேர்மையான முறையில் பதில் சொன்னதாக டேனியலால் தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு அடுத்த வாரம் சிறப்பு சக்தி ஒன்று பிக் பாஸினால் வழங்கப்படும். கடந்த முறை பொன்னம்பலத்துக்கு வழங்கப்பட்ட சக்தி போல இருக்குமா? அல்லது வெளியேற்றத்தில் இருந்து காப்பாற்றப்படுவாரா? நேர்மையற்ற முறையில் பதில் சொல்லப்பட்டதாக தேர்வு செய்யப்பட்ட பாலாஜி இரவு பதினோரு மணியளவில் சிறையில் அடைக்கப்படுகிறார். டேனி மும்தாஜிடம் இன்று பகல் சொன்னது போல வைரஸை சுத்தப்படுத்திவிட்டார் போலும். அடுத்து ஆண்டவனின் தீர்ப்பு. பார்க்கலாம். 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #SIGARAMCO

Friday, 20 July 2018

சிகரத்துடன் சில நிமிடங்கள் : யாழ்பாவாணன்

சிகரத்துடன் சில நிமிடங்கள்:
பத்துக்கேள்விகள் - முத்துப் பதில்கள்!


கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். 

நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன். நம் தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பேணச் சிறந்த நூல்கள் தேவை என்பதை உணர்ந்து, அறிஞர்களின் சிறந்த பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்கும் பணியிலும் இறங்கி உள்ளேன். உலகெங்கும் வாழும் தமிழர் படித்து முன்னேறவும் தமிழரல்லாத ஏனையோரும் தமிழைக் கற்பதற்கு உதவும் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிர மின்நூல் களஞ்சியங்களையும் பேணுகிறேன். 

எனது தளங்கள்: 

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? 

ஒரு படைப்பு நல்லதா? கெட்டதா? என்பதை வாசகர்களே தீர்மானிக்கின்றனர். நான் ஒரு வாசகர் என்ற வகையில், வாசகர் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் படைப்புகள் சிறந்தவை. அதேவேளை, அவை மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்லவும் வேண்டும். 

மக்கள் / வாசகர் உள்ளங்களை ஈர்த்துக்கொள்ளும் படைப்பு எதுவோ அதுவே நல்ல படைப்பு! அதாவது, நல்ல படைப்பு மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டே இருக்கும். எ-கா: கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள். 

கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?

தமிழ் மக்களின் பக்கம் "ஒற்றுமையின்மை" என்ற நோயுள்ளவரை விடியல் என்ற பேச்சுக்கு இடமேயில்லை.

அங்காடியில் (சந்தையில்) பொருட்களின் விலை பேசுவது போல அதாவது உயர்ந்த விலை கிட்டாதது போல ஆளுக்கொரு கட்சியாக ஆளுக்கொரு கொடியைத் தூக்கிக்கொண்டு அரசியல் பேசினால் தமிழ் மக்களின் சிக்கல்களுக்குத் தீர்வு கிட்டுவதில்லையே! 

ஒரே தலைமை, ஒரே கட்சி, ஒரே கொடி, ஒரே தமிழ் மக்களின் உயரிய தீர்வு என ஓரணியில் மக்கள் அணி திரளாத வரை அதாவது ஒரு குடையின் கீழ் ஒன்றிணையாத வரை தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுத் தரக்கூடிய அரசியல் சூழ்நிலை அமையாது.

மக்களே பெரியவர்கள், மக்களின் விருப்பமே உயர்ந்தது என மக்களுக்காக அரசியல்வாதிகள் கீழிறங்கி வந்து மக்களோடு மக்களாக மக்களின் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க முன்வந்தால் தமிழ் மக்கள் உலகையே ஆளும் சக்தி பெற்றவர்களாக வாழலாம்.

கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? ஒருவர் தனித்து வாழ முடியாது, மக்களாயத்தின் (சமூகத்தின்) ஓர் உறுப்பினராகவே வாழ இயலும். மக்கள் கட்டமைப்பைப் பேணுவதன் மூலமே வளர்ச்சியை நோக்கி நகர முடியும்.

