சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் - பாலாஜி

சிகரத்துடன் சில நிமிடங்கள்:
பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!


கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

பெரியதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.  வயது 67. வசிப்பது பெங்களூர்.  'தி இந்து' பத்திரிகையில் பணியாற்றி ஓய்வு. இசை விரும்பி. மொழியார்வம் உண்டு. தமிழர் வரலாறு விருப்பம்.

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?

என்றும் மனதில் நிற்குமாறு,  உணர்வு நிறைந்ததாய்!

கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?

எனக்கு அது பற்றிய அறிவு போதாது. நாட்டமுமில்லை.

கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது?

எண்ணங்களைத் தெளிவுபடுத்த மொழி ஒரு ஊடகம். மிகவும் தேவை. அது இல்லையெனில் ஆதிமனிதன் வாழ்க்கைதான்.

கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? 

என்றும் இதே திருப்தியுடன், வாழ்த்தி வளம் பெறல் ஒன்றே! 



கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா?

இரண்டும் வேண்டும்.  கடந்தது கிடைத்த வரம். இனி கடக்க இருப்பது பெறப்போகும் வரம்.  வரங்களே வாழ்க்கை.  வாழ்க்கையே வரம்.

கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா?

கண்டிப்பாக அழியாது. அது வித்து. முளைத்துக் கொண்டே இருக்கும்.

கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா?

ஒரு கிடைத்தற்கரிய வரம். நல்லதை எடுத்து அல்லதை விடுவோம். நல்லதையே பகிர்ந்து  வல்லமை வளர்ப்போம்.

கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்?

நல்லவை பகிரும் அனைத்துமே, அனைவருமே!  குறிப்பிட்டுச் சொல்ல வரலாற்றுக் கதைகள். எழுத்தாளர்: கல்கி

கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்?

அடிப்படையாக தாய் மொழியிலேயே சிந்திக்கப் பழகினால் போதும். படிப்பதும் எழுதுவதும் தானே தொடரும்.  இதில் பெற்றோரின் பங்குதான் முக்கியம்.

#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #பாலாஜி  #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #K_Balaji #Interview #Q&A 
#SIGARAM #சிகரம்

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!