உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே!


உங்கள் அனைவரிடமும் ஓர் உதவி கேட்டு வந்திருக்கிறேன். அவசர உதவி. அதிலும் உதவியை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறேன். முதலாவது எல்லோரும் செய்யக் கூடியது. இரண்டாவது இயலுமானவர்கள் மனமிருந்தால் செய்யக் கூடியது. சரி. உதவி கோருவதற்கான காரணம்? காரணம் - இதுதான்.

எனது சகோதரன் [தம்பி] ஆகிய ஜனார்த்தனன் எதிர்வரும் 14  திகதி [ வரும் திங்களன்று ] இந்தியாவுக்கு மேற்படிப்புக்காக  செல்கிறார். இந்திய கலாசார மத்திய நிலையம் [ ICCR ] வழங்கும் புலமைப்பரிசில் வாயிலாக புனே [ PUNE ] பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வாய்ப்புக் கிட்டியுள்ளது. இப்போது அதற்கான பயண ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். 2014.07.14 காலை இந்தியன் ஏர்லைன்ஸ் இல் பயணமாக பணிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

இனி முதலாவது உதவி. இது தகவல் உதவி. ஆம். எனக்கு தேவைப்படும் சில தகவல்களைப் பெற சில கேள்விகளை உங்கள் முன் வைக்க எதிர்பார்க்கிறேன். அவற்றுக்கு தக்க பதில் வழங்கி உதவி புரியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


இயலுமானவர்கள் இப்பதிவை உங்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து உதவுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தகவல் திரட்டி இதோ:

01. புனே [ PUNE ] பல்கலைக்கழகம் குறித்த உங்கள் கருத்து என்ன?

02. அது அமைந்துள்ள இடம், இடத்தின் தன்மை, ஆட்சி - அரசியல் நிலவரங்கள் என்ன?

03. வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரு பிரச்சினை நேருமானால் அதனை கையாள்வதற்கான விசேட நெறிமுறைகள் ஏதேனும் உள்ளனவா?

04. இந்தியாவில் பாவிப்பதற்கு உகந்த சிறந்த "சிம் [SIM CARD ] அட்டை " எது?

  1. இணையப் பாவனை 
  2. ரோமிங் அழைப்புகள் 
  3. இலங்கைக்கான வெளிச்செல்லும் அழைப்புகள் 
  4. உள்நாட்டு [ இந்தியா ] அழைப்புகள் 
05. புனே [ PUNE ] பல்கலைக்கழகத்தில் நீங்கள் அறிந்த யாரேனும் கல்வி கற்கின்றனரா?

06. அவருக்கு நீங்கள் கூறும் அறிவுரைகள்?

இரண்டாவது பணம் சார்ந்தது. யாரும் ஓடி விடாதீர்கள். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. இன்னாரிடமிருந்து தேவை என்று சுட்டிக்காட்டப்  போவதுமில்லை. பண உதவி செய்ய இயலுமானவர்கள் நீங்களாக இருந்தால் உங்கள் உள்ளம் இடம் கொடுத்தால் மட்டும் உதவி செய்யுங்கள்.

முதற்கட்ட செலவாக வங்கிப்புத்தகத்தில் ரூ 25,000 , விமானப் பயணச்சீட்டு ரூ 18,000 மற்றும் இதர செலவுகள் என இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ 50,000 வரையில் தேவைப்படுகிறது. இதில் எங்களால் இயன்ற சிறிதளவு தொகையை சேகரித்திருக்கிறோம். மிகுதித் தொகைக்காக உங்களை நாடி வந்திருக்கிறேன். உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்துங்கள்.

இவ்வார இறுதிக்குள் பயணத்துக்காக அவரைத் தயார் செய்ய வேண்டியிருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. அதனால் வலைத்தள நண்பர்கள் முகம் சுழிக்காமல் உங்கள் வீட்டுப் பிள்ளையாய் எண்ணி உதவி புரிய வேண்டுகிறேன். நண்பர்கள் அனைவரும் நலமே வாழ பிரார்த்திக்கிறேன். மேலதிகத் தகவல்கள் உடனுக்குடன் அடுத்தடுத்த பதிவுகளில்....




மீண்டும் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். இயலுமானவர்கள் இப்பதிவை உங்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து உதவுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் சந்திக்கும்வரை
அன்புடன்

சிகரம்பாரதி.

Comments

  1. தம்பியின் கல்வி தொடர வாழ்த்துகள்
    தமிழக நண்பர்கள் தகவல் தருவர்

    ReplyDelete
  2. சிகரம் பாரதி நான் பொருளாதார விஷயத்தில் உதவத்தயாராக இருக்கிறேன், மேலும் புனேயில் சில தமிழ் நன்பர்கள் இருக்கிறார்கள், உங்களை எப்படி தொடர்பு கொள்வது, உங்களது தொலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
  3. அன்பின் சிகரம் பாரதி!..
    தமிழகத்தின் வட எல்லை தாண்டி நான் அறிந்ததில்லை..
    பொதுவாக புனேயில் பெரிதாக எவ்விதப் பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை..
    எல்லாவற்றுக்கும் இறைவன் வழி காட்டுவார்.
    நல்வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  4. தங்களின் நல்லெண்ணத்திற்குத் தக்கவாறு உதவிகள் தாமாக வந்துசேரும் என்பது என் நம்பிக்கை. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரரே!

    உங்கள் தம்பியின் மேற்படிப்பு சிறந்தோங்க என் வாழ்த்துக்கள்!

    உங்களுக்கு உதவும் வகையில் எனக்கு இந்தியாவில்
    பெரியளவில் தொடர்போ அனுபவமோ இல்லை.
    அத்துடன் நானும் ஒரு ஈழத்தவளே...
    ஆயினும் இருப்பது ஜேர்மனியில்.
    பொருளாதார உதவிக்கு என்ன செய்யலாமென யோசிக்கின்றேன்.
    அதுபற்றிப் பின்னர் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.

    அனைத்தும் சிறப்பாக அமைய இறையருளை வேண்டி வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  6. இந்தியாவில் தாங்கள் எதிர்பார்க்கும் அளவு உதவிகள் என்னால் இயலாத காரியம் பொருளாதார உதவியை என்னால் முயன்ற அளவு செய்ய முயற்சிக்கிறேன், தங்களது முகவரி அனுப்பவும். இறைவன் அருள் புரிவானாக... நன்றி.

    ReplyDelete
  7. தங்களது தம்பியின் படிப்பு சிறக்க வாழ்த்துக்கள்! இதை என் முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன்! நன்றி!

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!