Posts

Showing posts with the label ஊரும் உலகும்

விமானங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் வான் பாதைகள்...! (சிறப்புத் தொகுப்பு)

Image
விமானப் பயணங்கள் என்றால் யாருக்குத் தான் ஆசை இல்லை? ஆனால் அந்த ஆசைக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது.  ஆம்.  உலக நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியினால் நாம் எல்லோரும் விமானப் பயணம் என்றாலே ஒருவித அச்சத்துடனேயே தான் நோக்க வேண்டியிருக்கிறது.  ஏன், எதற்கு, எப்படி என்பதையெல்லாம் இந்த சிறப்புத் தொகுப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.  விமானங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் வான் பாதைகள்...! (சிறப்புத் தொகுப்பு)  https://newsigaram.blogspot.com/2020/01/world-plane-routes-in-danger.html #World #Plane #Travel #Flight #Accident #MissileAttack #USA #Iran #Iraq #Malaysia #Ukraine #Crimea #Russia #Malaysia #Boeing #BlackBox #Sigaram #Segment 

மாற்றம் வேண்டும்

Image
வணக்கம் வாசகர்களே. நலம், நலமறிய ஆவல். 'மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது' என்பது நம் மூத்தோர் வாக்கு. இந்த பூமி தோன்றிய நாள் முதல் இன்று வரை எண்ணற்ற மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் நொடிக்கு நொடி உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் மாற்ற வேண்டிய சில விடயங்களை இன்னமும் மாற்றிக் கொள்ளாமல் இருக்கின்றோம். அது என்னென்ன, ஏன் மாற வேண்டும் என்பது பற்றியெல்லாம் இப்பதிவில் நாம் பார்க்கலாம். 01. கல்வி  02. அரசியல்   கல்வி ஒரு மனிதனின் அறிவை வளர்க்கும் கருவி. கல்வி இருவகைப்படும். அனுபவக் கல்வி மற்றும் புத்தகக் கல்வி. என்னதான் ஒரு மனிதனுக்கு புத்தகக் கல்வி இருந்தாலும் அனுபவக் கல்வியே புத்தகக் கல்வியின் மதிப்பை உயர்த்துகிறது. நமது இன்றைய கல்வி முறை குழந்தைகளை பாடப் புத்தகங்களுக்குள்ளேயே மூழ்கியிருக்கச் செய்கிறதே தவிர உலக அறிவை வளர்க்க விரும்பவில்லை.  ஏட்டில் எழுதத் தெரிந்தவன் மட்டும் தான் அறிவாளி என்பது தான் இன்றைய கல்வியின் வாதம். அந்தக் காலத்தில் குருகுலம் தான் பள்ளிக்கூடம். மாணவர்கள் குருகுலத்தில் சென்று தங்கி அங்குள்ள பணிகளைச் செய்த...

ராஜேந்திரனின் பள்ளிப்படை எங்கே இருக்கிறது தெரியுமா?

Image
நூறு கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய ஊருக்கு வழி தெரியாமல் குக்கிராமங்களுக்குள் புகுந்து வயல், வரப்பு, ஏரி என பசுமையான இடங்களை கடந்து நூற்றைம்பது கிலோமீட்டர் பயணித்து ஊரை வந்தடைந்தோம். 'அண்ணே இந்த ஊர்ல ராஜேந்திர சோழனோட பள்ளிப்படை இருக்காமே, அதுக்கு வழி?' 'ராஜா சமாதியா? இப்படியே நேரா போங்க. பழைய காலத்து சினிமா கொட்டா ஒன்னு வரும், அதுக்கு எதிர்'ல, வயலுக்கு நடுவுல ஒரு சிவலிங்கம் இருக்கும் அது தான் அவர் சமாதி.' ஊரின் மேற்கு திசையை நோக்கி பயணித்தோம். அழகான ஊர் தான். சரியாக திட்டமிடப்பட்ட வீதிகள், ஊருக்குள் சோழர் காலத்து சிவன் கோயில் ஒன்றும், பெருமாள் கோயில் ஒன்றும் இருந்தது. இந்த கோயில்களின் கல்வெட்டுகளில் தான் ராஜேந்திரன் தன்னுடைய கடைசி காலத்தை இந்த ஊரில் கழித்தார் எனவும், அவர் இறந்ததும் அவருடன் அவர் மனைவி வீரமாதேவி அவருடன் உடன்கட்டை ஏறியதாகவும் கல்வெட்டுகள் தெரிவித்தது. Evidence : ( ARE 263 of 1915) , (ARE 260 of 1915).   இந்த ஊரில் தான் இறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் சரி. வயலுக்கு நடுவே இடிந்து கிடக்கும் கோயிலும் அந்த சிவலிங்கமும் தான் பள்ளிப்...

