Posts

Showing posts from 2016

போய்வா 2016ஆம் ஆண்டே!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இதோ நாம் 2016 ஆம் ஆண்டின் இறுதி நாளின் இறுதி மணித்தியாலத்தின் இறுதி நிமிடங்களைக் கடந்து கொண்டிருக்கிறோம். பிறக்கப் போகும் 2017 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்  கொள்கிறேன். இந்த ஆண்டில் நமக்கு விருப்பமான நிகழ்வுகள் பல நடைபெற்றிருக்கலாம். அதே போலவே நாம் விரும்பாதவைகளும் நடைபெற்றிருக்கலாம். நடந்தவை எதுவாக இருந்தாலும் அவற்றை மறந்துவிட்டு அவை தந்த படிப்பினைகளை மட்டும் மனதில் கொண்டு 2017 ஆம் ஆண்டை எதிர்கொள்ளத் தயாராகுவோம். கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு நமது இலக்கை நோக்கி முன்னேறுவோம். வரும் ஆண்டு நிச்சயம் நம் பெயர்களை சரித்திரத்தில் இடம்பெறச் செய்யும் ஆண்டாக அமையட்டும் என்று வாழ்த்தி 2016 ஆம் ஆண்டில் உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன். நன்றி. 

சிகரம் பாரதி 50 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம் , நலமறிய ஆவல். நமது தொடர் பதிவின் இறுதி அத்தியாயத்தில் இருக்கிறோம். 2016 ஆம் ஆங்கில வருடத்திற்கு விடை கொடுக்கும் நேரமும் நெருங்கி விட்டது. இந்த ஆண்டு நாம் எண்ணியது பல. நடந்தது சில. வரும் ஆண்டு எண்ணங்கள் எல்லாம் சிறப்புற ஈடேறும் ஆண்டாக அமையட்டும். கடந்த காலம் தந்த படிப்பினைகளைக் கொண்டு 2017 ஆம் ஆண்டை நம்முடையதாக்குவோம். எனது நீண்ட நாள் கனவான 'சிகரம்' இணையத்தளம் 2017 இல் சாத்தியமாகவுள்ளது. உங்கள் அனைவரினதும் பங்களிப்புடனேயே 'சிகரம்' இனை வெற்றிபெறச் செய்ய எண்ணியுள்ளேன். நண்பர்கள் அனைவரும் 'சிகரம்' இணையத்தளத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். நமது படைப்புகளை வெளியிட , வாசிக்க மற்றும் கருத்திடக்கூடிய வசதிகளுடன் மட்டும் வரவுள்ள 'சிகரம்' இணையத்தளம் 6 மாதங்களுக்கு ஒருமுறை புதிய மாற்றங்களை தன்னுள் இணைத்துக்கொண்டு உங்கள் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யவுள்ளது. ஆகவே வெற்றி உங்கள் கையில். மீண்டும் சந்திப்போம் நண்பர்களே!

சிகரம் பாரதி 49 / 50 - சிவகிரி ரேடியோ அழைப்பிதழ்

வணக்கம் வலைத்தள வாசகர்களே! கூகிள் பிளஸ் செயலியில் காணக் கிடைத்த ஒரு செய்தியை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நல்ல முயற்சிகளுக்கு 'சிகரம்' எப்போதுமே துணையிருக்கும். ********************************* சிவகிரி ரேடியோ அழைப்பிதழ்:- அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம். வாட்ஸ்சப் செயலியில் உள்ள வாய்ஸ் மேசேஜ் எனும் வசதியைப் பயன்படுத்தி அவரவர் இருப்பிடத்தில் இருந்து, தத்தமது நேர கால சூழ்நிலைக்கு ஏற்ப, உலகம் முழுவதும் உள்ள முகம் காணா நண்பர்களுடன் சொந்த குரலில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சிவகிரி ரேடியோ குழு கட்டமைக்கப் பட்டுள்ளது. எதைப் பற்றியும் எப்போது வேண்டுமானாலும் குழுவில் பேசலாம், புகைபடங்கள், எழுத்து பதிவுகள் உள்ளிட்ட வாட்ஸ்சப் அளிக்கும் பிற வசதிகளையும் இணைக்கலாம். யார் எதை வெளியிட்டாலும் குரல் பதிவு கட்டாயமாகும். குரல் பதிவிடாதவர்கள் தொடர்ந்து பார்வையாளர்களாக நீடித்து பேசுகின்ற பிற நண்பர்களை ஊக்கப்படுத்தலாம். பேச்சுக் கலையை-சுய படைப்புத்திறனை வளர்க்க விரும்பும் 100 க்கும் மேலான நண்பர்களின் முயற்சியைப் புரிந்து கொள்ளாதவர்கள் வேறு வழியின்ற

