டுவிட்டர் @newsigaram - 07
# ஆசை க்கு ஒரு பெண் குழந்தை
ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை - இது பழசு
.
ஆசைக்கு ஒரு ஆண்ட்ராய்டு போன்
சார்ஜ் க்கு ஒரு சாதா போன் - இது புதுசு
# நியாயத்தை கேட்கும் / பேசும் பெண்களுக்கு இந்த சமூகம் வாயாடி என பெயர் வைத்திருக்கிறது !
# கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்
தோற்றம் மறைவு வருடங்களை
கூட்டிக் கழித்து பார்த்து
விடைக்கேற்ப வருந்திவிட்டு நகர்கிறது மனசு!!!
# ஒருவருக்கு நம்மை இப்போதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் ......
பெரும்பாலும் நம்மிடம் அவருக்கான தேவைகள் முடிந்து விட்டதாகவும் இருக்கலாம்
.....!
# நீ யாருக்கோ செய்த மவுன அஞ்சலியை
பார்த்ததும் எனக்கும் செத்து விட தோன்றியது
-தபூசங்கர்
# இன்றையத் தேவைக்குப் பேனாவைத் தேடுகையில் நேற்று தேடிய பென்சில் கிடைக்கும்.
தேடினால் ஏதாவது கண்டிப்பாகக் கிடைக்கும். தேடுங்கள்.

# எது உண்மையில் தோல்வி என்றால்,
எமக்கு ஏற்படும் தோல்வியில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளாதது தான்!!
# பேசிப் பேசியே கழிந்தன
ஐம்பதாண்டுகள்
பேசியவை பிழையென இனி
பேசலாம்
-யுகபாரதி
# நண்பர் 1 : மொட்டை மாடில தூங்க போறேன்னு ஸ்டேட்டஸ் போட்டது தப்ப போச்சு
நண்பர் 2 : ஏன் என்ன ஆச்சு
நண்பர் 1 : 25 கொசு லைக் போட்டு இருக்கு
# கடவுளை நம்புவோம்
அதிர்ஷ்டத்தை நம்புவோம்
மத்தவங்களை நம்புவோம்
ஆனால் நம்மை மட்டும் எப்போதும்
நம்புவதில்லை
பல உண்மைகள்...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன் அவர்களே.
Deleteசிந்திக்ககூடிய பல உண்மை.பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே.
Delete