பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | நாள் 20 | BIGG BOSS TAMIL 02 | WEEK 03 | DAY 20

BB/T/S2/W3/D20/1 
நம் ஒவ்வொருவரின் சிந்தனைகளும் எல்லா நேரங்களிலும் மற்றவர்களுடன் ஒத்துப்போவதில்லை. இங்கு பிக் பாஸ் போட்டியாளர்களின் சிந்தனைகளும் பிக் பாஸின் எண்ணங்களும் மாறுபட்டு நின்றதில் நமக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. சனிக்கிழமை அத்தியாயம் கமலின் பங்கேற்புடன் சுவாரசியமாக இருந்தது. மூன்று வாரங்களிலும் சிறந்த தலைவர் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. போட்டியாளர்கள் முதலாமிடத்தில் ஜனனியையும் இரண்டாவதாக நித்யாவையும் மூன்றாவதாக வைஷ்ணவியையும் தெரிவு செய்தனர். பார்வையாளர்களின் எண்ணமும் கூட இதுவாகத்தான் இருந்திருக்கும். ஆனால் பிக்பாஸ் இதற்கு நேர்மாறான முடிவை வெளிப்படுத்தினார். வைஷ்ணவி முதலாமிடத்தையும் நித்யா இரண்டாமிடத்தையும் ஜனனி மூன்றாமிடத்தையும் பிக் பாஸின் தெரிவில் இடம்பிடித்திருந்தனர். அமைதியா இருந்தா பிக் பாஸூக்குப் பிடிக்காது போல. 



BB/T/S2/W3/D20/2 
மூன்றாம் வார வெளியேற்றத்திற்காக ஐவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் நித்யாவும் அனந்த்தும் எஜமானர் - வேலைக்காரர் போட்டியில் சிறப்பாக செயல்படாத காரணத்தால் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். மும்தாஜ் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் போட்டியாளர்களால் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். பாலாஜி இரண்டாம் வாரம் நித்யாவுடன் தகாத வார்த்தைகளால் உரையாடியதால் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். பொன்னம்பலம் கடந்த வாரமும் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். நமது சிகரம் வாக்களிப்பில் முதலிடத்தைப் பெற்றுள்ள மும்தாஜ் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்தார். மிகுதி நான்கு பேரின் முடிவு ஞாயிறு அத்தியாயத்தில் தெரிய வரும். 

BB/T/S2/W3/D20/3 
பத்தொன்பதாம் நாள் இரவில் போட்டியாளர்கள் தாங்கள் யாரை பிரிந்து கவலையடைந்திருக்கிறார்கள் என்பதைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். அதிலிருந்து சில காட்சிகள் தொகுத்து மீண்டும் காண்பிக்கப்பட்டன. அதைப் பார்த்த போட்டியாளர்கள் மீண்டும் கண்கலங்கினர். கமலும் கூட கண்கலங்கியதை அவதானிக்க முடிந்தது. டேனியலை உங்கள் தந்தையாக நானிருப்பேன் எனத் தேற்றினார். கடந்த பருவத்தில் கூட ஜுலியிடம் இதே போல் கூறினாரல்லவா? 

BB/T/S2/W3/D20/4 
சனிக்கிழமை அத்தியாயத்தில் போட்டியாளர்கள் எழும்புவது ஆடுவது எதுவும் காட்டப்படுவதில்லை. ஏன் தெரியுமா? பெண் போட்டியாளர்களைப் பார்த்தால் காரணம் புரியும். பெண் போட்டியாளர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அலங்காரம் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாலே முழு நாளும் அலங்காரம் செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது புரியும். ஒரு வேளை பிக் பாஸே அலங்காரம் பண்ணி விடுகிறாரோ தெரியவில்லை. 

பிக் பாஸில் முதலாம் வாரம் வெளியேற்றம் இல்லை. இரண்டாம் வாரம் மமதி வெளியேற்றப்பட்டிருந்தார். மூன்றாம் வாரத்தில் மமதியின் தோழி மும்தாஜ் காப்பாற்றப்பட்டுள்ளார். மும்தாஜின் நடவடிக்கைகள் சக போட்டியாளர்களுக்குப் பிடிக்காவிட்டாலும் அவருக்கு மக்கள் அபிமானம் நிறையவே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். நமது கருத்துக் கணிப்பின் படி அனந்த் வைத்தியநாதன் இவ்வாரம் வெளியேறுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம். நாம் உங்கள் பிக் பாஸ்!

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #Viswaropam2 #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!