எனவே, மக்களிடையேயான தொடர்பாடல் ஊடகமாக மொழி தான் முக்கிய பங்கெடுக்கிறது. மொழியின்றி எந்த வெளியீடும் இடம்பெறாதே! மக்கள் முன்னேற்றக் கருத்தாடல்களைப் பகிரவும் செயல்களை மொழி பெயர்க்கவும் மொழியே ஊடகம். எனவே, மக்கள் நல மேம்பாட்டிற்கு மொழி முக்கிய பங்காற்றுகிறது.

கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? 

எனது வாழ்வில் இலக்கு என்று சொல்ல நிறைய இருந்தாலும் நான் கற்றதைப் பலரறியச் செய்வதே என் பணி! அதாவது, கற்றலும் கற்பித்தலுமே எனது நெடுநாள் இலக்கு என்பேன்.

அதற்கான ஊடகமாகப் பாப்புனைதல் (கவிதையாக்கம்), உளநல மதியுரையும் வழிகாட்டலும் என வலை வழியேயும் மக்கள் முன்னிலையிலும் மேற்கொள்கிறேன். மேலும், மின்நூல்களும் அச்சு நூல்களும் வெளியிட்டுப் பிறருக்கு அறிவூட்டும் பணியைத் தொடருகிறேன்.

கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா? 

கடந்து வந்த வழிகள் எங்கும் தான்
கல்லும் முள்ளும் காலைத் தைத்தன
கடந்து வந்த வழியிலே கற்றவை தான்
கடந்து செல்ல வேண்டிய வழியைக் காட்டுமே!

நாம் கடந்த கால வரலாற்றைப் பேணியவாறே, மாறும் உலகிற்கேற்ப எமது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். எனவே, கடந்த கால வரலாற்றைப் பாதுகாப்பதோடு எதிர் காலத்தைப் பற்றிச் சிந்திப்போம். இன்றைய நிகழ்காலம் தானே, நாளைக்குக் கடந்த கால வரலாறு ஆகிறதே!

கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா? 

வாசிப்புப் பழக்கம் கணினி நுட்பம் வந்த பின் அதிகரிக்க வில்லை; வாசிப்புப் பழக்கத்தைக் குறைத்து விட்டது எனலாம். காரணம் ஒலி (Audio), ஒளிஒலி (Video) பதிவுகளை விரும்புவதால் வாசிப்பை நாடுவோர் குறைவு. அதற்காக வாசிப்புப் பழக்கம் அழிந்துவிடப்போவதில்லை.

ஆயினும் பாடசாலை மட்டத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதால் வாசிப்புப் பழக்கம் தொடரும். வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பல பணித்திட்டங்களை அறிமுகம் செய்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்காது விட்டால் வாசிப்புச் செயல் சோர்வடைய இடமுண்டு.

கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா? 

மக்களாய (சமூக) வலைத்தளங்கள் ஒரு போதும் வரமாக மாட்டாது. சிறந்த படைப்பாளிகளை மங்கிப் போகச் செய்வதால் சாபமே! ஆயினும் அவை செய்தியைப் பரவச் செய்யும் ஊடகமே! அதிலும் போலிச் செய்திகளைப் பரப்பி மக்களைக் குழப்பிக் கலகம் செய்யத் தூண்டும் ஊடகங்களே! தேடல் உள்ளவர்கள் நல்லதைப் பொறுக்கித் தம்மை மேம்படுத்த இவற்றைப் பாவிக்கலாம். ஆனால், நல்ல பதிவுகளைத் தங்களுடையதெனப் பகிரும் கெட்ட செயல் நன்மை தரமாட்டாதே! நன்மை கருதி நல்லொழுக்கமாகப் பேணினால் நன்மை உண்டு.

கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்?

நான் பாவலன் என்பதால், பாப்புனையப் பழகியதே மு. மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்' போன்ற அவரது நூல்களைப் பார்த்தே! பாவரசர் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்" பத்துப் பாகமும் படித்தேன். கவிஞர் வைரமுத்துவின் "என் பழைய பனையோலை" என்ற நூல் படித்தேன். இப்படிப் பல நூல்களைப் படித்துள்ளேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர் யாரென்றால், அதிக வாசகர்களை வசப்படுத்தி வைத்திருக்கும் எல்லோருமே! காரணம், அவர்களைப் போல நானும் வாசகர்களை வசப்படுத்தி வைத்திருக்க விரும்புவதாலே!

கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்? 

'தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்றால் தமிழ் வாழாது. தமிழில் எழுதுவதும் பேசுவதும் பழகுவதும் வழக்கமாக்கினால், பிறமொழி கலக்காது தமிழைப் பயன்படுத்தினால் போதாது. பெற்றோர் பிள்ளைகளைத் தமிழ் மொழி மூலக் கல்வி திட்டத்தில் இணைப்பதோடு, 24 மணி நேரமும் பிள்ளைகளோடு தமிழில் உறவாட வேண்டும். அதன் பின் தமிழின் சிறப்பை உலகெங்கும் பரப்பிப் பேணவேண்டும்.

இவ்வண்ணம்
-சிகரம் 

#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #யாழ்பாவாணன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Interview #Q&A 
#SIGARAM #சிகரம் 

BBTamil 2 | WEEK 05 | DAY 32| பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 05 | நாள் 32

பிக் பாஸ் பள்ளிக்கூடம் போட்டி இன்றோடு முடிவுக்கு வருகிறது. சென்றாயன் முதலிடத்தைப் பெற்று சிறந்த மாணவனாக தேர்வாகிறார். இது டேனிக்குப் பிடிக்கவில்லை. ஐஸ்வர்யா இரண்டாமிடத்தையும் பாலாஜி மூன்றாமிடத்தையும் பெறுகின்றனர். ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள் பத்துப் பதினைந்து பேர் பிக் பாஸ் இல்லத்திற்கு வருகை தருகின்றனர். போட்டியாளர்கள் குழந்தைகளுடன் விளையாடுகின்றனர். குழந்தைகளுக்கு வரைதல் மற்றும் கைவினைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. பின்னர் குழந்தைகள் அவர்களைப் பற்றிக் கூறுகின்றனர். 
சின்னா என்னும் சிறுவன் அவனது அம்மா அப்பா சண்டை போட்டு பிரிந்துவிட்டதாகவும் அவர்கள் ஒன்று சேர பிரார்த்திப்பதாகவும் கூறுகிறான். ஆகாஷ் என்னும் சிறுவன் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆலுமா டோலுமா பாடலைப் பாட பொன்னம்பலத்துடன் இணைந்து நடனமாடுகிறான். 
BIGG BOSS TAMIL 2 | WEEK 05 | WHO IS YOUR FAVOURITE CONTESTANT?

ரம்யா - RAMYA
பாலாஜி - BALAJI
ஐஸ்வர்யா - AISHWARYA
பொன்னம்பலம் - PONNAMBALAM
ஜனனி - JANANI


சிறுவர்களுக்குப் பரிசு வழங்கப்படுகிறது. சிறுவர்கள் பேசியத்தைக் கேட்டு பல பிக் பாஸ் போட்டியாளர்கள் உள்ளம் உருகுகின்றனர். சிறுவர்கள் கிளம்பும் நேரம் ஆலுமா டோலுமா பாடல் ஒலிபரப்பாக போட்டியாளர்களும் சிறுவர்களும் ஆடுகின்றனர். 
சிறுவர்கள் சென்ற பின்பு அவர்களைச் சுற்றியே போட்டியாளர்களின் உரையாடல்கள் அமைந்திருக்கின்றன. ஆகாஷ் என்னும் சிறுவன் 'அம்மா இறந்துட்டாங்க, அப்பா ஓடிப் போயிட்டாரு' என்று கூறினான். ஏனையவர்களும் இது போன்ற வலிகளை இன்று பகிர்ந்து கொண்டிருந்தனர். இவை நம்மையே கலங்கடித்திருக்கின்றன. இதைப் பற்றி கமல் நிச்சயம் சனிக்கிழமை பேசுவார். 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

பிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல்

நடிகர் பிரபு தேவாவின் புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. மெர்க்குரி திரைப்படத்தைத் தொடர்ந்து லக்ஷ்மி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் பிரபு தேவா நடித்து வருகிறார். அந்த வரிசையில் இணையும் புதிய திரைப்படம் 'பொன் மாணிக்கவேல்' ஆகும். 
ஏ. சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கிறார். இமான் இசையமைக்க நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடிக்கிறார். கே. ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ. சி. முகில் செல்லப்பன் பிரபு தேவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ஜபக்ஸ் மூவிஸ் தயாரிக்கிறது. விரைவில் முன்னோட்ட காணொளிகள் வெளியாகவுள்ளன. 
தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரி பொன் மாணிக்கவேல். இவர் அண்மையில் 60 வருடங்களுக்குப் பின் குஜராத்தில் இருந்து ராஜராஜன் சிலையை தமிழகத்திற்கு மீட்டு வந்தார். 7000 சிலைகள் தமிழகத்தில் இருந்து காணாமல் போயுள்ள நிலையில் இவற்றை மீட்பது குறித்து பரபரப்பு நிலவி வருகிறது. 
இந்நிலையில் பிரபு தேவாவின் படத்துக்கும் இந்தக் கதைதான் பின்னணியில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நடிகர் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தைப் போன்று இதுவும் ராஜராஜன் சிலை மீட்பு குறித்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படலாம் என நம்பப்படுகிறது. #PrabhuDeva #PonManikkavel #DImman #Tamil #TamilMovie #CinemaNews #TamilCinema #TamilMovies2018 #RajaRajan #Tanjavur #TamilFilm #SIGARAMCO 

ஆதலால் கவிதை செய்வோம் !

'யாழ் இலக்கியக் குவியம்' இலக்கிய அமைப்பு யாழில் 'ஆதலால் கவிதை செய்வோம்' கவிதை வாசித்தல் மற்றும் உரையாடல் நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது. எதிர்வரும் 22.07.2018 ஞாயிறு பிற்பகல் 02.30 மணிக்கு ஈச்சமோட்டை உப தபாலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஐ லீட் கணினிக் கல்வி நிலையத்தில் (I Lead Computer Centre) இந்நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்பும் இலக்கிய ஆர்வலர்கள் தாம் விரும்பிய தலைப்பில் கவிதை வாசிக்கலாம். அத்துடன் தனக்குப் பிடித்த பிறரின் கவிதை ஒன்றையும் நிகழ்வில் வாசிக்க முடியும். படைப்புகள் A4 அளவு தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட்டிருக்க வேண்டும். தமிழின் சமகாலக் கவிதைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்புவோர் யாழ் இலக்கியக் குவியத்தைச் சேர்ந்த யாழ்பாவாணன் அவர்களை +94703445441 மற்றும் +94779258945 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகத் தொடர்பு கொண்டு தமது வருகை மற்றும் பங்குபற்றுதலை உறுதி செய்து கொள்ளலாம். 
ஆதலால் கவிதை செய்வோம்!

-யாழ் இலக்கியக் குவியம்

#கவிதை #தமிழ் #யாழ் #யாழ்ப்பாணம் #யாழ்_இலக்கியக்_குவியம் #கவியரங்கம் #அழைப்பிதழ் #ஆதலால்_கவிதை_செய்வோம் #சிகரம் 

Thursday, 19 July 2018

The Cricket God Sachin Tendulkar's Biography | சச்சினின் கதை | News7 Tamil


#Sachin #SachinTendulkar #MasterBlaster #India #Cricket #BCCI #IPL #MumbaiIndians #MI #DLFIPL #VivoIPL #MSD #Dhoni #CricketStory #CricketNews #GodofCricket #Sports #NS7tv #SigaramCO #SigaramInfo 

BIGG BOSS TAMIL 2 | WEEK 05 | DAY 31 | BIGG BOSS COUNSELING | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 05 | நாள் 31 | பிக் பாஸ் ஆலோசனை

'ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா, அழகான பொண்ணுங்கள தேடுங்கடா' என்னும் சமூகக் கருத்துள்ள பாடலை ஒலிபரப்பி போட்டியாளர்களை எழுப்பினார் பிக் பாஸ். வாழ்க பிக் பாஸ்! தொடர்ந்து 'ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்' பாடலை பிக் பாஸ் பள்ளியின் தலைமையாசிரியர் ரித்விகா சொல்லிக் கொடுக்க சக போட்டியாளர்கள் பாடினர். நித்யாவுக்கும் போஷிகாவுக்கும் கேமராவில் பாலாஜி நன்றி சொல்லிக்கொண்டிருந்தார். லவ் யூ வேறு. ஒன்று சேர்ந்தால் சரி தான். 