சிகரம் பாரதி 48 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இணையத்தளம் வடிவமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 2017 ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் பகுதியில் வெளியிட எதிர்பார்க்கிறேன். உங்கள் பேராதரவை எதிர்பார்த்தே களத்தில் இறங்கியிருக்கிறேன். என்னை ஏமாற்றிவிடாதீர்கள் தோழர்களே! எனது பெருங்கனவு, நீண்டகால எண்ணம் ஈடேறப் போகிறது என்பதை எண்ணும்  போது மனம் உற்சாகத்தில் அலைபாய்கிறது. கையெழுத்துப் பத்திரிகையாக ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று இணையத்தளமாக உருவெடுக்கும் காலம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உடனிருக்கும் நட்புள்ளங்களுக்கு மிக்க நன்றி. இந்த நட்பு என்றென்றும் நமக்குள் நீடிக்க வேண்டும். அதுவே நமது வெற்றியாகும்!

சிகரம் பாரதி 47 / 50

வணக்கம் வலைத்தள நண்பர்களே! 'சிகரம்' இணையத்தளம் உருவாக்கும் முதற்கட்டப் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். வடிவமைப்பாளர் முதலில் ஒரு வடிவமைப்பை பரிந்துரைத்தார். அதனை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்பை வழங்கி இன்று மாலை வடிவமைப்பாளருடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டு வந்தேன். எனது வடிவமைப்பில் சில திருத்தங்கள் தேவைப்படுகிறது. அதனை செய்து மீண்டும் அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான வேலைகளிலேயே நான் ஈடுபட்டுள்ளேன்.  2016 வருடத்தின் இறுதி வாரத்தை வந்தடைந்துவிட்டோம். இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன 2017 ஐ வரவேற்க. 2017 இல் 'சிகரம்' என்னும் இணையத்தளக் கனவு நனவாகப் போகிறது. வாருங்கள் நண்பர்களே கைகோர்த்து முன்னேறிச் செல்லலாம். ஜனவரி 2017 முதல் 'சிகரம்' இணையத்தளத்திற்கு உங்கள் ஆக்கங்களையும் அனுப்பி வைக்கலாம். நீங்களே எங்கள் உலகம் தோழர்களே! மீண்டும் இன்னும் தகவல்களுடன் சந்திக்கலாம். 

சிகரம் பாரதி 46 / 50

வணக்கம் வலைத்தள நண்பர்களே! நான் எனது 'சிகரம்' இணையத்தளத்தை உருவாக்குவதற்காகப் பாடுபட்டு வருகிறேன். நண்பர்களாகிய நீங்கள் பல்சுவை அம்சங்கள் நிரம்பிய , அழகிய வடிவமைப்பைக் கொண்ட இணையத்தளமொன்றைப் பரிந்துரைக்க முடியுமா? எனது இணையத்தளத்திற்கான வடிவமைப்பைத் தீர்மானிப்பதில் நான் பெரும் குழப்பத்தை எதிர்நோக்கியுள்ளேன். நண்பர்களாகிய நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும். உங்கள் பரிந்துரைகளைக் கவனித்து இறுதி முடிவுக்கு வரலாம் என்றிருக்கிறேன். உதவுவீர்களா?