கூகுள் வரைபடத்துடன் இணையும் இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

Image
இன்றைய தொழிநுட்ப உலகில் நமக்கு கூகுளின் சேவை மிக அத்தியாவசியமானது. ஆண்ட்ராய்டு (Android), ஜி மெயில் (G-Mail), கூகுள் வரைபடம் (Google Map), கூகுள் குரோம் (Google Chrome) என கூகுளின் சேவைப் பட்டியல் மிக நீளமானது. அவற்றுள் கூகுள் மேப் எனப்படும் கூகுள் வரைபடம் மிக முக்கியமானது.  குறிப்பிட்ட ஓரிடத்திற்குச் செல்வதற்கான வழிகளை அறிதல், நிகழ் நேர போக்குவரத்து நெரிசல்களை அறிதல், வியாபார நிறுவனங்கள், வங்கிகள், வங்கி தன்னியக்க இயந்திரங்கள், உணவகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம், திரையரங்குகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை கண்டறிதல் என கூகுள் வரைபடத்தின் சேவைகள் அளப்பரியவை.  இவ்வாறாக பல சிறப்புகளைக் கொண்ட கூகுள் வரைபடத்தின் ஊடாக இவ்வருட இறுதி முதல் நாளாந்த பொதுப் போக்குவரத்து குறித்த தகவல்களையும் இலங்கைப் பயனர்களால் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருக்கும் என இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (National Transport Commission - NTC) தலைவர் எம். ஏ. பி. ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.  புதிய வசதியின் மூலம் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சாதனங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் ப...

திருவாசக அரண்மனை - திருவாசகத்துக்கு ஓர் மகுடம்!

Image
'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்று சொல்லக் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட திருவாசகத்துக்கு இங்கே தனிச்சிறப்பு மிக்க அரண்மனையையே ஆலயமாய் எழுப்பி இருக்கிறார்கள். எங்கே? எப்படி? என்ன? கீழே உள்ள யூடியூப் காணொளியில் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்! "நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க" -சிவபுராணத்தின் ஒரு பகுதி #திருவாசகம் #பன்னிருதிருமுறை #ஆலயம் #சிவன் #சிவலிங்கம் 

ஸ்டெர்லைட் - தூத்துக்குடி - அரசியல்

Image
பதின்மூன்று உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை. தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் கூட்டு வெறியாட்டத்தை உலகமே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது தமிழகத்தில்? மக்கள் ஏன் இவ்வளவு கொந்தளிப்புடன் இருக்கிறார்கள்? அரசியல் வாதிகள் ஏன் மக்களுக்கு எதிராக இவ்வளவு முனைப்பாக இருக்கிறார்கள்? தமிழகத்தின் பக்கமே திரும்பிப் பார்க்காத மத்திய அரசு தமிழகத்துக்கு இப்போது மட்டும் ஏன் உதவிக்கரம் நீட்டுகிறது?  ஸ்டெர்லைட் என்னும் ஆலைக்குப் பின்னால் இருக்கும் வரலாறும் அரசியலும் பெரிய கதை. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு என்று அரச அமைப்புகளின் கூட்டுக்கு முன்னால் இருக்கும் அரசியல் கதை மிகப் பாரியது.  ஆனால் மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மரணத்தைப் பரிசளிப்பது தான் அரசின் அணுகுமுறையா? முதல் நாள் மக்கள் போராட்டத்தின் போது பதினோரு உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியதுடன் அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது. மரணமடைந்தவர்களின் உடல்களை மறுநாள் வாங்க மறுத்தவர்களின் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தி தனது வ...

