Posts

Showing posts from June, 2015

ஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் !

Image
வணக்கம் வாசகர்களே! இலங்கையில் "சிறந்த பொய்யுரைஞர்கள் 225 பேரை தேர்ந்தெடுக்கும் மாபெரும் விழா" எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதிகூடிய பொய்யுரைஞர்களை பெறும் கூட்டணி க்கு "பிரதமர்" பரிசும் வழங்கப்படும். இது என்னடா புதுசா இருக்கேன்னு பாக்குறீங்களா? அட , ஒன்னுமில்லீங்க. நாடாளுமன்றத் தேர்தலைத்தான் அப்படிச் சொன்னேன். 225 என்கிற எண்ணிக்கையை சற்று தீவிரமாக சிந்தித்திருந்தால் உங்களுக்கு உடனே பிடிபட்டிருக்கும்.              2015.06.26 ஆம் திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். தற்போது தொங்கு நாடாளுமன்றமே காணப்படுகின்றது. இவ்வருடம் ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி கொண்டதன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. தனது வெற்றிக்கு உதவியதன் பேரில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கினார் மைத்திரிபால. ஆயினும் பிரதமர் பதவியை ரணில் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் ஆகஸ்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.

ஆபீஸ் முதல் ரெட்டை வால் குருவி வரை...

Image
வணக்கம் வாசகர்களே! நீங்கள் நலமா? நான் நலம். நான்  இன்று பேசப்போவது எனக்குப் பிடித்த தொலைக்காட்சித் தொடர் ஒன்றைப் பற்றி. என்ன டிவி சீரியல் பத்தியா? அட ஆமாங்க. இந்த தொலைகாட்சி தொடர்களையே விரும்பாதவன் நான். ஆனால் விதி யாரை விட்டது? என்னையும் சில தொடர்கள் கவர்ந்தன. விஜய் டிவி இன் ஆபீஸ் தொடர் அதில் முதன்மையானது. ஒரு அலுவலக சூழலை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட இத்தொடர் தான் என்னை மிகவும் கவர்ந்திருந்தது.                கார்த்திக் , ராஜி , விஷ்ணு , லக்ஷ்மி , விஸ்வநாதன் சார் என்று ஒவ்வொரு கதா பாத்திரமும் என்னைக் கவர்ந்திருந்தது. விறுவிறுப்பாக நகர்ந்தது  கதையின் முன்பாதி. கார்த்திக் - ராஜி இன் காதலும் மோதலும் மிகவும் ரசிக்க வைத்தது. விஸ்வநாதன் சாரின் பாத்திரம் நமக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது. விஷ்ணு - லக்ஷ்மி காதல் கலகலப்பாக இருந்தது. இந்த நால்வரின் நட்பும் நல்ல நட்பைக் காட்டியது. இரண்டாம் பாதி சற்றே அறுவையாய் இருந்தது. விஷ்ணு - லக்ஷ்மி பிரிவு , கார்த்திக் - ராஜி பிரிவு , கமல் இன் வருகை இதெல்லாம் சோகம். அலுவலக சூழலில் நிகழ்த்தப்பட்ட மாற்றம் மட்டுமே வரவேற்கத் தக்கதாய் இருந்தது. கார்த்தியை

