ஆட்சென்ஸ்க்கு பதினைந்து வயது | 15 years of AdSense
கூகிள் ஆட்சென்ஸ்க்கு பதினைந்து வயதாகிறது. 2003 ஜூன் மாதம் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை ஆரம்பிக்கப்பட்டது. உலகின் பல வலைத்தளங்களுக்கும் இணையத்தளங்களுக்கும் வருமானத்தை வழங்குவதிலும் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்களை உலகம் முழுவதிலும் கொண்டு சென்று வியாபாரத்தை அதிகரிப்பதிலும் கூகிள் ஆட்சென்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆட்சென்ஸ் போன்ற பல்வேறு விளம்பர சேவைகள் தற்போது இயங்கி வந்தாலும் கூகிள் விளம்பரங்களை யாராலும் விஞ்ச முடியாது. குறிப்பாக வலைத்தளங்களில் பொழுது போக்காக எழுதி வந்தவர்களுக்கு வருமானமீட்ட சுலபமான வழியை ஆட்சென்ஸ் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
தற்போது தமிழ் மொழி இணையத்தளங்களுக்கும் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முதலே இந்த சேவை தமிழ் இணையத்தளங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இது தமிழ் இணையத்தளங்கள் மற்றும் வலைத்தளங்களுக்கு மாபெரும் வரப்பிரசாதமாகும்.
உலகின் 14.3 மில்லியனுக்கும் அதிகமான இணையத்தளங்களுக்கு ஆட்சென்ஸ் விளம்பர சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் பில்லியன் கணக்கில் ஆட்சென்ஸ் மூலம் கூகிள் வருமானத்தை ஈட்டி வருகிறது.
#கூகிள் #ஆட்சென்ஸ் #கூகிள்ஆட்சென்ஸ் #வலைத்தளம் #தமிழ் #Google #Adsense #GoogleAdsense #Tamil #SIGARAMCO #சிகரம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்