BBTamil 2 | Week 06 | Day 39 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 06 | நாள் 39 | செல்பி புள்ள

'எங்க ஏரியா உள்ள வராத' போட்டியில் பிக் பாஸ் வீடு ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து பகுதிகளையும் தமதாக்கிக் கொள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து போராட வேண்டும். ஜனனி அணி மற்றும் மும்தாஜ் அணி என இரண்டு அணிகள். ஷாரிக் நடுவர். சமையல் பகுதி மற்றும் முற்றம் (Garden) ஜனனி அணிக்கு சொந்தம். படுக்கையறை மும்தாஜ் அணிக்கு சொந்தம். 



38ஆம் நாள் மாலையில் குளியலறைப் பகுதியை சொந்தமாக்கிக் கொள்வதற்கான போட்டி ஆரம்பமானது. முற்றத்தில் இரண்டு குளிப்பதற்கான (Shower) அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இரு அணிகளில் இருந்தும் ஒவ்வொரு போட்டியாளர் வந்து கொடுக்கப்பட்ட சோப்பை உடம்பில் பூசி கரைக்க வேண்டும். யார் அதிகமாக கரைக்கிறாரோ அவரது அணியே வெற்றி பெறும். புகைக்கும் பகுதியும் குளியலறையின் ஒரு அங்கமாகும். சென்றாயனும் மஹத்தும் பங்குபற்றிய போட்டியில் மஹத்தின் அணி (மும்தாஜ்) வெற்றி பெற்று குளியலறைப் பகுதியை உரித்தாக்கியது. 



பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 06 | யாரைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள்?

வைஷ்ணவி - VAISHNAVI
மும்தாஜ் - MUMTAZ
யாஷிகா - YASHIKA
பொன்னம்பலம் - PONNAMBALAM
மஹத் - MAHATH
Created with PollMaker



மும்தாஜ் தான் உணவு உண்பதற்கு தனக்கு இயலாத செயல்களைச் (Task) செய்ய வைக்கிறார்கள், தன்னைப் பழி வாங்குகிறார்கள் என்று குறை கூறிக் கொண்டிருந்தார். 38ஆம் நாள் நள்ளிரவில் சென்றாயன் கழிப்பறைக்குச் செல்வதற்காக வந்தார். மாலையில் கழிப்பறை மும்தாஜ் அணிக்கு சொந்தமாகியிருந்தது. கழிப்பறை செல்வதாக இருந்தால் மும்தாஜ் அணி வழங்கும் சிறு விளையாட்டுகளை (Task) செய்ய வேண்டும். மும்தாஜ் சென்றாயனை 'செல்பி புள்ள' பாடலைப் பாடுமாறு கூறுகிறார். 




அந்தப் பாடல் அதிகமான ஆங்கில வார்த்தைகளை உள்ளடக்கியது. சென்றாயனுக்கு சரியாக ஆங்கிலம் வராது. பள்ளிக்கூடம் போட்டியில் இந்தப் பாடலைப் பாட சென்றாயன் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை அறிவோம். இந்த நிலையில் மும்தாஜ் பிடிவாதமாக பாடலை சரியாகப் பாடினால் மட்டுமே கழிப்பறைக்குள் அனுமதிப்பேன் என்று கூறியது நியாயமா? மும்தாஜ் தனக்கு ஒரு நியாயத்தையும் மற்றவர்களுக்கென ஒரு நியாயத்தையும் வைத்திருக்கிறாரா?




பிறகு டேனியும் ஜனனியும் வந்து சென்றாயனுக்கு பாடலைச் சொல்லிக் கொடுத்தனர். ஆனாலும் மிகவும் சிரமப்பட்டே அவர் பாடலை பாடினார். பல தடவை சறுக்கி மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருந்தார். சென்றாயன் சரியாகப் பாடிய பின்னரே கழிப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டார். 

39ஆம் நாள் காலைப் பொழுது 'யாரடி நீ மோகினி? கூறடி என் கண்மணி...' பழைய பாடலுடன் விடிந்தது. அன்றைய நாளிலும் சென்றாயன் கழிப்பறை செல்ல முற்பட்ட போது அந்த 'செல்பி புள்ள' பாடலைப் பாடுமாறு மும்தாஜினால் கட்டாயப்படுத்தப்பட்டார். மும்தாஜ் எல்லா விடயத்திலும் தனது பிடிவாதத்தைக் காண்பிக்கிறார். அவர் எந்த இடத்திலும் தனது நிலையை விட்டுக்கொடுத்து செல்வதாக இல்லை. 




39ஆம் நாளுக்காக காண்பிக்கப்பட்ட முன்னோட்டக் காணொளியில் காணப்பட்ட பரபரப்பான காட்சிகள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது காண்பிக்கப்படவில்லை. நேரமின்மை கருதி நீக்கப்பட்டதா அல்லது அடுத்த அத்தியாயத்தில் காண்பிக்கப்படுமா? ஒரு வேளை விஜய் தொலைக்காட்சி மக்களுக்கு பரப்பரப்பைக் கிளப்பி ஏமாற்றுகிறதா? பொறுத்திருந்து பார்க்கலாம். 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #VijayTelevision #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!