Posts

Showing posts with the label உதவும் கரங்கள்

உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! உங்கள் அனைவரிடமும் ஓர் உதவி கேட்டு வந்திருக்கிறேன். அவசர உதவி. அதிலும் உதவியை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறேன். முதலாவது எல்லோரும் செய்யக் கூடியது. இரண்டாவது இயலுமானவர்கள் மனமிருந்தால் செய்யக் கூடியது. சரி. உதவி கோருவதற்கான காரணம்? காரணம் - இதுதான். எனது சகோதரன் [தம்பி] ஆகிய ஜனார்த்தனன் எதிர்வரும் 14  திகதி [ வரும் திங்களன்று ] இந்தியாவுக்கு மேற்படிப்புக்காக  செல்கிறார். இந்திய கலாசார மத்திய நிலையம் [ ICCR ] வழங்கும் புலமைப்பரிசில் வாயிலாக புனே [ PUNE ] பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வாய்ப்புக் கிட்டியுள்ளது. இப்போது அதற்கான பயண ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். 2014.07.14 காலை இந்தியன் ஏர்லைன்ஸ் இல் பயணமாக பணிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். இனி முதலாவது உதவி. இது தகவல் உதவி. ஆம். எனக்கு தேவைப்படும் சில தகவல்களைப் பெற சில கேள்விகளை உங்கள் முன் வைக்க எதிர்பார்க்கிறேன். அவற்றுக்கு தக்க பதில் வழங்கி உதவி புரியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இயலுமானவர்கள் இப்பதிவை உங்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து உதவுமாறும் அன்போடு கேட்டுக்கொள்க...