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நகர்வுகள்

Image
உள்ளூராட்சித் தேர்தல் இலங்கையில் நடைபெற்ற நாள் முதல் ஆட்சி தளம்பலடைந்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஜனாதிபதி இக்கட்சிதானா என்று நானறியேன்) ஆகியவற்றுக்கிடையிலான கூட்டாட்சி (நல்லாட்சி என்றும் சொல்லலாம்) எப்போது கவிழுமோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கிறது இத்தேர்தல். மக்களும் ஆட்சி கலைவதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேராசைப்படாமல் இருந்திருந்தால் அநேகமாக இவ்வருடம் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பதில் இலங்கை பொதுத் தேர்தலைச் சந்தித்திருக்கக் கூடும். நாடும் உறுதியான, நிலையான ஆட்சியைப் பெற்றிருக்கும். ஆனால் நடந்தது என்ன? ஜனாதிபதி யார், பிரதமர் யார், ஆளுங்கட்சி எது, எதிர்க்கட்சி எது என்று அரசியல்வாதிகளே குழம்பிப் போகுமளவு நாடு முன்னேறியிருக்கிறது.  கடந்த நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தனித்து ஆட்சியமைக்க முனைப்புக் காட்டியிருந்த போதும் அது நிறைவேறவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பிரதமரை...

ஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்தமிழன்! - 03

Image
வணக்கம். ஏறு தழுவும் உரிமை மீட்க தொடங்கிய இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் உரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழக அரசு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு நிரந்தர சட்டமாக்கப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம், நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ( பிப் 05 - 2017 ) மிகக் கோலாகலமாக, மிக வெற்றிகரமாக இளைஞர்களுக்கு நன்றி கூறி நடாத்தி முடிக்கப் பட்டுள்ளது. மேலும் பாலமேடு மற்றும் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் இவ்வாரம் ( பிப் 09, 10 - 2017 ) ஏறு தழுவும் விளையாட்டு இடம்பெறவுள்ளது. எந்தக்காலத்திலும் ஏறு தழுவும் விளையாட்டு நடாத்தப்படும் நேரத்தில் தமிழக இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் உலகத் தமிழர்களின் பங்களிப்பை யாரும் மறந்துவிட முடியாது. ஜல்லிக்கட்டு அமைப்போ அல்லது தமிழக அரசோ ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் என்னும் இவ்வெற்றிக்கு உரிமை கோர முடியாது. தமிழக அரசு மக்களின் எண்ணத்தை நிறைவேற்றிய கருவி மட்டுமே. இளைஞர்களின் எழுச்சிக்கு தலைவணங்குகிறேன்!   ஏறு தழுவும் உரிமை மீட்க இலட்சக்கணக்கில் திரண்ட இளைஞர் கூட்டத்தைப் பார்த்து உலகமே வியந்து போன...

ஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்தமிழன்! - 02

ஏறு தழுவும் உரிமையை மீட்க தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மாணவர்களின் இப்போராட்டம் ஏறு தழுவும் உரிமை மீட்புக்காக மட்டுமல்லாது காவிரி மேலாண்மை வாரியம், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தமிழகத்தின் நீராதாரத்தை சிதைத்தல், சுவாதி படுகொலை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து பன்முகம் கொண்ட போராட்டமாக தொடர வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. போராட்டக்காரர்கள் மத்தியில் இவை தொடர்பான கருத்துக்கள் பரவலாக இருந்தாலும் ஏறு தழுவும் உரிமையை மீட்டுவிட்டால் போராட்டம் முழுமையடைந்துவிடும் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் இடம்பெற்று வரும் இந்த ஏறு தழுவுதல் உரிமை மீட்புக்காக நடைபெறும் இப்போராட்டத்தில் கூட இளைஞர்களிடையே பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் நிலவி வருகின்றன. அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வாடிவாசல் திறந்து ஏறு தழுவுதல் இடம்பெற்றால் போராட்டம் நிறைவுக்கு வரும் என ஒரு பகுதியினர் கூறுகின்றனர். அவசரச் சட்டம் போதாது, நிரந்தரத் தீர்வு வரும் வரை போரா...

ஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்தமிழன்!

ஜல்லிக்கட்டு எனத் தற்போது பரவலாக அழைக்கப்படும் ஏறு தழுவுதல் என்னும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கான தடையை நீக்கக் கோரி செல்லினங்களான கைப்பேசிகளிலேயே தினமும் மூழ்கிக் கிடக்கும் இக்கால இளைஞர்கள் வெகுண்டெழுந்துள்ளனர். மூன்றாவது நாளாகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இளைஞர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிவருகிறது. பெருகிவரும் மக்கள் ஆதரவின் காரணமாக திரைத்துறையினர் , அரசியல் வாதிகள் மற்றும் பலரும் ஏறு தழுவுதலுக்கு சட்டரீதியான அனுமதி கோரி தமது ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இரவு பகல், வெயில் பனி என எதனையும் பொருட்படுத்தாது மக்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. மாணவர்கள், பெண்கள், தாய்மார்கள் , குழந்தைகள், பெரியவர்கள் என அத்தனை மக்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சிறு தீப்பொறியாக தொடங்கியது இப்போராட்டம். தீப்பொறி என்ன செய்யும் என எண்ணிய அதிகார வர்க்கம் கொழுந்துவிட்டெரியும் சுடரைக் கண்டு மிரண்டு போயிருக்கிறது.  2004 ஆம் ஆண்டு விலங்குகள் நல தன்னார்வ அமைப்பாக தன்னை அடையாளப்படுத்திக...

சிகரம் பாரதி 37 / 50 - மக்கள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்! - 02

Image
வணக்கம் வாசகர்களே! தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா 05.12.2016 அன்று காலமானார். 75 நாட்களாக சென்னை அப்போலோ தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா 05 ஆம் திகதி மரணமானதாக அறிவிக்கப்பட்டது. இங்கே 'அறிவிக்கப்பட்டது' என்னும் சொல்லைக் கவனத்திற் கொள்ளுங்கள். ஏனெனில் ஜெயலலிதா மயங்கி விழுந்தபோதுதான் கட்சியினர் கடைசியாக அவரைக் கண்ணால் கண்டார்கள். அதன் பின் டிசெம்பர் 05 ஆம் திகதி பிணமாகத்தான் அவரைக் காணக் கிடைத்தது. வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து மரணமானதாகச் சொல்லப்படும் நாள் வரை 75 தினங்களாக தமிழக முதல்வரை உயிருடன் வைத்திருந்தது அப்போலோ அறிக்கைகள் தான்.  மரணம் தொடர்பில் நிலவிவரும் சர்ச்சைகளுக்கு ஒரு முடிவில்லை. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவை அனைத்தும் வினவுவது 75 நாட்களாக என்ன நடந்தது ஜெயலலிதாவுக்கு? உண்மையில் அவர் 05 ஆம் திகதி தான் மரணமானாரா? இரகசியமாக அவரை வைத்திருந்தது ஏன்? என்னும் கேள்விகளைத்தான். தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் தேசிய மட்ட அரசியல்வாதிகளும் கூட ஜெயலலிதாவை நலம் விசாரிக்க அப்போலோ மருத்துவமன...

சிகரம் பாரதி 36 / 50 - மக்கள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்!

வணக்கம் நண்பர்களே! தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மண்ணுலகை விட்டு மறைந்துவிட்டார். அவரை நேசித்த , எதிர்த்த அனைவரின் மனங்களிலும் சோகம். அனைவரின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல்கள்.  செல்வி ஜெ.ஜெயலலிதாவைப் பற்றிப் பேசினால் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் அத்தனைக்கும் முன்னால் 2016.12.06 அன்று ஆனந்த விகடன் தளத்தில் வெளியான ' எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் ஜெயலலிதாவைப் பிடித்திருப்பது ஏன்? ' என்னும் இக்கட்டுரையைச் சற்றுப் படித்துப் பாருங்கள். // நடு வீட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூத உடலை, மயானத்துக்கு தூக்கிச் செல்லும் அந்த நொடியில், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளிப்படும். அத்தனை சொந்தமும் வெடித்து அழும். கலங்காத மனமும் கலங்கும்.  அப்போலோவில் இருந்து போயஸ்கார்டனுக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டதும், ‛முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பூத உடல்...’ என செய்தி சேனல்கள் உச்சரித்த நொடியிலேயே, அதிமுக அல்லாதவர்களின் கண்களிலும் கண்ணீர். அப்போது டிவிகளில் ஒளிபரப்பான ஜெயலலிதாவின் சிரித்த முகம் ரொம்பவே  வாட்டியது. இதைப் பார்க்க முடியாது வெளிய வந்த பக்கத்து வீட்...