பிக் பாஸ் பள்ளியில் பாட்டு வகுப்பு. பாட்டு வாத்தியார் ரம்யா. முதலில் அடிப்படை சங்கீதம் சொல்லித்தருகிறார் ரம்யா. பின்னர் மாணவர்களை நான்கு அணிகளாகப் பிரித்து அவர்களுக்கு நான்கு பாடல்களைச் சொல்லித் தருகிறார். நான்கு அணிகளும் பாடலை பாடி நடித்துக் காட்டுகின்றனர். ஐஸ்வர்யா-யாஷிகா-பொன்னம்பலம் கூட்டணி பாடுகிறேன் என்ற பெயரில் தமிழைக் கொன்று புதைத்தது வேதனை. மஹத்-ஷாரிக்-ஜனனி-டேனி கூட்டணி சிறந்த குழுவாக தேர்வானது. 

கடிதம் எழுதும் நேரம். தங்களுடன் நெருக்கமாக இருந்து தற்சமயம் அருகில் இல்லாத அன்புக்குரிய ஒருவருக்கு கடிதம் எழுத வேண்டும். பாலாஜி நித்யா மற்றும் போஷிகாவுக்கு எழுதினார். டேனி மறைந்த தன் தந்தைக்கு எழுதினார். ஐஸ்வர்யாவின் கடிதம் சிறந்த கடிதமாக தேர்வானது. 
BIGG BOSS TAMIL 2 | WEEK 05 | WHO IS YOUR FAVOURITE CONTESTANT?

ரம்யா - RAMYA
பாலாஜி - BALAJI
ஐஸ்வர்யா - AISHWARYA
பொன்னம்பலம் - PONNAMBALAM
ஜனனி - JANANI


இரவு 09.45 மணிக்கு பிக் பாஸ் பள்ளியின் ஒரு பகுதியாக உளநல ஆலோசனை (Counseling) வழங்கப்படுகிறது. வழங்குபவர் வைஷ்ணவி. நல்ல தேர்வு பிக் பாஸ். இந்த மாதிரியான யோசனைகளுக்காகவே நீங்க தான் உலக மகா பிக் பாஸ்! ஒவ்வொருவரும் பிக் பாஸ் வீட்டில் அவரவருக்கு உள்ள பிரச்சினைகளை வைஷ்ணவியிடம் பகிர்ந்து தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நள்ளிரவு ஒரு மணிக்கு தனது பணியை நிறைவு செய்கிறார் வைஷ்ணவி. 
நள்ளிரவு 01.15 மணிக்கு பிக் பாஸ் வைஷ்ணவியின் பிரச்சினைகளைக் கேட்டறிகிறார். நள்ளிரவு 01.15 மணிக்கே பிக் பாஸ் வீட்டின் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. என்ன தான் போட்டியாளர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தாலும் உங்க திருவிளையாடல்களைக் காட்டாமல் விடுவீர்களா பிக் பாஸ்? விடிய விடிய யோசிச்சு அடுத்து என்ன ஆப்பு வைக்கலாம்னு யோசிச்சிட்டு இருப்பீங்கள்ல? யோசிச்சு வைங்க. பார்க்கலாம்!
உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

யாஷிகா YASHIKA
பொன்னம்பலம் PONNAMBALAM
மஹத் MAHATH
டேனியல் DANIEL
வைஷ்ணவி VAISHNAVI
ஜனனி JANANI
அனந்த் ANANTH
ரம்யா RAMYA
சென்றாயன் SENRAYAN
ரித்விகா RIYTHVIKA
மும்தாஜ் MUMTAZ
பாலாஜி BHALAJIE
நித்யா NITHYA
மமதி MAMATHI
ஷாரிக் SHARIQ
ஐஸ்வர்யா AISHWARYA
Created with PollMaker#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO
Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...