டுவிட்டர் @newsigaram - 07

Image
# ஆசை க்கு ஒரு பெண் குழந்தை ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை - இது பழசு . ஆசைக்கு ஒரு ஆண்ட்ராய்டு போன் சார்ஜ் க்கு ஒரு சாதா போன் - இது புதுசு # நியாயத்தை கேட்கும் / பேசும் பெண்களுக்கு இந்த சமூகம் வாயாடி என பெயர் வைத்திருக்கிறது ! # கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் தோற்றம் மறைவு வருடங்களை கூட்டிக் கழித்து பார்த்து விடைக்கேற்ப வருந்திவிட்டு நகர்கிறது மனசு!!! # ஒருவருக்கு நம்மை இப்போதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் ...... பெரும்பாலும் நம்மிடம் அவருக்கான தேவைகள் முடிந்து விட்டதாகவும் இருக்கலாம் .....! # நீ யாருக்கோ செய்த மவுன அஞ்சலியை பார்த்ததும் எனக்கும் செத்து விட தோன்றியது -தபூசங்கர் # இன்றையத் தேவைக்குப் பேனாவைத் தேடுகையில் நேற்று தேடிய பென்சில் கிடைக்கும். தேடினால் ஏதாவது கண்டிப்பாகக் கிடைக்கும். தேடுங்கள். # எது உண்மையில் தோல்வி என்றால், எமக்கு ஏற்படும் தோல்வியில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளாதது தான்!! # பேசிப் பேசியே கழிந்தன ஐம்பதாண்டுகள் பேசியவை பிழையென இனி பேசலாம் -யுகபாரதி # நண்பர் 1 : மொட்டை மாடில தூங்க போறேன்னு ஸ்டேட்டஸ் போட்டது தப்ப போச்

விண்டோஸ் 10 வருகிறது!

Image
வணக்கம் வாசகர்களே! இதோ அதோ என்றிருந்த மைக்ரோசொப்ட் இன் விண்டோஸ் 10 ஜூலை மாதம் 29 ஆம் திகதி வெளியாகவுள்ளது. விண்டோஸ் 9, விண்டோஸ் ப்ளூ என பல்வேறு வதந்திகள் கடந்த காலங்களில் இருந்திருந்தாலும் விண்டோஸ் 10 இனை மைக்ரோசொப்ட் கடந்த வருட இறுதியில் உறுதி செய்தது. வழமைக்கு மாறாக தொழிநுட்ப முன்பார்க்கைப் பதிப்பொன்றை வெளியிட்டு மக்களின் பங்களிப்போடு விண்டோஸ் 10 உருவாக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 ஆனது விண்டோஸ் 7 மற்றும் 8 இன் குறிப்பிட்ட தரமான பதிப்புகளுக்கு முதல் வருடம் இலவசமாகக் கிடைக்கவுள்ள அதே நேரம் முதல் வருடத்தினுள் இற்றைப் படுத்தப்படும் பதிப்புகளுக்கு வாழ்நாள் சேவையினையும் வழங்கவுள்ளது. விண்டோஸ் 10 குறித்து நாம் இன்னும் பேசலாம். அதுவரை இந்த முகவரியில் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்! https://www.microsoft.com/en-us/windows

அகவை பத்தில் சிகரம்!

சிகரம்   அகவை பத்து ! ஒன்பது ஆண்டுகளாய் எமக்கு  அன்பும் ஆதரவும்  அளித்த அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகள்! சிகரம்                          அனைவருக்கும் வணக்கம்! இதோ என் இலட்சியப் பயணத்தில் அடியெடுத்து வைத்து ஆண்டுகள் ஒன்பது ஓடி விட்டன. நான்காவது ஆண்டாக வலைத்தளம் மூலமாக "சிகரம் தினம்" ஐ நினைவு கூறுவதில் பெருமகிழ்ச்சி. இந்த ஒன்பது ஆண்டுகளில் கற்றதும் பெற்றதும் எண்ணிலடங்காதவை. "சிகரம்" எனக்கு மட்டுமல்ல எனது சமுதாயத்திற்கே ஒளிவிளக்காக திகழ வேண்டும் என்பதே என் அவா.                      இவ்வேளையில் "சிகரம்" கடந்து வந்த பாதையைத் தெளிவாகக் கூறும் பதிவை இங்கு பகிர விரும்புகிறேன்: அகவை ஒன்பதில் சிகரம்    இன்று முதல் புத்துணர்ச்சியோடு வீறுநடை போடத் தயாராகி விட்டது நமது "சிகரம்". வரும் "சிகரம் ஆண்டு" ஏராளமான குறிக்கோள்களைச் சுமந்து வரப்போகிறது. அத்தனை குறிக்கோள்களையும் அடைந்திட நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். முக்கியமாக தனிப்பட்ட , சொந்த இணையத்தள முகவரிக்குள் "சிகரம்" ஐ அழைத்துச் செல்ல எண்ணுகிறேன்.