BIGG BOSS TAMIL 2 | WEEK 04 | DAY 26 | KADAIKKUTTI SINGAM | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 04 | நாள் 26 | கடைக்குட்டி சிங்கம்!

நடிகர் கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படக்குழுவினர் பிக் பாஸ் போட்டியாளர்களை மகிழ்விப்பதற்காக வந்திருந்தனர். மேள தாளத்துடன் கார்த்தி, சூரி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் உள்நுழைந்தனர். சண்டையும் சச்சரவுமாக இருந்த வீடு கலகலப்பாக மாறிப் போகிறது. பத்து நாள் சாப்பிடாதவனுக்கு பிரியாணி கிடைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது போட்டியாளர்களுக்கு. 




வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருப்பதால் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம், கவலை ஆகியன இதற்குப் பிறகு மாறக் கூடும். வீட்டை சுற்றிப் பார்க்கலாம் என்று சொன்னதும் இயக்குனர் பாண்டிராஜ் மஹத் படுக்கை எங்கேன்னு காட்டுங்க என்று கேட்க கலகலக்கிறது வீடு. எல்லாரும் நடிக்கிறீங்க என்று மக்கள் பேசிக்கொள்வதாக கார்த்தி கூறினார். 




போட்டியாளர்களின் பட்டப் பெயர்களைக் கேட்டறிகின்றனர். அதன் பிறகு 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்பட முன்னோட்ட காணொளி போட்டியாளர்களுக்கு காண்பிக்கப்படுகிறது. பின்னர் பாண்டிராஜ் படக்கதையை போட்டியாளர்களுக்குச் சொல்கிறார். படத்தின் கதாபாத்திரங்களை போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றனர். 




'கடைக்குட்டி சிங்கம்' படக்குழு சார்பில் போட்டியாளர்களுக்கு போட்டி ஒன்று வைக்கப்படுகிறது. போட்டியாளர்கள் கண்ணாடிக் குடுவையில் இருந்து சீட்டு ஒன்றை எடுத்து அதில் எழுதியுள்ள திரைப்படத்தின் பெயரை நடித்துக் காட்டி மற்றைய போட்டியாளர்களை கண்டுபிடிக்கச் செய்ய வேண்டும். படக்குழுவினரும் கூட இப்போட்டியில் கலந்து கொண்டனர். 'கடைக்குட்டி சிங்கம்' வாழ்க! 

முன்னதாக 25ஆம் நாள் இரவு 09.30 மணிக்கு பிக் பாஸின் ரகசிய அறைக்குச் சென்ற மும்தாஜ் தனது அணி சார்பில் தன்னிடம் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' போட்டியின் மீதிப்பணத்தை பிக் பாஸிடம் ஒப்படைக்கிறார். அதே போல் பொதுமக்கள் சார்பில் நித்யாவும் திருடர்கள் சார்பில் டேனியும் தங்களிடமிருக்கும் மிகுதிப் பணத்தை ஒப்படைக்கின்றனர். போட்டி அத்துடன் முடிவடைந்துவிட்டாலும் 26ஆம் நாள் காலை ஒன்பது மணிக்கே மஹத் விடுதலை செய்யப்படுகிறார். 




26ஆம் நாள் காலைப் பொழுது 'ஆலுமா டோலுமா'வுடன் விடிகிறது. மதியம் 02.30 மணிக்கு 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. போட்டியின் முடிவில் பொதுமக்கள் 380 ரூபாவும் காவல்துறை 570 ரூபாவும் திருடர்கள் 800 ரூபாவும் வைத்திருந்ததன் அடிப்படையில் திருடர்கள் அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படுகிறது. 

இந்தப் போட்டிக்காக பிக் பாஸ் வீட்டின் அடுத்த வார Luxury Budget புள்ளிகளாக 2800 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற திருடர்கள் அணி மட்டுமே பொருட் கொள்வனவில் ஈடுபட வேண்டும். சக போட்டியாளர்களிடம் கலந்துரையாடக் கூடாது. கொள்வனவு செய்யும் பொருட்களை திருடர்கள் அணியினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினால் தண்டிக்கப்படுவார்கள். 

'கடைக்குட்டி சிங்கம்' படக்குழுவினர் விடைபெற்றுச் சென்ற பின்னர் திருடர்கள் அணி கொள்வனவு செய்த பொருட்கள் வந்து சேர்கின்றன. அவற்றுக்கு பீட்சாவும் அடக்கம். திருடர்களான டேனியல், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய மூவரும் சக போட்டியாளர்களைப் புறக்கணித்துவிட்டு (என தான் விதிமுறையாக இருந்தாலும்) முற்றத்தில் அமர்ந்து தனியாக அதனை சாப்பிடுகின்றனர். வீட்டின் விளக்குகளும் அணைக்கப்படுகின்றன. 




அடுத்தது சனிக்கிழமை அத்தியாயம். வெளியேற்றத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்களில் காப்பாற்றப்படும் ஒரு போட்டியாளரின் பெயர் அறிவிக்கப்படும். வைஷ்ணவிக்குக் குறும்படம் காட்டப்படலாம். இன்னும் சில குறும்படங்களையும் நாம் எதிர்பார்க்கிறோம். கமல் தீர விசாரிப்பாரா? மக்கள் மனதிலுள்ள கேள்விகளுக்கான விடை கிடைக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம். 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

Comments

  1. நீங்க எப்படி இவ்வளவு பார்வையாளர்களை பெற்றீர்கள்???
    என்னுடைய போஸ்ட்டையும் உங்கள் அக்கவுண்டில் போடுகிறிர்களா??

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவுகள் தரமானவையாக இருந்தால் அவற்றை பிரசுரிக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். உங்கள் பதிவுகளை sigaramco@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!