பீப்... பீப்.... (Peep... Peep...)

Image
பீப்... பீப்.... (Peep... Peep...) காலை நேரம். போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதி. சமிக்ஞை விளக்கு பச்சை நிறத்தில் ஒளிர்வதற்கு இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். முன்னால் 50 வாகனங்கள், பின்னால் 100 வாகனங்களாவது இருக்கும். இடைநடுவில் ஒரு பேரூந்து. அதில் உள்ள பயணிகளுள் ஒருவர். பின்னாலுள்ள வாகனங்கள் எழுப்பும் பீப் ஒலி (Horn) செவிப்பறையை கிழித்துக் கொண்டு கேட்கிறது. அந்தப் பேரூந்திலுள்ள பயணியின் மனநிலை என்னவாக இருக்கும்? அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்? பண வசதி இல்லாதவர்கள் பணியிடங்களுக்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ நடந்து அல்லது பொதுப் போக்குவரத்து சாதனத்தின் மூலம்  செல்கிறார்கள். வசதி / இயலுமை உள்ளவர்கள் சொந்த வாகனங்களில் பயணிக்கிறார்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நடந்து செல்வதற்கு 30 நிமிடங்கள் ஆகின்றது என வைத்துக் கொள்வோம். அந்த இடத்தை சொந்த வாகனத்தின் மூலம் 15 நிமிடங்களில் அடைந்து விடலாம் எனக் கொள்வோம். நீங்கள் வாகனத்தில் செல்லும் ஒருவராக இருந்தால் நடந்து செல்லும் ஒருவரை விடவும் 15 நிமிடங்கள் முன்னதாகவே விரைவாக அந்த இடத்தை...

கனரக வாகனத்தில் வந்த காலன்!

Image
பிரான்ஸ் கனரக வாகன தாக்குதல் பிரான்ஸ்  தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், உணவகங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் 125 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இம்மாதம் 14ஆம் திகதி இரவு நீஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட வாகன தாக்குதலில், 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரத்தில் பாஸ்டில் தினம் எனப்படும் பிரான்ஸ் தேசிய தினத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது, நீஸ் நகரத்தின் முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று, திடீரென ஒரமாக நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் மீது மோதி சாய்த்தபடி சென்றது. மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இத் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக் குதல் தொடர்பாக இதுவரை...

விண்டோஸ் 10 வருகிறது!

Image
வணக்கம் வாசகர்களே! இதோ அதோ என்றிருந்த மைக்ரோசொப்ட் இன் விண்டோஸ் 10 ஜூலை மாதம் 29 ஆம் திகதி வெளியாகவுள்ளது. விண்டோஸ் 9, விண்டோஸ் ப்ளூ என பல்வேறு வதந்திகள் கடந்த காலங்களில் இருந்திருந்தாலும் விண்டோஸ் 10 இனை மைக்ரோசொப்ட் கடந்த வருட இறுதியில் உறுதி செய்தது. வழமைக்கு மாறாக தொழிநுட்ப முன்பார்க்கைப் பதிப்பொன்றை வெளியிட்டு மக்களின் பங்களிப்போடு விண்டோஸ் 10 உருவாக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 ஆனது விண்டோஸ் 7 மற்றும் 8 இன் குறிப்பிட்ட தரமான பதிப்புகளுக்கு முதல் வருடம் இலவசமாகக் கிடைக்கவுள்ள அதே நேரம் முதல் வருடத்தினுள் இற்றைப் படுத்தப்படும் பதிப்புகளுக்கு வாழ்நாள் சேவையினையும் வழங்கவுள்ளது. விண்டோஸ் 10 குறித்து நாம் இன்னும் பேசலாம். அதுவரை இந்த முகவரியில் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்! https://www.microsoft.com/en-us/windows

கொஞ்சம் பேசுவோம்!

