சிகரத்துடன் சில நிமிடங்கள் : பவானி

சிகரத்துடன் சில நிமிடங்கள்:பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!


கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?

எனது பெயர் பவானி. படிப்பு எம்.ஏ, பி.எட் தமிழ், பிஎஸ்சி கணக்கு. உடுமலைக்கு அருகில் பாறையூர் என்ற கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி புரிகிறேன். 

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?

ஒரு நல்ல படைப்பு அனைத்து மக்களுக்கும் பிடித்தமானதாக வாசிக்க எளிமையாக இருத்தல் வேண்டும். வாழ்க்கைக்கான ஏதோ ஒரு கருத்தை கூறுவதாக அமைந்திருக்க வேண்டும்.

கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?

தமிழகத்தை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆண்டு கொண்டிருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள். இது மக்களுக்கான ஆட்சி அல்ல. 

கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது?

மொழியில்லையேல் சமுதாயமே இல்லை. தாய் மொழியால் மட்டுமே வளர்ச்சியின் உச்சத்தை எட்டமுடியும். 

கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? 

எதிர் காலத்தில் அனைத்து குழந்தைகளும் இலவசமாக படிக்க சர்வதேச தரத்துடன் ஒரு பள்ளியை உருவாக்குவது. 



கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா?

கடந்த கால வரலாற்றை மறந்ததனால் தான் மனிதன் இவ்வளவு அல்லல் படுகிறான். கடந்த கால வரலாறு என்பது மற்ற நாடுகள் எப்படியோ, ஆனால் தமிழக வரலாறு என்பது உலகளாவிய வரலாறு. ஒவ்வொருவரும் வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியம். எதிர்காலம் என்பது எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.

கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா?

என்ன தான் கணினி மயமானாலும் புத்தக வாசிப்பு என்பது அழியாது. அது ஒரு கலை. யோகாவும் கூட. மன ஆறுதல் தரக்கூடியதாகவும் இருக்கும் புத்தக வாசிப்பு. எனவே அழியாது. 

கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா?

தேவைக்கு பயன்படுத்தினால் வரம். இல்லாவிட்டால் சாபமே. 

கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்?

கல்கி, சாண்டில்யன், இந்திரா சௌந்தர்ராஜன், உமா பாலகுமார், பாலகுமரன் ஐயா, ரமணிச்சந்திரன். 

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மற்றும் புதிய எழுத்தாளர் வெற்றிவேல் அவர்களின் நாவலான வானவல்லியும் நான் விரும்பி படித்த புத்தகங்கள்.

கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்?

தாய்மொழியில் பற்று இருக்க வேண்டும். முடிந்த அளவு தாய்மொழியில் பேசவும் எழுதவும் வேண்டும். கலைச் சொற்கள் தமிழ்ப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களே வைத்தல் வேண்டும்

-சிகரம் 

#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #பவானி #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #எண்ணங்கள் #பகிர்வு #மொழி #சிகரம் 

Comments

  1. அருமை ...அருமை ...தெளிவான பதில்கள் ...அடுத்த தலைமுறைக்கு எப்படி வழிகாட்டுவது என்றா கொள்கை ...அழகான புரிதல்கள் ...வாழ்த்துக்கள் பவானி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  2. மிகச் சிறப்பு .. தங்களைப் போல எண்ணங்களும் செயல்களும் கொண்ட ஆசிரிய பெருந்தகைகள் அதிகளவு வருகை தந்தால் மட்டுமே நம் சமுதாயத்தில் பெரிதளவில் மாற்றம் நிகழும் என்பதை அறியலாம் .. உங்கள் இலட்சியம் நிறைவேற வாழ்த்துகள் ...

    ReplyDelete
  3. அருமையான தெளிவான பதில்கள். உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துகள்.💐💐💐

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்