சிகரம் பாரதி 45 / 50

🌺  யதார்த்தமான ஏழு வரிகள் 👉உங்களை ரொம்ப பிடிச்சவங்ககிட்ட  ம்ம்... சரின்னு ஒரு வரில பதில் சொல்லாதீங்க..🌺 👉உங்களுக்கு  என்ன பேசணும்னு தோணுதோ அத பேசுங்க ஆனால்  பதில்  எதிர்பார்க்காதீங்க..🌺 👉உங்கமேல ரெம்ப  அக்கறையும் பாசமும் வைச்சவங்க எவ்வளவு சண்டை போட்டாலும் அவங்களை விட்டு போயிடாதீங்க..🌺 👉யாரு உங்களை அதிகமா விரும்புறாங்களோ அவங்களுக்கு எப்போதும் Sorry ( மன்னிப்பு ) சொல்லாதீங்க..🌺 👉யாரை , நீங்க வேணும்னு நினைக்கிறிங்களோ அவங்களுக்கு BYE சொல்லாதீங்க  ..🌺 👉யாரு உங்க  மேல ரெம்ப உண்மையான அக்கறையுடன்  இருக்காங்களோ அவங்களுக்கு 'நன்றி'  சொல்லாதீங்க..🌺 👉யாரு உங்களை பற்றி நினைச்சிட்டே இருக்காங்களோ அவங்களை, உங்க உயிர் உள்ளவரை  மறந்து விடாதீங்க..🌺 உபாயம் : வாட்ஸப்.

சிகரம் பாரதி 44 / 50

வணக்கம்  வலைத்தள வாசகர்களே! இதோ 2016 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். நாம் நினைத்ததில் இந்த ஆண்டு நடந்தது எத்தனை, நடக்காதது எத்தனையோ? வரும் ஆண்டாவது நமது வாழ்வில் ஒளியேற்றும் என நம்பியிருப்போமாக.  'சிகரம்' இணையத்தளத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இணையத்தள வடிவமைப்பாளர் ஒருவரை சந்தித்து அவரிடம் பணியை ஒப்படைத்துள்ளேன். ஜனவரியில் 'சிகரம்' இணையத்தளத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். நண்பர்களும் பங்களிக்கும் வகையில் இணையத்தளம் அமையவுள்ளது. பேஸ்புக் போன்றதொரு சமூக வலைத்தளமாக வடிவமைக்க வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால் அதற்கான முதலீடு மிக அதிகம் என்பதால் எளிமையான வடிவமைப்பில் அதே நேரம் நண்பர்களையும் இணைத்துக் கொண்டு பயணிக்கும் வகையில் 'சிகரம்' உங்களை நாடி வரவுள்ளது. உங்கள் அனைவரினதும் மேலான ஆதரவைத் தருவீர்கள் என்னும் நம்பிக்கையில் களம் புகுகின்றேன். வெற்றித் திலகமிடுங்கள்!

சிகரம் பாரதி - 43 / 50 ஊடகத்துறையும் நாமும்!

தி இந்து இதழின் அயலுறவு பிரிவின் ஆசிரியராக உள்ள சுஹாசினி ஹைதர் WORLD MEDIA ASSOCIATION-ஐ சேர்ந்த மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது: ஊடகத்துறையில் பட்டம் பெறப்போகும் உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தற்போது ஊடகத்துறையில் நிலைமை சரியில்லை என்பதையும், இங்கே வேலை கிடைப்பது குதிரைக் கொம்பான காரியம் என்றும் பலர் சொல்ல கேட்டிருக்கலாம். அவை உண்மையே என நான் அழுத்திச் சொல்வேன். நான் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஊடகத்துறையில் நுழைய கனவுகளோடு காலடி எடுத்து வைத்தேன். அப்பொழுதும் நிலைமை மோசமாகத் தான் இருந்தது. தொலைக்காட்சியில் வேலை கிடைப்பது கஷ்டம் என்பதைவிட வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை என்கிற சூழல் நிலவியது. என்னை ஏழு நிராகரிப்புக் கடிதங்கள் வரவேற்றன. ஒரு நிறுவனம், "அடுத்த வருஷம் பாத்துக்கலாம் மேடம்." என்றார்கள். இன்னொரு நிறுவனமோ, "இனிமே தயவு செய்து அழைக்காதீர்கள்." என்று கறார் காட்டினார்கள். எல்லாம் முடிந்து போனது எனத் தோன்றிய , இறுதியாக ஒரு முயற்சி செய்து பார்த்துவிடலாம் என ஒரு நேர்முகத்துக்குச் சென்றேன். அது செய்தி

