Posts

Showing posts with the label குறும்படம்

கால் நூற்றாண்டுக் காதல் கடித்தைத் தேடிப் போகலாம் வாருங்கள்!

Image
'கால் நூற்றாண்டு காதல்' குறுந்திரைப்படத்தை பார்த்து முடித்த சூட்டோடு அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். முதலில் தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்த நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.  நண்பரின் பதிவு:  காதல் கடிதத்தைத் தேடி - குறும்படம்   ஒரு வாசகம்: நீங்கள் விரும்பிச் செய்யும் எதிலும் உங்களுக்கு தோல்வி கிடையாது!  ஒரு கோரிக்கை: வலை ஓலை வலைத்திரட்டியை தங்கள் வலைத்தளங்களின் மெனுவில் இணைப்பதுடன், தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி உதவுங்கள்.  குறும்படம்:  25 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட காதல் கடிதத்தைத் தேடிய ஒரு பயணம். ஒரு சில கதாபாத்திரங்களை வைத்து அருமையாக இயக்கப்பட்டிருக்கிறது.  தேவையில்லாத பின்னணிக் கதைகள், துணைக் கதைகள், வரலாறு எல்லாம் இல்லாமல் திரைக்கதை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.  நடிப்பு வேறு ரகம். அனாவசியமான மினக்கெடல்கள் இல்லாத இயல்பான நடிப்பு ரசிக்க வைக்கிறது.  நாம் வாழ்வில் செய்யும் எல்லா செயல்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். சில அர்த்தங்கள் உடனடியாக தெரியவரும்....

மனிதநேயம் - 3நிமிடக்கதை.

Image
  வணக்கம் நண்பர்களே! மனிதநேயம்! தொலைந்து போய் காலங்கள் கடந்த பின்பு இக்காலத்தில் அதிகம் தேடப்படும் பொருள். அது இக்காலத்திலும் ஒரு மனிதனிடத்தில் காணப்படுமாயின் அது பாராட்டத்தக்கதே. இது பேஸ்புக் மூலம் எனக்கு கிடைத்த மூன்று நிமிட கதை. இக்கதையைப் பற்றி நான் வார்த்தைகளால் வர்ணிப்பதை விட நீங்களே பார்த்து தெரிந்து கொள்வது தான் பொருத்தமாக இருக்கும். நன்றி நண்பர்களே!