Posts

Showing posts with the label அரசியல்

திருத்தப்படுமா இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம்?

Image
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விடயங்களே தற்போது அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் முக்கியத்துவம் பெற்றிருப்பது வேறு ஒரு பிரச்சினை. அது CAA எனப்படும் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் தான். 1955ஆம் ஆண்டின் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களே தற்போதைய போராட்டங்களுக்குக் காரணமாகியுள்ளன. Image Credit: Respective Owners only 2019ஆம் ஆண்டின் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னதாக இந்தியாவில் குடியேறிய இந்து, சீக்கிய மற்றும் பௌத்த மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், குறித்த நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம் மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. இதன் அடிப்படையில், இந்திய அடிப்படை அரசியலம...

இலங்கைப் பிரதமரின் இந்திய விஜயம் சொல்லும் செய்தி

Image
இலங்கைப் பிரதமரின் இந்திய விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் உலக நாடுகள் களமிறங்கியிருக்கின்றன.  அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மாத்திரம் தான் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நாடுகள் எனத் தோன்றினாலும் ஏனைய நாடுகளுக்கும் அந்த எண்ணம் இருக்காது என்று புறம்தள்ளிவிட முடியாது.  Image Credit: Its Respective Owners only. இந்த நிலையில், பதவியேற்ற சூட்டோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் தற்போது இந்திய விஜயத்தை நிறைவு செய்திருக்கிறார்.  சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சீன விஜயம் ஒத்திவைக்கப்பட்டிருக்காவிட்டால் கள நிலவரம் இன்னும் பரபரப்பாக அமைந்திருக்கும்.  இந்தியா சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருந்தாலும் இந்திய ஊடகங்களிலும...

அவசரகால சட்டம் வழங்கும் அதிகாரம் என்ன? - 7 முக்கிய தகவல்கள் | கட்டுரை | பிபிசி தமிழ்

Image
அவசரகால சட்டம் வழங்கும் அதிகாரம் என்ன? - 7 முக்கிய தகவல்கள்! பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமல்படுத்த பாராளுமன்றம் ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது.  இந்நிலையில், அவசரகால சட்டம் எப்போது இலங்கையில் முதன்முதலாக கொண்டு வரப்பட்டது என்று பார்ப்போம்.  காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஒரு கிலோ அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினால் 29 நாட்களுக்கு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  அதனைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட இன கலவரங்கள், உள்நாட்டு போர் போன்ற காரணிகளினால் அவசரகால சட்டம் தொடர்ந்தும் பல தடவைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.  இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அவசர கால சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ரத்து செய்திருந்தது.  எனினும், கடந்த 9 வருடங்களுக்கு பி...

மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்

Image
"மலையகத் தமிழர்களுக்கும் நிலையான பெருந்தோட்டத் தொழிலும் நிலவுரிமையும் அமையுமானால் அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய நிலை உருவாகும். ஆகவே அந்த நிலை உருவாகிவிடாமல் தடுப்பதில் பேரினவாதிகள் மிகக் கவனமாகவே இருக்கிறார்கள். என்றாலும் பிரச்சினை இருக்கிறது என்பதற்காக அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் இருக்கவும் முடியாது. மலையகத் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை குறித்து இதுவரை எந்தவொரு மலையகத் தலைவர்களும் வாய் திறக்கவில்லை."  முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்   குறிப்பு: இக்கட்டுரை என்னால் எழுதப்பட்டு சனிக்கிழமை, மார்ச் 16, 2019 ஆம் திகதிக்குரிய 'மக்கள் பத்திரிக்கை' இரு வார இதழில் வெளியான கட்டுரையாகும்.   மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்  https://sigaram2.blogspot.com/2019/04/malaiyagath-thamilargalum-suya-nirnaya-urimaiyum.html   #மலையகம் #ஈழம் #சுயநிர்ணயம் #சுயாட்சி #சம்பளப்_போராட்டம் #1000ரூபாய் #விடுதலை #உரிமை #தமிழ் #தமிழர் #அரசியல் #இலங்கை