BIGG BOSS TAMIL 2 | WEEK 04 | DAY 27 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 04 | நாள் 27 | வாழ்த்துக்கள் திருடர்!

திட்டம் போட்டு திருடிய கூட்டத்தை நம்ம பிக் பாஸைப் போல கமலும் பாராட்டினர். கமல் சனிக்கிழமை அத்தியாயத்தில் குறும்படம் போடுவார், கண்டிப்பான விசாரணையை நடத்துவார் என்றெல்லாம் எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். இந்தவார போட்டியில் பொதுமக்கள் அணி போட்டியில் இருந்து விலக எடுத்த முடிவு தவறானது என்பதை வலியுறுத்தினார். 

கமலின் கருத்துக்குப் பின்னர் நமக்கும் சில எண்ணங்கள் தோன்றுகின்றன. பொதுமக்கள் அணி போட்டியில் இருந்து விலகியதற்குப் பதில் சில நடவடிக்கைகளை போட்டியில் எடுத்திருக்கலாம். காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்திருக்கலாம். தங்கள் உடைமைகளைப் பாதுகாக்க ஒன்றிணைந்து காவல் புரிந்திருக்கலாம். சமையல் செய்யாமல் காவலர்களை தங்கள் பக்கம் வரவழைத்திருக்கலாம். வெவ்வேறு வடிவங்களிலான போராட்டங்களை செய்திருக்கலாம். அணிக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால் தான் பொதுமக்கள் அணி தோற்க நேர்ந்தது. 



சிறந்த போட்டியாளராக திருடர்கள் அணியைச் சேர்ந்த யாஷிகா தேர்வானார். மோசமான போட்டியாளராக பொதுமக்கள் அணியைச் சேர்ந்த ஷாரிக் தேர்வானார். ஆனால் அவர் ஒருவர் மட்டும் தான் போட்டியில் இருந்து விலகாமல் அந்த அணியில் இருந்து விளையாடினார். மோசமான தலைவராக ரம்யா தெரிவானார். போட்டியில் இருந்து விலக எடுத்த முடிவுக்காக இந்த பரிசு. 

இந்த வார வெளியேற்றத்தில் இருந்து பொன்னம்பலம் காப்பாற்றப்படுகிறார். எதிர்பார்த்த முடிவு தான். இணையத்தள கருத்துக்கணிப்புகளின் படி யாஷிகா தான் இவ்வாரம் வெளியேற வேண்டும். ஆனால் நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் தக்க வைப்பதற்காக விஜய் தொலைக்காட்சி யாஷிகாவை வெளியேற்றாது என்று ஒரு கருத்து சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது. உண்மை நிலையை நாம் அறிய முடியாது என்றாலும் வெளியேறப்போவது யார் என்பதை அறியக் காத்திருப்போம். 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!