சிகரம் பாரதி - 42 / 50 - கடைசித் தமிழன் ( கவிதை )

தமிழ் மொழியின் தலைமகன் தாய்மொழியை தனக்குச் சுமையென்று முதியோர் இல்லத்தில் மூத்த குடிமக்களுடன் மிகுதிக் காலத்தைக் கழித்திருக்கட்டும் என்றெண்ணி விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட்டுவிட்டு 'தேங்க்ஸ்' என்று கைகுலுக்கிப் பிரிந்தான் கடைசித் தமிழன் விக்கித்து நின்றாள் தமிழ்த்தாய்! - இக்கவிதை டிசம்பர் 2016 இல் என்னால் எழுதப்பட்டது.

சிகரம் பாரதி 41 / 50

சொர்க்கத்தில் எம்.ஜி.ஆர்  ஜெயலலிதாவை சந்தித்த வேளை அவர்கள் என்ன பேசி இருப்பார்கள் என்னும் சிறு கற்பனை. எல்லாம் வாட்ஸப் உபயம்! எம்.ஜி.ஆர் : வா அம்மு இப்ப தான் என்னை பார்க்க ஞாபகம் வந்ததா ? ஜெ                : புதிய பூமியில் ஆயிரத்தில் ஒருவனாக இல்லாமல் நீங்கள் குடியிருந்த கோவிலான “கழகத்தை” அடிமைப் பெண்ணாக இல்லாமல் தனிப்பிறவி யாக “கழகத்தை” பாதுகாத்தேன். எம்.ஜி.ஆர் :  மகிழ்ச்சி!……. என்ன சொல்லிவந்தாய்? ஜெ                :  உடல்நிலை சரியில்லை என்று!!! எம்.ஜி.ஆர் :  அமெரிக்கா சென்றாயா? ஜெ : அப்பல்லோவுக்கு சென்றேன்! எம்.ஜி.ஆர் :  அதுபோதுமே சொர்க்கத்துக்குவர... ஜெ : (சோகமாக) மக்களின் பாரமும்குறையவில்லை, என் மனபாரமும் குறையவில்லை, புறப்பட்டு வந்து விட்டேன். எம்.ஜி.ஆர் :  நம்கட்சி? ஜெ : கட்டுக்கோப்பாக இருக்கிறது தலைவா. எம்.ஜி.ஆர் :  நன்றி அம்மு. நம்இரத்தத்தின்இரத்தங்கள்.... ஜெ           : ஏதோ இருக்கிறார்கள் தலைவா……. நீங்கள் இல்லாத வேதனையில் அன்று , நான் இல்லாத வேதனையில் இன்று. எம்.ஜி.ஆர்:  நண்பர் கருணாநிதி? ஜெ                : ஏதோ அலர்ஜி

சிகரம் பாரதி 40 / 50 - புரிந்துகொள் புயலே...

