Posts

Showing posts with the label காதல்

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?

Image
வணக்கம் வாசகர்களே! வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்? என்ன கேள்வி இது? இது கேள்வியல்ல. நான் அண்மையில் வாசித்து ரசித்த காதல் கவிதைகள் அடங்கிய நூலொன்றின் தலைப்பு. தபூ சங்கர் என்பவர் எழுதி 2008 இல் வெளியான நூல் இது. நூலுக்கு இடப்பட்டிருக்கும் தலைப்பைத் தவிர உள்ளே அடங்கியிருக்கும் எந்தவொரு கவிதைக்கும் தலைப்பிடப்படவில்லை. எல்லாக் கவிதைகளுமே உணர்வுகளின் வெளிப்பாடுகளைப் போலவே அமைந்திருப்பது நம்மை ரசிக்க வைக்கிறது. தனது நூலை தபூ சங்கர் இப்படி அறிமுகம் செய்து வைக்கிறார். இது வெறும்  புத்தகமல்ல. இதைத்  தொடுபவன்  காதலனாகிறான்  தொடுபவள்  காதலியாகிறாள். அறிமுகமே நம்மை ஈர்த்து நூலுக்குள்ளே இழுத்துச் செல்கிறது. இந்த வரிகளைத் தவிர தபூ சங்கர் தனியானதொரு முன்னுரையை நூலுக்கு வழங்கவில்லை. ஆயினும் கவிஞர் அறிவுமதி, நா.முத்துக்குமார்  போன்றோரின் நூல் மதிப்புரைகள் காணப்படுகின்றன.   இந்நூலானது இரண்டு பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டிருக்கிறது. முதல் பகுதி காதலன் தன் காதலைப் பற்றி கவிதை கூறுவது போலவும், இரண்டாம் பகுதி காதலி தன் காதலைப் பற...

நீ - நான் - காதல் - 04

Image
கருவிழியிரண்டு  கண்கொட்டாமல்  பார்க்குதென்னை பலப் பல கனவுகள்  காண்கின்றேன்  கயல்விழிகளில்  ஒரு பார்வைக்குள்  ஓராயிரம் பிரிவுகள்  வெட்கப் பார்வை  மோகப் பார்வை  அன்புப் பார்வை என  இன்னும் பல  எத்தனை தடவை  எப்படிப் பார்த்தாலும்  அத்தனையிலும் தெரிவது  அகத்தினில் தேங்கிக்கிடக்கும்  கற்கண்டு உள்ளத்தாள் கன்னியவள் காதல்!

நீ - நான் - காதல் - 03

Image
இரண்டு கவிதைகள் 01. சூரிய ஒளியைப் பெற்று சந்திரன் பிரகாசிப்பது போல என் இதயமும் உன்னிடமிருந்து காதலைப் பெற்று உயிர்வாழ்கிறது 02. நீ என்னைக் கட்டியணைத்து முத்தம் தந்தபோதுதான் புரிந்தது எனக்கு மட்டும் இனிப்புச் சுவை நரம்பு உதட்டில் தான் இருக்கிறதென்று

நீ - நான் - காதல் - 02

Image
நான் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த நடுநிசி வேளைதனில் என்னை யாரோ எழுப்ப முயல்கின்றனர். எதேச்சையாய் உறக்கம் கலைந்து விழித்துப் பார்த்த போது - என் விழிகளையே நோக்கியபடி என் அருகில் நீ! "அன்பே, இந்நேரத்தில் அருகில் வந்தமர்ந்து அழைத்ததேனோ?" வினவுகிறேன். "கண்ணாளனே உனைக் காணவே வந்தேன்" மறுமொழி தருகிறாள் என் மனம் கவர்ந்த தேவதை "கனவிலும் நாம் காதல் செய்வோமே, நடுநிசி தாண்டிய நள்ளிரவு வேளையில் நாடிவரக் காரணம் என்னவோ?" "கனவு என்பதே பொய்தானே? - ஆதலால் நிஜம் காண வந்தேன்" "சந்தேகிக்கிறாயா?" "ஐயோ....... இல்லை அன்பே, இல்லை...." படபடக்கிறாள் என் தேவதை "அச்சம் வேண்டாம் அன்பே, அருகில் அமர்ந்து ஆறுதலாய்ப் பேசு" என் வீட்டின் எழில் கொஞ்சும் பூந்தோட்டத்தின் மத்தியில் பூமரங்கள் சுற்றியிருக்க நமக்காய் ஒரு ஆசனம் நன்றாய் செய்திருந்தேன் ஆசனத்தின் மீது நான் என் மடி மீது நீ சம்பாஷிக்கத் துவங்குகிறோம் கைவிரல்களைக் கோர்த்தபடி "சொல் அன்பே - நான் செய்ய வேண்டியது என்ன?" "சந்தேகம...

நீ - நான் - காதல்

Image
மணிக்கணக்காய்  பேசியும் தீரவில்லை - நம்  பேச்சு  அலைபேசிக்கே  அலுத்திருக்கும் - ஆனால்  குறையாது  நமக்குள்ளே  பூத்திருக்கும் புதுச் சுகம்  சிரிப்பு பாதி கோபம் மீதி என  நகர்கின்றன  நம் நாட்கள்  அலுக்காத பேச்சும்  அனுப்பிக்கொண்டே இருக்கும்  குறுஞ் செய்திகளும்  நம் காதலின்  அன்றாட  அடையாளங்கள்  அலைபேசியிலேயே கொஞ்சிக் கொள்வதும்  எப்போது தான்  கல்யாணமோ என்று  ஏக்கப் பெருமூச்சு  விட்டுக் கொள்வதும்  நம் மேடையில்  அன்றாடம்  அரங்கேறுபவை  திங்கள் முகத்தாளை  திங்கள் ஒரு முறை  சந்திக்கும் போது  சர்க்கரையாய்த் தித்திக்கும்  நம் அன்றைய பொழுது  அந்தி மயங்கும்  வேளையில்   பிரியாவிடை பெற்று  'போய்வரவா' என்று  கேட்கும் போது  கேளாமலே  கண்ணீர்த் துளியிரண்டு  துளிர்த்து நிற்கும்  நம் இருவர் கண்களிலும்  உன்னை...