Posts

Showing posts from 2024

வாசிப்பும் நானும் - சில குறிப்புகள்

Image
வாசிப்பு என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் தேடிப்பார்க்கின்ற போது பலர் வாசிப்பு ஆர்வம் அற்றவர்கள் போலவே இருக்கின்றார்கள். இதற்கு என்ன காரணம்? நூலகங்கள் பல இருந்தாலும் அவற்றை நாடுவோர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதன் காரணம் என்ன? முதல் காரணமாக நான் கருதுவது பலருக்கு தமக்கு பொருத்தமான புத்தகங்களை கண்டடைய முடியாமல் போகின்றது. தமது வாசிப்பு தேடலைப் பூர்த்தி செய்யும் புத்தகத்தை அவர்களால் கண்டடைய முடிவதில்லை. நூற்றுக்கணக்கான நூல்களை வாசித்துள்ள எனக்கே பல சமயங்களில் இந்த சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. அடுத்தது மாணவப் பருவத்தில் வாசிப்பு அநாவசியமான ஒன்றாக பார்க்கப்படுவது. கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த பாடம் தொடர்பில் நூலகத்தில் ஏதேனும் தேடிக் கொண்டு வா என்று சொல்வதில்லை. நூலக ஆசிரியரே நூலகத்திற்கு மாணவர்களை அழைக்காத நிலையே பல பாடசாலைகளிலும் காணப்படுகின்றது. இந்த பின்னணியில் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் மாணவர்கள், நூலகமும் நூல்களும் அப்போதைய ஆய்வுத் தேவைக்கு மாத்திரம் தான் என் முடிவு செய்து விடுகின்றனர். ஒரு சிலரே தமது துறை சார்ந்தேனும் நூல்களை வாசிக்கின்றனர்.  எனக்க

வாசிப்பும் பகிர்வும் - 03 | வாசிப்பது எப்படி - செல்வேந்திரன்| வாசிப்பு அனுபவக் குறிப்புகள்

Image
பா. ராகவன் எழுதிய உக்ரையீனா புத்தகம் பற்றிய எனது எண்ணங்களை கடந்த பதிவில் பகிர்ந்திருந்தேன்.  இன்று நாம் பார்க்கவிருக்கும் புத்தகம் - வாசிப்பது எப்படி?  நூலாசிரியர் - செல்வேந்திரன் தலைப்பைப் பார்த்ததும் இதற்கெல்லாம் ஒரு புத்தகம் தேவையா என்ற எண்ணம் நமக்குள் எழலாம். ஆனால் அதற்கான தேவை இருக்கிறது என்பதை இந்த புத்தகத்தை வாசித்தால் உணர்ந்து கொள்ளலாம்.  82 பக்க கட்டுரைகளை மட்டும் கொண்ட ஒரு புத்தகம் இது. ஒருசில மணிநேரத்திற்குள் இதனை வாசித்துவிட முடியும்.  ஆனால் ஆசிரியர் சொல்ல வந்த கருத்தை நாம் உணர்ந்து வாசிப்பது அவசியம்.  நாம் வாசிப்பு என்ற உடனேயே புத்தக வாசிப்பை மாத்திரமே கருத்திற்கொள்வோம். ஆனால் நாளிதழ் வாசிப்பதும் வாசிப்பின் ஒரு அங்கம் என்பதையும், புத்தகம் வாசிப்பவர்கள் நாளிதழ்களை வாசிக்கப் பழக வேண்டும் என்பதையும் செல்வேந்திரன் வலியுறுத்துகிறார்.  உயிருள்ள பாடப்புத்தகம் என நாளிதழ்களை அழைக்கும் செல்வேந்திரன், அந்த நாளிதழ்களை எப்படி வாசிப்பது என நமக்கு கற்றுத்தருகிறார்.  ஆசிரியர் நமக்கு ஒரு கோரிக்கையை முன்னுரையில் முன்வைக்கிறார். இந்த புத்தகத்தை முழுதாகப் படிக்கும் பொறுமை இல்லாதவர்கள் வாசிப்ப

வாசிப்பும் பகிர்வும் -02 - உக்ரையீனா - பா ராகவன்

Image
வாசிப்பு என்பது மிகவும் சுவாரசியமான ஒன்று. ஏன் எனக்குப் பிடித்தமானதும் கூட. சிறுவயதில் இருந்தே நூல்களும் நூலகங்களும் எனக்குப் பிடித்தவையாக இருந்திருக்கின்றன. வாசிப்பின் தொடர்ச்சியாக பாடசாலைக் காலத்தில் கையெழுத்து சஞ்சிகையும் தொடர்ந்து வந்த காலத்தில் வலைப்பதிவுகளும் பின்னர் ஒரு சில இணையத்தளங்களும் என என் முயற்சிகள் விரிவடைந்து சென்றிருக்கின்றன. ஆனாலும் புத்தகம் வெளியிட நினைத்தாலும் இதுவரை அந்த எண்ணம் ஈடேறவில்லை. இருந்தாலும் இடைநடுவில் சிலகாலம் வாசிப்பை விட்டு நான் பிரிந்திருக்க நேரிட்டது. அதற்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக வாசிக்கிறேன். ஆனால் உரிய காலத்திற்குக் காத்திருந்ததன் விளைவாக இந்த ஆண்டு வாசிப்பு மாரத்தான் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே பங்குபற்றுகிறேன்.  எனது முதல் வாசிப்பு பதிவாக எழுத்தாளர் பா. ராகவன் Pa Raghavan எழுதிய உக்ரையீனாவை பதிவு செய்ய விரும்புகிறேன். அளவில் சிறியதாக இருந்தாலும் விடயத்தில் பெரியதாக இருக்கிறது இந்த நூல். உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே தற்போது மூண்டுள்ள இந்த போர், ஏன், எதற்கு என்பதை விரிவாக ஆராய்கிறது உக்ரையீ