புரிந்துகொள் புயலே... ஒவ்வொரு மரமும் ஒரு ‘பச்சை’க் குழந்தையென்று சொன்னபின்னும் எப்படித்தான் பிள்ளைக்கறி யுண்டாயோ பெரும்புயலே! இலை விழுந்தாலும் இழவு கேட்கும் சமூகம் நாங்கள் வனமே பிணமாயின் தாங்குவ தெங்ஙனம்? எங்கள் குடும்ப அட்டைகளில் குறிக்காத உறுப்பினர்க்கு மரங்கள் என்று பெயர் இன்று ஒவ்வொரு தெருவிலும் ஒப்பாரி விருட்சங்களின் பட்சிமொழி புயலுக்குப் புரியாமலும் புயலின் ஓநாய்மொழி விருட்சங்கள் அறியாமலும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பிறகு தொடங்கிற்று யுத்தம் முகிலினம் இடிபட பகல்வெயில் இருள்பட பெருமழை தரைதொட பேய்ப்புயல் கரைதொட வேர்கள் பிரிந்தன மண்ணை; வீழ்ந்து கிடந்தது சென்னை கவிதையைத் தப்புத் தப்பாய் வாசிக்கிறாயே வார்தாவே போரிடும் உலகத்தை வேரொடு சாய்க்கச் சொன்னால் வேரிடும் உலகத்தைப் போரொடு சாய்த்துப் போய்விட்டாயே பிராணன் பறித்ததும் காற்றுதான் பிராண வாயுவும் காற்றுதான் வெறுக்க மாட்டோம்; வெற்றி கொள்வோம் ஒரு மரமிழப்பின் இருமரம் நடுவோம் நாய்கள் கனவுகண்டால் எலும்புமழை பொழியும் நாங்கள் கனவுகண்டால் விதையோடு மழைபொழியும் வீதிகள் தோறும் வனம் செய

சிகரம் 200!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம், நலமறிய ஆவல்! 'சிகரம்' வலைத்தளத்தின் 200வது பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இவ்வலைத்தளத்தை ஆரம்பித்து ஐந்தாவது வருடத்தில் 200 என்னும் எண்ணிக்கையை எட்டிப்பிடித்திருக்கிறேன். மகிழ்ச்சி. ஆயினும் எண்ணிக்கைகள் சாதனைகள் அல்ல என்பதையும் நான் மறந்துவிடவில்லை. கையெழுத்து சஞ்சிகையாகத் துவங்கிய 'சிகரம்' இனை இணையத்தளமாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபடவுள்ளேன். அதற்கான முதற்கட்டப் பணிகளைத் தற்போது தொடங்கியுள்ளேன். தொடர்ந்து 'சிகரம்' நிறுவனத்தைத் தொடங்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளேன். 'சிகரம்' கையெழுத்துப் பத்திரிகையாக இருந்தபோதே குறிக்கோள் , தூரநோக்கு என அனைத்தையும் வரையறை செய்துவிட்டேன். இனி 'நிறுவனம்' என்னும் அமைப்பைத் தோற்றுவித்து அதனை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வது மட்டுமே இலக்காக இருக்கப் போகிறது. இதுவரை என்னுடன் துணைவந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். மேலும் அனைவரும் இனிவரும் காலங்களிலும் உங்கள் மேலான ஒத்துழைப்பை நல்கிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.  கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக எழு

சிகரம் பாரதி 39 / 50

தாயா……. ? ஆம் “தாய் தான்” கர்நாடாகாவில் பிறந்”தாய்” தமிழகத்திற்குள்புகுந்”தாய்” சர்ச் பார்க்கில் படித்”தாய்” சினிமாவில் நடித்”தாய்” எம்ஜிஆரை கவிழ்த்”தாய்” ஏதேதோ செய்”தாய்” பல பேரை கெடுத்”தாய்” பதவியை பிடித்”தாய்” நரி வேலை செய்”தாய்” நல்லோரை அழித்”தாய்” கட்சியை உடைத்”தாய்” ஆட்சியை பிடித்”தாய்” அடிமைகளை வளர்த்”தாய்” ஆணவமாய் திரிந்”தாய்” தோழியை சேர்த்”தாய்” கோடியை குவித்”தாய்” ஊழல் புரிந்”தாய்” உள்ளே இருந்”தாய்” நிதியை கொடுத்”தாய்” நீதியை வளைத்”தாய்” ஏரியை திறந்”தாய்” எமனாய் வதைத்”தாய்” செயல்பட மறந்”தாய்” சென்னையை சிதைத்”தாய்” வானிலே பறந்”தாய்” வாட்சப் கண்ணீர் வடித்”தாய்” முடங்கிக் கிடந்”தாய்” முன்னேற்றம் தடுத்”தாய்” குடிக்க வைத்”தாய்” குடியைக் கெடுத்”தாய்” தன்னைத் தானே “தாய்” என்று அழைத்”தாய்”⁠⁠⁠⁠ // உபயம்: வாட்ஸப்.

