வந்தனம் ஏற்பாய் அரிமா!
நம் தேசக் கவிச்சிம்மத்தை நினைவுகூர்ந்து ஓர் பதிவு.
என்னடா முறுக்குகிறாய் பாரதி....
கட்ட பொம்மனினுங் கட்டை
மீசையுனக் கேதடா?
ஏனடா முறைக்கிறாய் பாரதி....
சோழ வேந்தனினுஞ் சீற்றம்
உனக்கு ஏனடா?
உருமாலைப் பகட்டென்ன உனக்கு....
விவேகா னந்தனின் சிகைக்கு
இணை ஆகுமோ?
கைத்தடித் துணையேன் அருகினில்....
மனுவின் செங்கோற் காட்டினும்
உயர்ந்த தானதோ?
முழுநீளக் கருஞ்சட்டை உனக்கேனடா....
சிதம்பரனார் மிடுக்கின் அருகிலும்
வந்தது நின்றிடுமோ?
ஏனடா முழிக்கிறாய் பாரதி....
இவை அல்ல அடையாளம்
உந்தன் உயிருக்கு!!
எரிதழற் சினத்தோடு உண்மை....
காட்டுத் தீக்கிணையாய் கொள்கை....
உரைத்துப் பரப்ப!!
அறிவில்லா என்போல் புலையனும்....
அறியக் கருத்தினை தீந்தமிழில்
எடுத்துச் சொல்ல!!
அடிமைத் தளையை உடைக்க....
கோழையும் கூனனும் நிமிரும்
தேசப் பற்றுரைக்க!!
எத்தனை யுகத்திலும் சரி....
ஈரேழு ஜகத்திலும் சரி....
வாழ்வில் புரட்சி கூற!!
வார்த்தைகள் எல்லாம் போதுமே....
கவிதையாய் மட்டும் வேணுமே....
தமிழையே துடைத்திட்டாய் போடா
துளியும் மிச்சமென்ப தில்லாது!!!
வணங்குகிறேன் அரிமா!
உன்னாசைச் சிம்மமாய்!!
பதிவர்:
வந்தனம் ஏற்பாய் அரிமா
*********
என்னடா முறுக்குகிறாய் பாரதி....
கட்ட பொம்மனினுங் கட்டை
மீசையுனக் கேதடா?
ஏனடா முறைக்கிறாய் பாரதி....
சோழ வேந்தனினுஞ் சீற்றம்
உனக்கு ஏனடா?
உருமாலைப் பகட்டென்ன உனக்கு....
விவேகா னந்தனின் சிகைக்கு
இணை ஆகுமோ?
கைத்தடித் துணையேன் அருகினில்....
மனுவின் செங்கோற் காட்டினும்
உயர்ந்த தானதோ?
முழுநீளக் கருஞ்சட்டை உனக்கேனடா....
சிதம்பரனார் மிடுக்கின் அருகிலும்
வந்தது நின்றிடுமோ?
ஏனடா முழிக்கிறாய் பாரதி....
இவை அல்ல அடையாளம்
உந்தன் உயிருக்கு!!
எரிதழற் சினத்தோடு உண்மை....
காட்டுத் தீக்கிணையாய் கொள்கை....
உரைத்துப் பரப்ப!!
அறிவில்லா என்போல் புலையனும்....
அறியக் கருத்தினை தீந்தமிழில்
எடுத்துச் சொல்ல!!
அடிமைத் தளையை உடைக்க....
கோழையும் கூனனும் நிமிரும்
தேசப் பற்றுரைக்க!!
எத்தனை யுகத்திலும் சரி....
ஈரேழு ஜகத்திலும் சரி....
வாழ்வில் புரட்சி கூற!!
வார்த்தைகள் எல்லாம் போதுமே....
கவிதையாய் மட்டும் வேணுமே....
தமிழையே துடைத்திட்டாய் போடா
துளியும் மிச்சமென்ப தில்லாது!!!
வணங்குகிறேன் அரிமா!
உன்னாசைச் சிம்மமாய்!!
பதிவர்:
கவிக்குழல் (வாசவி நாராயணன்)
#பாரதி #கவிக்குழல் #வாசவி_நாராயணன் #கவிதை #தமிழ் #பாரதியார் #புரட்சிக்கவி #Bhrathi #Bharathiyar #Kavikkuzhal #Poem #Tamil #Thamizh #SIGARAMCO #சிகரம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்