                 வணக்கம் வாசகர்களே! ஒரு கவலைக்குரிய விடயம் பற்றி உங்களுடன் பேச வேண்டியுள்ளது. அண்மைக்காலமாக சிறுவர்கள் , பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களே அதுவாகும்.                       அண்மையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவு பிரதேச மாணவி வித்தியா என்பவர் 10 பேர் கொண்ட கும்பலினால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். மாணவியின் உயிர்? வாழ்க்கை??                        ஆங்கில அறிஞர் ஒருவர் இப்படிச் சொல்கிறார் "நான் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் நான் முழு நிர்வாணமாக வீதியில் நடந்து செல்லும் சூழலில் கூட உங்களில் யாருக்கும் என்னைக் கற்பழிக்கும் உரிமை இல்...

ஏன்? ஏன்?

                      வணக்கம் வாசக நெஞ்சங்களே! மிக நீண்ட இடைவேளைக்குப் பின் - 181 நாட்களுக்குப் பின் - 6 மாதங்களுக்குப் பின் - அரை வருடத்துக்குப் பின் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சரி.. சரி... அரை வருசத்துக்குப் பிறகு வந்தா என்ன, ஆறு வருசத்துக்குப் பிறகு வந்தா என்ன? விசயத்த சொல்லணும். அதானே? சொல்றேன்யா....            முதலில் இனிய சித்திரைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். "சித்திரைப் புத்தாண்டு" என்று சொல்வதா, இல்லையா என்று தெரியவில்லை. முதலாவது கருணாநிதியும் ஜெயலலிதாவும் இதற்கு ஒரு சரியான முடிவை எடுக்கவில்லை. அடுத்து, நமது சமூக வலைத்தளப் போராளிகள் கூட இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர்.         அடுத்து, ஏப்ரல் 14 டாக்டர் அம்பேத்கார் இன் பிறந்த நாளாமே? சன் டிவி , கே டிவி லயெல்லாம் ஒரு சிறப்பு நிகழ்ச்சி கூட இல்லையே, ஏன்?             ...

வந்தாச்சு புது ஐ-போன் [ IPhone 6 / 6+ ]

Image
வணக்கம் வாசகர்களே! நாம் இதுவரை பேசாத பகுதி கைப்பேசிகள் பற்றியும் அதன் தொழினுட்பங்கள் பற்றியதுமாகும். நமது கைகளில் அதிகமாக சாம்சுங் , நோக்கியா , htc , மைக்ரோமாக்ஸ் போன்ற கைப்பேசிகள் தான் இருக்கும். இவற்றுக்கு சமனான எண்ணிக்கையில் சாதாரண மக்களிடையே சீனத் தயாரிப்புகள் [ அல்லது தரம் / விலை குறைந்த வர்த்தக நாமம் அற்ற ] காணப்படுகின்றன. பென்ஸ் காரைப் போலவே பணக்காரர்களுக்கேயுரிய அம்சங்களுடன் வலம் வருவது தான் இந்த ஆப்பிள் இன் ஐ-போன். ஆப்பிள் ஐ-போன் வரிசையில் இந்த வாரம் வெளியாகி எல்லோரையும் முணுமுணுக்க வைத்திருப்பது தான் இந்த ஐ-போன் 6 மற்றும் 6 பிளஸ். அப்படி இருக்குமா , இப்படி இருக்குமா என்ற விவாதங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ஐ-போன் இன் புதிய பதிப்பு.   அழகிய வடிவமைப்பு, புதிய IOS 8 இயங்குதளம் , விரல் அடையாளப் பாதுகாப்பு என்று பல்வேறு அம்சங்களைத் தாங்கி வந்திருக்கிறது ஆப்பிளின் இந்தப் புதிய குழந்தை. என்னைப் போலவே உங்களில் பலருக்கும் இதெல்லாம் பார்த்துப் பெருமூச்சு விடுவதற்கான ஒரு அம்சமாகவே இருக்கும். விதிவிலக்கானவர்களும் இருக்கலாம்.     ...