சிகரம் பாரதி 38 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! உங்களுக்காக ஒரு குட்டிக் கதை: ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது மூன்று முதியவர்கள்  அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறினாள். அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள். அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் . அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள். மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார். அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள். அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள். ஏன் அப

சிகரம் பாரதி 37 / 50 - மக்கள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்! - 02

Image
வணக்கம் வாசகர்களே! தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா 05.12.2016 அன்று காலமானார். 75 நாட்களாக சென்னை அப்போலோ தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா 05 ஆம் திகதி மரணமானதாக அறிவிக்கப்பட்டது. இங்கே 'அறிவிக்கப்பட்டது' என்னும் சொல்லைக் கவனத்திற் கொள்ளுங்கள். ஏனெனில் ஜெயலலிதா மயங்கி விழுந்தபோதுதான் கட்சியினர் கடைசியாக அவரைக் கண்ணால் கண்டார்கள். அதன் பின் டிசெம்பர் 05 ஆம் திகதி பிணமாகத்தான் அவரைக் காணக் கிடைத்தது. வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து மரணமானதாகச் சொல்லப்படும் நாள் வரை 75 தினங்களாக தமிழக முதல்வரை உயிருடன் வைத்திருந்தது அப்போலோ அறிக்கைகள் தான்.  மரணம் தொடர்பில் நிலவிவரும் சர்ச்சைகளுக்கு ஒரு முடிவில்லை. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவை அனைத்தும் வினவுவது 75 நாட்களாக என்ன நடந்தது ஜெயலலிதாவுக்கு? உண்மையில் அவர் 05 ஆம் திகதி தான் மரணமானாரா? இரகசியமாக அவரை வைத்திருந்தது ஏன்? என்னும் கேள்விகளைத்தான். தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் தேசிய மட்ட அரசியல்வாதிகளும் கூட ஜெயலலிதாவை நலம் விசாரிக்க அப்போலோ மருத்துவமன

சிகரம் பாரதி 36 / 50 - மக்கள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்!

வணக்கம் நண்பர்களே! தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மண்ணுலகை விட்டு மறைந்துவிட்டார். அவரை நேசித்த , எதிர்த்த அனைவரின் மனங்களிலும் சோகம். அனைவரின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல்கள்.  செல்வி ஜெ.ஜெயலலிதாவைப் பற்றிப் பேசினால் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் அத்தனைக்கும் முன்னால் 2016.12.06 அன்று ஆனந்த விகடன் தளத்தில் வெளியான ' எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் ஜெயலலிதாவைப் பிடித்திருப்பது ஏன்? ' என்னும் இக்கட்டுரையைச் சற்றுப் படித்துப் பாருங்கள். // நடு வீட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூத உடலை, மயானத்துக்கு தூக்கிச் செல்லும் அந்த நொடியில், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளிப்படும். அத்தனை சொந்தமும் வெடித்து அழும். கலங்காத மனமும் கலங்கும்.  அப்போலோவில் இருந்து போயஸ்கார்டனுக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டதும், ‛முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பூத உடல்...’ என செய்தி சேனல்கள் உச்சரித்த நொடியிலேயே, அதிமுக அல்லாதவர்களின் கண்களிலும் கண்ணீர். அப்போது டிவிகளில் ஒளிபரப்பான ஜெயலலிதாவின் சிரித்த முகம் ரொம்பவே  வாட்டியது. இதைப் பார்க்க முடியாது வெளிய வந்த பக்கத்து வீட்டுக்கா

சிகரம் பாரதி 35 / 50 - ஏழு குற்றங்களும் ஒரு அரசும் நாட்டின் மக்களும் !

வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். இலங்கையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஏழு வகையான போக்குவரத்து குற்றங்களுக்கெதிராக ரூ 25,000 தண்டப்பணம் அறவிடுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் தமிழ் நாளேடொன்று ' போதையில் சுக்கானை சுழற்றினால் ரூ.25,000 அபராதம்' என இச்செய்திக்குத் தலைப்பிட்டிருந்தது. 01. மதுபோதையில் வாகனம் செலுத்துதல்  02. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்துதல்  03. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவரிடம் வாகனத்தை கையளித்தல்  04. உரிய வேகக் கட்டுப்பாட்டை மீறுதல்  05. காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல்  06. பாதுகாப்பற்ற வகையில் புகையிரதக் கடவை ஊடாக வாகனத்தை செலுத்துதல்  07. இடப்புறமாக வாகனத்தை முந்திச் செல்லுதல்  ஆகிய ஏழு குற்றங்களுக்காகவே ரூ 25,000 தண்டப்பணம் அறவிடவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்தது. இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீதிகளின் தரம் ஒருபுறமிருக்க தரமற்ற வாகன சாரதிகளால் ஏற்படும் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர கு

சிகரம் பாரதி 34 / 50

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து  விட்ட கடவுள்  இறுதியாக பெண்ணைப் படைக்க ஆரம்பித்தார்.  ஒரு நாள் இரு நாள் அல்ல, தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.  இதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது. அதற்கு கடவுள் “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்.  இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்.  அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்.  சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும்.  அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும்.  இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்” என்று விளக்கமாகச் சொன்னார். “இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை.  ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு “ஆனால் இவளை ரொம்ப மென்மை

சிகரம் பாரதி 33 / 50

ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர்.  அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார்.  பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார். “இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு” என்றார்.  மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.  “இதற்கு மேல் நிரப்ப முடியாது” என்றாள். கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.  அதே பையில் போட்டுக் குலுக்கினார். அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின. ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.  “இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா?” கேட்டாள் மனைவி. கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார்.  பையை மேலும் குலுக்கினார். கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.  “இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?" என்று கணவர் கேட்டபோது 'இருந்திருக்காது' என்று ஒப்புக் கொண்டாள் மனைவி. “வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01.2 [ திருத்தம் 02 ]

1.2 தோழிகளின் சந்திப்பு  "திவ்யா...." "...................." "அடியேய் திவ்யா...." கை அனிச்சையாய் தேநீரை வாய்க்குள் ஊற்ற வாயும் அதே போல் தேநீரைப் பருக மனம் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அப்போது  யாரோ என் தோளைப் பிடித்து உலுக்குவதைப் போலிருக்க  நினைவுகளில் இருந்து விடுபட்டு திரும்பிப் பார்த்தேன். தோழி நந்தினி சிரித்தபடி நின்றிருந்தாள்.  "என்னடி யோசனை?" "ஒன்னுமில்ல" "ஒன்னுமில்லாமலா கூப்பிடறது கூட வெளங்காம உட்கார்ந்திருக்க?" "........................." "நா சொல்லவா?" "தெரிஞ்சுக்கிட்டே ஏன் கேக்குற?" "இப்படியே எப்பப் பாத்தாலும் அதப் பத்தியே நெனைச்சுக்கிட்டிருந்தா எப்படி?" "மறந்துரச் சொல்றியா?" "அப்படி இல்ல....." "அப்போ நெனைச்சுக்கிட்டு தானே இருக்கணும்?" "....................." என் கேள்விக்கு நந்தினியால் மௌனத்தையே பதிலாய் அளிக்க முடிந்தது. என் மனம் படும் பாட்டை அவளும் அறிந்திருந்தத

