Posts

Showing posts from April, 2020

வலை ஓலை - எழுத்தாணி - சொல்

Image
இணைய உலகில் தமிழை வளம்பெறச் செய்ததில் வலைத்தளங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் ஆகிய இரண்டும் வலைத்தள சேவைகளை வழங்கினாலும், பிளாக்கரிலேயே அதிக அளவு வலைத்தளங்கள் உருவாகின. 
தமிழ் வலைத் தளங்களுக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டு வரலாறு இருக்கலாம் என நினைக்கிறேன். ஆரம்பகால வலைத்தள எழுத்தாளர்களுக்கே தமிழ் வலையுலகின் அத்தனை பெருமைகளும் சாரும் என்றே நான் சொல்வேன். 

காரணம், அவர்கள் அனைத்தையும் உருவாக்கினார்கள். வலைத்தள சேவைகள் தமிழில் கிடைக்க அவர்கள் பெரும் பங்காற்றினார்கள். பல வலைப்பதிவர்கள் தமிழில் உருவாக அவர்களே காரணமாய் அமைந்தார்கள். அவர்களில் பலரும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பலரும் நவீன எழுத்தாளர்களாய் உருவாகினர். 

தமிழ் வலைத்தளங்களை அப்போது நடத்திச் செல்வதில் இருந்த சிரமம் இப்போது இல்லை. வலைத்தளங்கள் தற்போது வெகுவாக முன்னேறிவிட்டன. எந்தவொரு சிரமமும் இல்லாமல் யுனிகோடில் தட்டச்சு செய்ய முடிகிறது. 

அத்துடன், வலைத்திரட்டிகள் தமிழ் வலையுலகில் ஆற்றிய பங்கு மறக்க முடியாது. தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ் 10 ஆகியன அவற்றில் வெகு பிரபலமானவை. இந்த மூன்றிலும் தமது பதிவுக்கு அத…

கால் நூற்றாண்டுக் காதல் கடித்தைத் தேடிப் போகலாம் வாருங்கள்!

Image
'கால் நூற்றாண்டு காதல்' குறுந்திரைப்படத்தை பார்த்து முடித்த சூட்டோடு அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். முதலில் தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்த நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி. 
நண்பரின் பதிவு: காதல் கடிதத்தைத் தேடி - குறும்படம்
ஒரு வாசகம்: நீங்கள் விரும்பிச் செய்யும் எதிலும் உங்களுக்கு தோல்வி கிடையாது! 
ஒரு கோரிக்கை: வலை ஓலை வலைத்திரட்டியை தங்கள் வலைத்தளங்களின் மெனுவில் இணைப்பதுடன், தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி உதவுங்கள். 
குறும்படம்:  25 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட காதல் கடிதத்தைத் தேடிய ஒரு பயணம். ஒரு சில கதாபாத்திரங்களை வைத்து அருமையாக இயக்கப்பட்டிருக்கிறது. 
தேவையில்லாத பின்னணிக் கதைகள், துணைக் கதைகள், வரலாறு எல்லாம் இல்லாமல் திரைக்கதை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. 
நடிப்பு வேறு ரகம். அனாவசியமான மினக்கெடல்கள் இல்லாத இயல்பான நடிப்பு ரசிக்க வைக்கிறது. 
நாம் வாழ்வில் செய்யும் எல்லா செயல்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். சில அர்த்தங்கள் உடனடியாக தெரியவரும். சில, காலம் கனிந்தால் தான் புரிய வரும். 
25 வருடத்துக்கு முன்னால் அந்த கடிதம் உரிய நே…

வலை ஓலை - கனவு நனவாகுமா?

Image
தமிழ் வலையுலகில் எண்ணற்ற வலைப்பூக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவை அத்தனையையும் ஒன்றாய்க் கோர்த்து பூமாலை ஆக்குவதே வலைத் திரட்டிகளின் பணி. கடந்த காலங்களில் அந்த பணியை பல்வேறு கைகள் செய்துவந்தாலும், இப்போது மாலை கோர்க்க ஆளில்லாமல் பூக்கள் வீதியெங்கும் இறைந்து கிடக்கின்றன. 
பதறியது எம் மனம். உதறினோம் தயக்கம். யார் யாரையோ எதிர்பார்ப்பதற்கு பதில் நாமே களத்தில் இறங்கி களப்பணி செய்தால் என்ன என்று சிந்தித்தோம். உருவானது வலை ஓலை


ஆரம்பித்து இரண்டு மாதங்களில் 27 வலைப்பூக்களையும், அந்த வலைப்பூக்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளையும் கொண்டு ஆலம் விழுதாய் வேர்விட்டு வளர ஆரம்பித்திருக்கிறது நம் வலைத்திரட்டி. 
நன்றிகள் எத்தனை சொன்னாலும், அத்தனைக்கும் ஈடாகாது உங்கள் அனைவரினதும் அன்பு. இந்த அன்பும் ஒத்துழைப்பும் அன்பும் என்றென்றும் தொடர வேண்டும் என்பதே எமது அவா. 
ஆயிரமாயிரம் வலைப்பூக்களையும், இலட்சக்கணக்கான பதிவுகளையும் கொண்டு தலை சிறந்த வலைத்திரட்டியாய், வலை ஓலை உருவாக வேண்டும் என்பதே எமது அவா. 
இந்த கனவு நிறைவேறுவதும், கனவாகவே கலைந்து போவதும் தங்கள் கைகளில் தான் இருக்கிறது நண்பர்களே!