சிகரம் பாரதி 32 / 50 - கைப்பேசிகளும் நாமும்!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! வாட்ஸப் இன் புதிய பதிப்பில் வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல நாட்களாக வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்த வசதி வந்தே விட்டது. மேலும் மடிக்கணினிகளிலும் இப்போது வாட்ஸாப்பை பயன்படுத்த முடியும். ஆனால் கணினியில் பயன்படுத்தும் அதே நேரம் கைப்பேசியும் இணைய இணைப்பில் இருக்க வேண்டியது அவசியமாகும். அத்துடன் கணினியில் அழைப்புகளை மேற்கொள்ள முடியாது. குரல் பதிவுகளை அனுப்ப முடியும். வைபர், இமோ போன்றவற்றின் கணினிப் பதிப்பில் வீடியோ அழைப்பு வசதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.  அல்லோ, டுவோ, ஹேங்அவுட்ஸ், வாட்ஸப், வைபர், இமோ, பேஸ்புக் மெசேன்ஜர், ஸ்கைப் என எட்டு  செயலிகள் என் கைப்பேசியில் உள்ளன. இதில் கூகிள் அல்லோ எழுத்துக்களையும் குரல் பதிவுகளையும் மட்டுமே பரிமாற்றுகிறது. கூகிள் டுவோ வீடியோ அழைப்புகளை மட்டுமே அனுமதிக்கிறது.  மற்ற அனைத்திலும் எழுத்து, குரல் அழைப்பு, வீடியோ அழைப்பு போன்ற வசதிகள் உள்ளன. இந்த அனைத்து செயலிகளுக்குமிடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. நான் பயன்படுத்துவது எட்டு செயலிகள் என்றால் இன்னும் பல செயலிகள் சந்தையில் உள்ளன. அவற்றையும் சேர்

சிகரம் பாரதி 31 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! பிளாக்கரின் டாஷ்போர்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. அண்மனையில் http இலிருந்து https வசதியை வழங்கியது. இப்போது ஒருவர் தனது அனைத்து வலைப்பதிவுகளையும் இலகுவில் கட்டுப்படுத்தக் கூடியவாறு வடிவமைத்துள்ளது. இது கூகிள் வலைத்தள சேவையை பயனாளிகளுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்னும் ஈடுபாட்டைக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது. இன்னும் பல மாற்றங்களை எதிர்காலத்தில் எதிர்பார்க்கிறேன்.  தொழிலுடன் எதிர்கால இலட்சியப் பாதையை நோக்கிப் பயணிக்க முயற்சிக்கையில் பல தடைகள் வந்துபோகின்றன. முக்கியமாக நேரமின்மை. காலை 6.30 மணிக்கு எழுந்து தயாராகி 8.00 மணிக்கு வேலைக்கு சமூகமளித்து பணிகளை நிறைவு செய்துவிட்டு நிமிர்ந்தால் இரவு 8.00 மணியாகியிருக்கும். பணி முடிந்து மீண்டும் இல்லத்தை வந்தடையும்போது இரவு 9.00 மணிக்கு மேலாகிவிடுகிறது. குளித்து, உணவு உண்டு முடிக்கையில் இரவு 11.00 மணி தாண்டி விடுகிறது. இடைப்பட்ட 11.00-06.30 நேரத்தில் தான் தூங்கவும் எழுதவும் வாசிக்கவும் வேண்டும். சில நாட்களில் தூங்குவதற்கு அதிகாலை 02.00 மணியாகிவிடும். நம்ம வாழ்க்கை அப்படி.  நேர முகாமைத்துவத்தை என்ன முயன்றாலும்